சோஷலிச நாடாக இருந்த சோவியத் ரஷ்யாவில் ‘மதம்’ எப்படி இருந்தது?

ரஷ்ய சமஷ்டி கிரிமினல் சட்டம் 143-ஆவது பிரிவு – ‘மதச்
சடங்குகளைத் தடுத்தால்’ ஆறுமாதம் வரையிலும் கடுங்காவல் தண்டனை விதிக்க வகை செய்கிறது .

சோவியத் மக்களின் ஆவணங்களில் இன்னார் இந்த மதம் என்று மதம் குறித்த எந்தக் குறிப்பையும் நீங்கள் பார்க்கமுடியாது. அங்கு நாத்திகருக்கும் கடவுளை வணங்கும் பொதுமக்களுக்கும் தேவாலய பாதிரியாருக்கும் இஸ்லாமிய மௌல்விக்கும் ‘ சமமான பிரஜா’ உரிமைதான்.
திருச்சபைகள் – இஸ்லாமிய மற்றும் பிற மதக் கழகங்களின் உள்விவகாரங்களில் சோவியத் அரசு தலையிடுவதில்லை. அவை அனைத்தும் மத நம்பிக்கையுள்ள மக்கள் தன்னிச்சையாக வழங்கும் நன்கொடைகள்மூலம் சுதந்தரமாக இயங்கின.

திருச்சபை சட்டதிட்டங்களுக்கும் அனுமதி இருந்தது. ஒரே விதிவிலக்கு என்னவெனில்
சித்திரவதைகள் செய்வதும் , மக்களின் உடல் அல்லது உள்ளத்தைப் புண்படச் செய்தல் , அவர்களது குடியுரிமைக்கு குந்தகம் விளைத்தல் போன்றவற்றை நிகழ்த்தும் மதச் சடங்குகளுக்கு அனுமதியே கிடையாது.
இந்த சட்டப் பிரிவுக்கும் காரணம் உண்டு. ரஷ்ய மதப்பிரிவினர் சிலர் ‘புற உலகின் பாவ ஆத்மாக்களின் பிடியிலிருந்து’ மக்களைக் காக்க அவர்களை – குழந்தைகளை பாதாள அறைகளிலும், குகைகளிலும் அடைத்து வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் ரஸ்புடீன்களைப் படித்திருக்கிறோம்….
முக்கியமான விஷயம் இனிமேல்தான்….
மத அமைப்புகள் ஒருபோது அரசிலும் பணிகளிலும் தலையிடவேமுடியாது.

அரசாங்கம் வேறு. திருச்சபை வேறு. அரசாங்கம் வேறு. பள்ளிக்கூடம் வேறு. மதச்சார்பற்ற கல்விதான்.
ஆனால் திருச்சபைகளும் – முஸ்லீம் மதரஸாக்களும் மதக் கல்வியை போதிக்கும் உரிமை பெற்றுள்ளன – அதைச் செய்துவந்தன என்றால் நீங்கள் வியக்காமல் இருக்க முடியாது.

உதாரணம் சொல்லவா?
சோவியத் குடியரசில் ரஷ்யாவில் மட்டும் வைதிக திருச்சபைக்காரர்கள் ஐந்து மதக் கல்விக்கூடங்களை நடத்திவந்தனர் .
அங்கு முஸ்லிம்களுக்கான மதரஸாக்கள் உண்டு. அங்கு மதக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

புத்த மதப் பள்ளிகள் அங்கு இயங்கின என்பதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்!!!
இதேபோல் யூதர்களும், கேத்தலிக்கர்களும், லுத்தரன் சபையாரும் சுதந்தரமாக இயங்கி வந்தனர்..

சோவியத் யூனியனைச் சார்ந்த முஸ்லிம்கள் டமாஸ்கஸிலும் கெய்ரோவிலும் இஸ்லாமியக் கல்வி கற்றுவந்தனர். அதேபோல் பாப்திஸ்து மதப்பிரிவினர் பிரிட்டன், சுவீடன். கனடா நாடுகளின் பல்கலைக்கழகங்களில் மதக்கல்வி பயின்றுவந்தார்கள்.
சோவியத் நாட்டில் திருச்சபை வருமானத்துக்கு வரி கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மதப் பத்திரிகைகளும் – மத இலக்கியங்களும் பகிரங்க விற்பனையில் இருந்தன.
பல்வேறு நாட்டுக்கு இங்கிருந்து மதக் குழுக்கள் செல்வதும் – வெளிநாட்டு மதக்குழுக்கள் சோவியத்துக்கு வருவதும் தொடர்நிகழ்வுதான்.
ஆண்டுதோறும் மெக்காவுக்கு மதீனாவுக்கு செல்லும் முஸ்லிம்களைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?
உண்மையான மத சுதந்தரம் இதுதானே?

ஆனால்
சோவியத் அரசும் கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து விஞ்ஞானபூர்வ நாத்திக நம்பிக்கையை உருவேற்றி அதில் புதிய தலைமுறையிடையே பெருமளவு வெற்றியும் கண்டனர் என்பதே நிதர்சனம்.