நீர் முகாமைத்துவம்

(கணேஸ்)

இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.

கடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.

இப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.