சாவகச்சேரி மக்கள் போராட்டம் ஒரு அறச் சீற்றம்

அரசு உதவிப் பணம் என்பதாக கல்வி பயின்று பட்டதாரிகளாக ஆசிரியர்கள், மருத்துவர், எந்திரவியலாளர்கள் என்றாக பல உயர் நிலையை அடைந்தவர்கள் நாம்.

இலங்கையில் தனியார் கல்வியின் ஆதிக்கம் இன்னும் அதிகம் உச்சம் பெறாத நிலையில் இந்த இலவச கல்விதான் உயர்கல்வி வரை எம்மை எடுத்துச் சென்று மருத்துவர்களையும், ஆசிரியர்களையும், இன்ன பிற சேவையாளர்களையும் உருவாக்கியது

சிறப்பாக மருத்துவத் துறையில் மகப் பேறு என்பது அரசு மருத்துவ மனையில் அதிகம் தங்கியிருக்கும் வாழ்கை முறைதான் எம்முடையது.

அந்த வகையில் எம் ஒவவொருவரதும் இந்தப் பூமிக்கான வருகை எம் தாயின் கருவறையில் இருந்து இலவசக் மருத்து உரிமைகளினால்தான் எமக்கு கிடைக்கப் பெற்றது.

எமக்கு உயிர் கொடுக்கும் ஜனனத்தின் ஆரம்பமே இங்குதான் ஆரம்பமாகின்றது.

சிறு காய்ச்சல், தலையிடி, காயம் எனப்தாக கிராமங்களை அண்டி உள்ள தனி ஒருவரின் மருந்தகங்களில் சிறிய தொகை வழங்கி ஆரோக்கியத்தை பெற்ற கைராசி வைத்தியர்களை கொண்ட சமூகத்தில் கல்வியிலும் மருத்துவத்திலும் அறம் சார்ந்த செயற்பாடுகளை அதிகம் கொண்ட சமூகமாகவே எம் சமூகம் இருந்து வந்திருக்கின்றது.

இந்த நடைமுறை இன்றும் பல இடங்களில் செயற்பாட்டிலும் உண்டு.

இதனால்தான் மருத்துவர்களையும், ஆசிரியர்களையும், கிராம சேவையாளர்களையும் இன்ன பிற சேவையாளர்களையும் இந்த சமூகம் பல தருணங்களில் தாம் நம்பும் தெய்வங்களாக போற்றினர்.

இது படிப்படியாக எப்போது அதிக மாற்றம் அடையத் தொடங்கியது….?

கொழும்பை மையப்படுத்தி அப்பலோ என்ற தனியார் மருத்துவமனை 50 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டதோ….. சென்றர் நேசிங் கோம்(தற்போதைய நொதேன்) என்று திருநெல்வேலியில் உருவானதோ அன்றுதான் இந்த மருத்துவத்துறையில் பணத்தின் ஆதிகம் உயிர்களின் விலையாக அதிகம் பேசப்படத் தொடங்கியது.

அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத சில சிகிக்சைகளை நாம் வழங்குகின்றோம் அதுவம் துரிதமாக என்றாக ஆரம்பிக்கப்பட்டு இலட்சங்களை பண வசூல் செய்து வைத்தியம் பார்தார்களே அன்று பணக்காரர்கள் மட்டும் இங்கு சிகச்சை பெறுதல் என்பதாக ஆரம்பித்து யுத்த காலத்தில் அதிகம் இடம் பெயர்ந்த புலம் பெயர் தேசத்து டாலர்களின் வருகை இந்த தனியார் மருத்துமனைகளை அதிகம் உருவாக்கவும் அங்கு சென்று சிகிச்சை பெறுதல் என்பதாகவும் அதற்கான பண அறவிடுதல் டாலர் சிந்தனையில் இருந்து உருவானதன் வெளிப்பாடுகளின் தொடர்ச்சியை நாம் எடுத்தும் நோக்க வேண்டும்.

