அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.