சுற்றுச் சூழலுக்கான மர நடுகை செயற்பாடுகள் நிறுத்தாது தொடருமாயின் அது அவரின் சாதனையாக மனித குலத்தின் மீட்சிக்கான விடயமாக அமையும். அதுவே அவரின் மரணத்தின் பின்பும் பேசப்படும் விடயமாக மரணத்தின் பின்பும் மனிதனுக்கு வாழ்வு உள்ளதை அர்த்மாக்கி இருக்கும்.
திரைபடங்களில் மேடைகளில் சீர் திருத்த கருத்துகளை தனது நகைச்சுவை பாத்திரப் படைப்பு மடை திறந்த பேச்சு ஊடாக பரப்பியவையும் பெரியாரின் மறைவிற்கு பின்னரும் கலைவாணரின் சிரிப்புகளுக்கும் பின்னரும் பேசப்பட்டதைப் போல் பேசப்படும்
விதைகள் காதிருக்கின்றன….
கன்றுகள் காத்ருக்கின்றன….
மரங்கள் நீரை எதிர்பார்த்திருக்கின்றன…
விருட்சங்கள் காய்களை கனிகளை நிழல்களை தரக் காத்திருக்கின்றன..
இவை அனைத்தும் பிராணவாயு தர காதிருக்கின்றன
ஆனால் நீதான் உனககுள் அவற்றை எற்க எம்மிடம் இல்லை
அதனால் மரங்களே கண்ணீர் விடுகின்றனர்
அங்கு கூடுக்கட்டி வாழும் பறவைகள் அழுது நிற்கின்றன
அணில்களும் தாவலை நிறுத்தி நிற்கின்றன
மனிதர்களாகிய நாங்கள் நிழல் தரும் மரத்தடியில்
உன் இழப்பை பேசி கண்ணீர் விட்டு நிழலில் இளைபாறுகின்றோம்
இன்னும் நாட்டப்பட வேண்டும் என்ற நிலமும் நீரும் காத்திருக்கின்றன
கரியமில் வாயுகள் காத்திருககின்ற மரங்களுகக்hன பிராணவாயுவை கொடுக்க
திரைப்பட நகைச்சுவையில் சீர் திருத்தத்தை சொல்லி வைத்தாய் சும்மா கிடைக்கவில்லை சின்னக் கலைவாணர் விருது
கலாமின் மரணம் உங்களைப் போனறவர்கள் மூலம் உயிர்தெழுந்து வாழ்ந்தது அதனால் கலாமும் மரணத்தின் பின்பும்
பேசப்படுகின்றார்கள் வாழுகின்றார் மக்களின் மனங்களில்
தங்களின் மரணத்தன் பின்பும் உங்கள் பணி தொடருமாயின்
அமைப்பு செயற்படுமாயின் நீங்கள் தனி மரம் அல்ல தோப்பு என்பது உணரப்படும் அதுவே மரணத்தின் பின்பும் உங்கள் வாழ்வை உறுதிப்படுத்தும்
அது நடைபெறும் என்று நம்பும் ஒரு தங்கள் சமூக மேப்பாட்டுக் கருத்தை இரசிப்வனாக… சூழலியலாளராக… மரங்களை நாட்டும் பச்சிலையாளனாக பிராணவாயுவை உலகிற்கு மாசற்ற உலகை கோரி நிற்கும் ஒருவனான நம்பி நிற்கின்றேன்.
உன் மரணத்தின் பின்னராக உன் நிலைவுகளை சுமக்க வலிகளை மறக்க அஞ்சலி மரியாதை செய்ய பலரும் மரம் நாட்டுவதாக வரும் செய்திகள் நீ தன மரம் அல்ல தோப்புதான் என்பதை நிறுவி நிற்கின்றன. இது தொடரட்டும்.
பலரும் அவருக்கான அஞ்சலியாக மரக கன்றுகளை நாட்ட வெளிக்கிட்டது அவரின் சிந்தனை செயற்பாடுகள் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுதியுள்ளதையும் அது தொடரும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது அதனால் அந்த கலைஞன் மனிதன் மரணத்தின் பின்பும் வாழ்வான்..
பாலசந்தர் கண்டெடுத்த ‘மனதில் உறுதி வேண்டும்’ முதற் சுழி இன்று எமக்கு ‘மனதில் உறுதி வேண்டும்” என்று சுபம் எழுதிச் சென்றுள்ளது…
அலுவலகத்தில் வேலை மறுபுறம் திரைபட அறிமுகம் மகனை இழந்தாய்… அழுந்தாய்….
மரங்களை நட்டாய் மனதை தேற்றிக் கொண்டு பலருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்தாய்.
இன்னும் வாழ் வேண்டியவர் வயது ஒன்று அதிகம் இல்லை
பொதுக் கொரனா பேரிடர் காவு கொண்ட அளப்பரிய உயிர்களில் தங்கள் உயிரும் அடங்கும்
மரங்கள் இருக்கும் வரை தங்கள் பெயரும் எங்கள் மனங்களில் நிற்கும்
மகத்தான சீர்திருத்தக் கருத்துகளையும் மர விதைகளையும் சேர்த்து விதைத்த கலைஞர் மனிதர் நீங்கள்
வயதில் இளமை என்பதை விட செயற்பாட்டில் இளமையாக வாழ்ந்தவர். சுற்றுச் சூழல் விடயத்தில் உங்கள் பங்களிப்பு மகத்தானது
விளம்பரத்திற்காக பாவிக்க முற்பட்ட தடுப்பூசி தங்களுக்கு விபரீதமாக மாறி இருக்கின்றதா..? என்ற மருத்துத்துறையினரின் கருத்துகளை மறுக்க மனம் ஏற்கவில்லை.
தடுப்பூசி மருத்துவ விஞ்ஞானத்தை இங்கு கேள்விக்குள்ளாகவில்லை. அதனை எவ்வாறு கையாளுதல் எனபதே கேள்விக் குறியாகி நிற்கின்றது. இந்த குழப்பங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
வாழும் போது சமூக விழிப்புணர்ச்சியை செய்து வந்தவர் தனது மரணத்தின் மூலமும் ஒரு மருத்துவ சமூக விழிப்புணர்சியை ஏற்படுத்திவிட்டு மரணித்திருக்கும் விவேக் ஒரு மகத்தானவர்தான். அவருக்கு எமது மரியாதை கலந்த அஞ்சலிகள்.
மனுஷ புத்திரனின் வரிகள் என்னையும் வாட்டுகின்றது…
என் கனவுகளில் வர சிறீதேவி இல்லை
என் காதில் ஒலிக்க எஸ்.பி.பி இல்லை
என் துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை
இப்படியே போனால்
இனி நான்
தனியாகத்தான்
சாகவேண்டும் போலிருக்கிறது
என்ற வரிகள் சிந்;தனையை அதிகம் தூண்டும் பேரிடர் காலத்து அவலங்கள்… அவதானக் குறைவுகள்….
கூடவே சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அம்மாவை இழந்த பின்பு ஏற்பட்ட உணர்வுகளும் எனக்கும் ஏற்படுகின்றன. எனக்கு இந்த மரணங்கள் வலியை ஏற்படுத்துகின்றன.
விழிப்பாய் இருப்போம்