அரச மருத்துவமனையில் பெயருக்கு வேலை செய்தல் என்பதாக சொல்லிக் கொண்டு தமது பிரதான கவனத்தை இந்த தனியார் நிறுவனங்களில் மருத்து மனைகளில் இந்த மருத்துவ சேவையாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவதற்கு அவர்களை இழுத்தும் சென்றது.

‘….உயிரைக் காப்பாற்றுங்கள் ஐயா..’ என்ற கதறுலுக்கு ‘….காசை முதலில் கட்டுங்கள் முயற்சிக்கின்றோம்….’ என்பதான பதில்கள் அதிகம் அப்போதுதான் ஆரம்பமானது

அந்தக் காலத்து ஆனைப் பந்திகளும் கங்காதரன்களும் ஏன் நாட்டு வைத்தியங்களும் மனிதாபிமானங்களை அதிகம் கடைப்பிடித்ததாக அறிய முடிகின்றது.

இந்தக் காலத்து காந்தநேசன்களும் இவ்வாறு செயற்படுவதாக அறிய முடிகின்றது

புலம் பெயர் தேசத்து நிதி உதவிகளும் அரசின் உலகளாவிய தொழில் நுட்ப வளர்ச்சிக் கேற்ப அரச மருத்துவமனைகளின் வளர்ச்சியும் மருத்து மனைகளின் தரங்களை உயர்த்தி வசதிகளை ஏற்படுத்தியதும் இங்கு நடந்துதான் இருக்கின்றது.

இதனோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு பணம் பண்ணும் மருத்துவர்களும் அதுவும் இலவசக் கல்வியைப் பெற்று மக்கள் பணத்தில் படித்துவிட்டு அதனை வேலைகள் அதிகம் செய்யாது கையூடாக தனக்கு சாதகமான தனியார் மருத்துவமனையிற்கு வாருங்கள் என்பதான அழைப்புகள் அங்கு மருந்துகளை அரசினர் மருந்தகங்களில் இருந்து கடத்திப் போய் விநியோகிக்கும் துறையும் அதிகம் ஆதிக்கம் பெற்றன

‘….ஐயா உயிரைக் காப்பாற்றுங்கள்….’ என்று அதி உயரத்தில் வைத்து பார்த்த இந்த தெய்வங்களில் சிலர் ‘….எருமை மாட்டில் வரும் அவனாகவும் மாறி விட்டது அவலங்கள். இந்த சமூகத்தின் பிறழ்வுகள்

அறம் சார்ந்து செயற்பட்ட சமூகம் இதனை ‘…எமக்கு ஏன் வம்பு…’ என்று தெரிந்தும் மௌமான இருந்த சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் குரல்கள் எழுந்த போது அவற்றை சமூகமாக இணைந்து ஸ்தாபன வடிவில் முன்னெடுத்துப் போராடவில்லை குரல் எழுப்பவில்லை என்பது கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

சில மாதங்களின் முன்பு இளம் கற்பிணிப் பெண் ஒருவரின் இறப்பு அவரின் மரணத்திற்கு காரணமான மருத்துவக் குழு ஒன்றின் அசட்டையினும் அதனைத் தொடரந்து விசாரணை வளயத்தில் இருந்து தப்புவதற்காக உடலைப் பெறுவதற்கு மருத்து நிர்வாகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் மிரட்டல் எல்லாம் சமூக ஊடங்களில் வந்தாலும் குரல் வழி ஒலி ஒளியாக வெளிப்படுத்தப்பட்டாலும் அதன் தொடர்ச்சியான மக்கள் எழுச்சி ஏற்படாத இடத்து அச்சம்பவம் ஒரு சிலரின் தனிப்பட்ட எதிர்பாகவே எழுந்து அடங்கியும் விட்டது.

