(Maniam Shanmugam)

முன்னாள் ஆசிரியரும், பன்முக ஆளுமை கொண்டவருமான தோழர் கலைவாதி கலீல் காலமான செய்தி துயரமானது, அதிர்ச்சிகரமானது.
சமூகப் பிரக்ஞை கொண்ட கலீல் எழுத்துலகில் தொடாத துறையே கிடையாது எனலாம். வாழ்நாள் முழுவதும் தாம் வரித்துக்கொண்ட முற்போக்கு சிந்தனையின் அடிப்படையில் அயராது செயற்பட்ட வண்ணமே இருந்தார். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. நாடு முழுவதும் எல்லா இனங்களிலும், எல்லாத் தரத்திலும் நண்பர்களே மிகுந்திருந்தார்கள்.