சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பல்: அரசுகளை மீறிய தனி நபரின் செயற்பாடு

அது ரஸ்யா உக்ரேன் போர், ஹாசா மீதான இஸ்ரேலின் மனித அழிவிற்கான தாக்குதல், அமெரிக்க அதிபர் ட்ரம் இன் நாடுகளுக்கு எதிரான அதிரடியான தடைகள் வரிகள் என்பனவற்றை பின் தள்ளி முன்னுக்கு வந்த செய்தியாகி இருக்கின்றது.

அவரை மீட்டுக் கொண்டுவருவதற்கு தனி ஒருவர் எலோன் மஸ்க் (Elon Mask) இன் விண்வெளி தொழில் நுட்ப கலம் பாவிக்கப்பட்டு இருக்கின்றது.
உலக நாடுகளுக்கு அடையில் பலவேறு உடன்பாடுகளும் முரண்பாடுகளும் இருக்கும் சூழலில் கூட இந்த சர்வதேச விண்வெளி நிலையம் என்றாக நாடுகளின் கூட்டுழைப்பால் உருவாக்கப்பட்டது.

இதற்கும் அப்பால் சோவியத் அல்லது தற்போதைய ரஸ்யா அமெரிக்க என்பனவற்றிற்கு இடையில் துருவ அரசில் இருப்பினும் இந்த விண்வெளி ஆராய்ச்சி ஆய்வு மையம் என்பது ஒற்மையாக ஒன்றாக இணைந்து பணியாற்றும் புரிந்துணர்வை சூழலைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றது.

அதற்கான முக்கிய காரணம் இதற்கான தொழில் நுட்பம் பணம் இரண்டும் அது எவ்வளவு தொழில் நுட்டபத்தல் முன்னேறிற நாடாக இருந்தாலும் பணக்கார நாடாக இருந்தாலும் தனியாக இதனை செயற்படுத்த முடியாத சுமைகளை கொண்டிருப்பதே காரணம்.
ஆதனால் இணைந்த கரங்களாக செயற்படுவதே இதன் வெற்றிகளை மனித குலதிற்கு பொதுவாக வழங்க முடியும் என்ற யதார்த்த நிலையையும் உருவாக்கியுள்ளது.

இதனை பல நாடுகள் தனித் தனியாக சுமந்து அதில் கிடைத்த அனுபவங்களில் அடிப்படையில்தான் இந்த முடிவிற்கு தள்ளபட்டும் இருக்கின்றனர் என்ற அனுபவ உண்மை யதார்த்தமானது.

இப் பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சி அமெரிக்காவின் நாசா (NASA), ரஸ்ய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம் (Roscosmos), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகும்.

இதற்கும் மேலாக பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.

இதனுடன் ஏதோ ஒரு வகையில் உலகின் அனைத்து நாடுகளும் இதில் எழுதப்பட்ட எழுதப்படாத வகையில் பங்கு பற்றுகின்றன.

இந்த வகையில் இது சர்வதேசம் என்ற சொல்லாடலுக்குரிய முழுமையான அர்த்தத்தை தனதாக்கியும் கொள்கின்றது.

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் (Low-Earth Orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம்.

அமெரிக்க நாட்டின் நாசா அமைப்புக்கும் ரஸ்யாவின் ரோசவியகாசுமோசு அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அனைத்துலக விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வகமாகவும், விண்ணியல் நோக்ககமாகவும் மற்றும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது.

இங்கு செய்யப்படும் ஆய்வுகள் பொதுவாக விண் – உயிரியல், வானியல், வான் – மருந்தியல் மற்றும் உயிர் – அறிவியலை சார்ந்தே இருக்கின்றன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.

மேலும் இது சந்திரன், செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு இடைத்தங்கல் தலமாகவும், அவற்றை பேணுமிடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

பூமியில் மனிதர்களால் அடைய முடியாத ஈர்ப்பு விசையில்லா இடமாக இந்நிலையம் இருக்கின்றது.

அதனால் இதில் இருந்தபடி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு மனிதர்கள் தம்மை தயார்படுத்தல் என்பது ஒரு முக்கிய பயிற்சியும் ஆகின்றது.

“விண்வெளி வீரர்களுக்கு பூஜ்ஜிய ஈர்ப்புவிசை(Zero Gravity) நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது அவர்களது தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத்திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது.

“சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று மேற்கூறியவற்றை இந்திய விஞ்ஞானி சிவன் கூறுகின்றார்.

விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1 – 2 % எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர், ஆறு மாத காலத்தில் சுமார் 10 % வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.

(அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 0.5 % -1 % வரை மட்டுமே எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.)

குளிப்பது என்பது இங்கே சாத்தியமில்லை, திரவ சோப் கொண்ட ஈரமான துண்டைப் பயன்படுத்தி உடலைத் துடைக்க முடியும். தலைமுடியைக் கழுவ, தண்ணீர் இல்லாமல் வேலை செய்யும் சம்பூவைப் பயன்படுத்திவிட்டு, உலர்ந்த துண்டு கொண்டு துடைக்கலாம். கைகள், முகத்தை சுத்தப்படுத்த திரவ சோப் கொண்ட குழாய்கள் அல்லது ஈரமான துண்டு பாவிக்க வேண்டும் என்றான ஆய்வு மைய வாழ்க்கை.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால், தூங்கும் வீரர்கள் அங்குமிங்கும் மிதந்து சென்று, காயமடையக்கூடிய அபாயம் உள்ளதால், விண்வெளி வீரர்கள் தங்கள் உடலை, விண்வெளியில் தூங்குவதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறிய பெட்டிகள் அல்லது பைகளுக்கு புகுத்திக் கொண்டு தூங்க வேண்டும்.

இப்படியான ஒரு சூழலில்தான் சுனிதா வில்லியம்ஸ் ஒரு கிழமையில் திரும்புதல் என்பது; அவர் திரும்ப இருந்த விண்கலத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத தொழில் நுட்ப கோளறினால காரணமாக 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டது.

இறுதியில் அரசு அல்லது நாடுகள் கூட்டாக செயற்படுத்திருக்க வேண்டிய திரும்புதல் செயற்பாடு ஒரு தனியார் நிறுவனத்தின் பால் ஒப்படைக்கப்பட்டு அது எலோன் மஸ்க் (Elon Mask) இன் செயற்பாடால் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்தான உணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

ஒரு நாடு அது சாரந்த அரசுகள் என்பது அது எவ்வளவு முற்போக்கானது பிற்போக்கானது என்றாலும் அது மக்கள் திரள் சார்ந்தது. அதனால்தான் அரசு செய்யும் செயற்பாடுகள் மக்கள் சாரந்ததாக பார்க்கப்படுகின்றது.

ஆனால் இங்கு தனி ஒருவரின் செயற்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட ஒரு பாரிய திட்டம்(Mission) அந்த அரசு… நாடு அரசுகள் நாடுகள் அது சார்ந்த மக்கள் அந்த தனி நபருக்கு கீழானவர் என்றாக மேலாதிகம் செலுத்தப்படுவதற்கு வாய்ப்புகளை படிப்படியாக ஏற்படுத்தலாம்.

இந்த எச்சரிக்கைச் செய்தியைத் தாங்கித்தாக சுனிதா வில்லியத்தின் பூமி திரும்பல் என்ற திட்டம்(Mission) உருவாக்கி இருப்பது மனித குலத்திற்கான எச்சரிக்கையாக நாம் பார்த்தாக வேண்டும்.

Leave a Reply