இதனை ஒட்டி யாழ்ப்பாணத்து மருத்து வேலைகளை ஒழுங்கமைக்க உருவான சிவில் அமைப்பும் மருத்துவம் பார்க்க வரும் உறவினர்கள் இலவசமாக தங்குவதற்கு சாவகச்சேரி மசூதி மூலம் ஒழுங்குளை செய்து தருவோம் என்ற நல்ல விடயங்களையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

அதே போல் இலசவச மருந்து என்பதாகவும் ஒரு மட்டுப்படுத்தப்பட்;ட அளவில் அரச ஏன் சில கிராமத்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதில் சம்மந்தப்பட்ட அரச மருத்துவ மனை நிர்வாகம் தனியார் வைத்தியர்களை நாம் பாராட்ட வேண்டும் மக்களுக்கான நலன்கள் என்றாக தமது கடமைகளை ஓரளவு சிறப்பாக இந்த நிர்வாகத்திற்குள் செய்கின்றமையிற்காக

எந்த போராட்டமும் ஸ்தாபன வடிவம் பெற்று சமூகமாக எழந்து வராத வரைக்கும் அவை ‘அரகலய’ போல் அமெரிக்காவில் கறுப்பின பொதுமகனை பொலிஸ்காரார் வீதியில் வைத்து முழங்காலால் அமத்தி மூச்சை நிறுத்து கொhலை செய்வது என்றாகவும் காசாவில் தினம் தினம் கொன்றொழிக்கப்படும் குழந்கைள் பெண்கள் குழந்தைகள் என்பன இவ்வாறுதான் ‘மானுடத்தினால்’ மௌமான கடந்து சென்று அமுங்கிவிடும்.

இதற்கு எம்மைப் போன்ற பலரும் காட்டுக் குரல் கொடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எமக்கு ஆதரவாக ‘சரியானது தங்களின் குரல்….’ என்பதாக கூறிவிட்டு நமக்கு ஏன் வீணான சிக்கல் என்றாக ஒதுங்கும் சமூகப் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளே எம் சமூகத்தில் இன்று அதிகம் மேலோங்கி இருக்கும் நிலமைகளே தற்போது வெளிப்பட்ட இந்த சீர் கேடுகளை தடுத்து நிறுத் முடியாமையிற்கான முக்கிய காரணமும் ஆகின்றன.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறும் விடயங்கள் சில தினங்களாக அங்கு நடப்பவையின் வெளிப்பாடுகள் அல்ல

மாறாக அங்கு புரையோடி இருக்கும் பிரச்சசனை.

இது பல மருத்துவ மனைகள் கல்வி நிறுவனங்கள் திணக்கழகங்கள் என்றாக பல இடங்களிலும் வியாபித்திருக்கும் விடங்களின் ஒரு சிறு துளிதான்

இதனை பொதுமக்கள் சிவில் சமூகம் அறிந்திருக்கவில்லையா…? அல்லது வேறு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்வில்லையா….?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தமிழ் பிரதிநிதிகள் முன்பே அறிதிருக்கவில்லையா…?

ஒரு அருச்சுனாவின் குரல்தான் அவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதற்கு தேவையாக இருந்தததா…?

அப்படியாயின் இந்த பாராளுமன்றப் பிரநிதிகள் என் செய்கின்றார்கள்….? இப்படியான பாராளுமன்றப் பிரிநிதிகள் எமக்குத் தேவையா…? மக்களிடம் அரசிடம் இதனை கொண்டு செல்லவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இதனை அறிந்திராதபோல் இருப்பதுவும் தற்போது ஒரு இளம் மருந்துவர் அர்சுனா இதனை வெளிப்படுத்திய போது அதனை கையில் எடுத்து இதற்கான தீர்வை அடைவதற்கான வழி முறைகள் கையாளாது என் புகழ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வாக்கு தேடும் அரசியலில் மட்டும் தான் இவர்களது செயற்பாடுகளா….?

தமிழ் அமைச்ர்கள் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு என்றாக அரசியல்வாதிகள் இதற்கும் அப்பால் இலங்கை அரசின் கவனர் என்றா இவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்

நாட்டைக் கொள்ளை அடித்தவர்களின் ஒரு சிலரை நாட்டைவிட்டு தப்பி ஓடவிட்டு பின்பு பாதுகாப்பாக திரும்பி வருவதற்கு எல்லா வகையிலும் உதவியவரே அரசுத் தலைவராக இருக்கும் அரசில் இதற்கான நீதிகள் தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியயுமா…?

