
இந்தியாவிலேயே எழுத்துக்கள் முதன்முதலில் தோன்றிய, கல்வி அறிவினுடைய தலையாய நிலமாக விளங்கிய ஒரு மாநிலத்தில் நாம் இருக்கிறோம். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. 28 கி.மீ சுற்றளவிற்குள் 20 இடத்தில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துக்கள் இருக்கின்ற ஒரே நகரம் உலகத்திலேயே மதுரை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும்.