கோபம்

கோபம் என்பது ஒரு உணர்வு , சிலர் கோபத்தை மௌனமாக வெளிப்படுத்துவர், சிலர் நகைச்சுவையாக வெளிப்படுத்துவர்,சிலர் வன்முறையாக வெளிப்படுத்துவர், இவ்வாறு வெளிப்படுத்தும் தன்மையை பொறுத்து இதன் விளைவுகள் வேறுபடுகின்றன வன்முறையாக வெளிப்படுத்துதல் மற்றவர்களையும் காயப்படுத்தி எம்மை நாமே காயப்படுத்துவதாக அமைகின்றது.

கோபம் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் நாம் சரி என நினைக்கும் செயல் மாறுபாடாக நடக்கும் போது எமக்கு கோபம் ஏற்படுகின்றது, ஆனால் இந்த கோபத்தால் தீமைகளே அதிகம் என்பதை அனுபரீதியாக உணர்ந்து இருப்போம், உதாரணமாக கோபப்பட பின்பு உடல் சோர்வாக இருக்கும், மனம் பாரமாக இருக்கும்.

இதற்கான விஞ்ஞான காரணம் நாம் கோபப்படும் போது அதிகளவான இரசானமாற்றங்கள் உடலில் ஏற்பட்டு அது உடல் உறுப்புகளை பாதிப்படைய செய்கின்றது, 10 செக்கன்ட் கோபப்படுவதால் ஏற்படும் இரசான மாற்றங்கள் உடலைவிட்டு நீங்குவதற்கு குறைந்தது 8 மணிநேரமாவது தேவைப்படுகின்றது என ஆய்வுகள் சொல்கின்றது.

ஆகவே நாம் தொட்டதற்கும் கோபப்படுவதை தவிர்ப்பதன் மூலம் எம்மையும் எமது உறவுகளையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது கோப முகாமைத்துவத்தை தெரிந்து கொள்வது மட்டும் தான் சிறந்த வழி.

கோப முகாமைத்துவம் என்பது , கோபத்தை கட்டுப்படுவது அல்ல, கோபம் ஏற்படும் சந்தர்பங்களை முன்கூட்டி தெரிந்து கொண்டு, ஆரோக்கியமாக கையாள்வதே அதாவது எமது கோபத்தை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான அளவு வெளிப்படுத்துவதை வளர்த்துக்கொள்ளவது கோப முகாமைத்துவம் ஆகும்.

இவ்வாறு கட்டுப்படுத்தமுடியாமல் வன்முறை , மற்றும் ஆபத்தை உருவாக்கும் பட்ச்சத்தில் மனநல மருத்துவரை அல்லது உளவள துணையாளரை அணுகவேண்டும்.

ஆனாலும் ஒருவரால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர் முயற்சி எடுக்க வில்லை அல்லது, பொய் சொல்கிறார் என்று அர்த்மாகின்றது, காரணம் அவர் தன் கோபத்தை தன்னைவிட வலிமை கூடியவர்களிடத்தில் காட்டமாட்டார், அதாவது உயர் அதிகாரிகளிடமோ, காவல்துறையினருடமோ காட்டுவதில்லை. எனவே அனைவராலும் கோபத்தை கட்டுப்படுத்த முடியும், அதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும்.

(Doctor Vinayagamoorthy Uthistan)