யாழ் பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் நிதிக் கையாடல் நிர்வாகச் சீர் கேடு என்பதாக பல வியடங்கள் ஆதாரங்களும் பல காலமாக பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டாலும் அவர்கள் சமூகத்தில் இன்று வரை பட்டையுடன் சிவபுராணம் பாடியபடி பதவியில் தொடர்வதும் இதன் ஒரு வடிவம்தான்

எங்கும் எதிலும் ஊழல் என்று மலிந்து கிடக்கும் எம்மைச் சுற்றி செயற்பாடுகளில் புனைூக்கு தனியாக மணி கட்டுவதை விட்டுவிட்டு சமூகமாக இணைந்து ஸ்தாபன மயப்பட்டு விழிப்புணர்வுகளை போராட்டகளை எதிர்ப்புகளை நாம் செய்தாக வேண்டும்.

ஒவ்வொருவரும் இவ்வாறான சமூக விரோத அறத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் ஆசிரியர்கள் பல்கலைக் கழக வேந்தர்கள் நிர்வாகிகளை சமூகத்தில் இருந்து பொதுவெளியில் நிராகரித்து அவர்களைத் தனிமைகப்படுத்துவதே இவர்களுக்கான உடனடித் தண்டனையாக இருக்க முடியும்

இதில் இருந்து ஆரம்பிப்போம்

இவர்கள் வேலை செய்யும் தனியார் மருத்து மனைகளையும் புறக்கணிப்போம்

மாறாக அவர் எம் ஊரவர் உறவினர் என்றாக மருத்துவர் விரிவுரையாளர் ஆசிரியர் எந்திரவிலாளர் என்பதாக அவருக்கு ஊருக்குள் மாலை போட்டு புராணம் பாடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

வாழைக்குலை வெட்டியவனுக்கு கொள்ளைகாரப் பட்டம் சூட்டி கம்பத்தில் கட்டி தண்டனை வழங்கியதை கொண்hhடிய சமூகம் அதனை சுயவிமர்சனப் பார்வையில் பார்த்து இந்த மனித உயிர்களுடன் எதிர்கால சந்ததியின் கல்வியில் விளையாடும் கொள்கைகாரர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதன் மூலதம் தண்டனைய ஆரம்பிப்போம்

அன்றெல் அர்சுனாக்களின் குரல்கள் கால ஓட்டத்தில் சேடம் இழுந்து ஒரு மேற்கத்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த இலங்கையில் யாழ் இந்துவில் பல்கலைகழைகத்தில் பெற்ற கல்வி ஏலவே சென்ற பலரைபோல இதுவும் எதிர்காலத்தில் ஆகிவிடும் அபாயம் உண்டு என்பதை நாம் எச்சரிக்கையாக பார்ப்போம்

இறுதியாக இந்த சமூகத்தில் இந்த எல்லா இலவசங்களையும் உரிமையாக பெற்று அங்கேயே தங்கி நின்று சிறந்த மருத்துவர்களாக ஆசிரியர்களாக எந்திரவியலாளர்களாக விரிவுரையாளர்களா இன்ன பிற சேவையாளர்களாக சேவை ஆற்றும் சமூகப் பொறுப்புள்ள அறம் சார்ந்து செயற்படும் பலரையும் நாம் வாழ்த்தி வணங்கியும் அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்தும் நிற்கின்றோம்

ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் கடற்படை முகாம் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை களத்தில் நின்று மருத்து உதவி செய்த மருத்துவர் பொன்னம்பலங்களையும் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கு புத்தளத்தில் மருத்துவராக செயலாற்றிய றஞ்சனிகளையும் இறுதி யுத்தத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் தமது உயிரையும் அர்பணிக்கதயார் நிலையில் நின்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த பல பத்து மருத்துவர்களையும் சத்திய மூர்த்திகளையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை இப்படியானவர்களை நாம் சமூகத்தில் அதிகம் அடையாளப்படுத்தி முன் உதாரணங்களாக கொள்வோம்