(Thiagarajah Wijayendran)
ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற பெயருள்ள ஓர் அவ்ரோ அமெரிக்கர் வீதியில் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமான சம்பவம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று அவரை நினைவுகூர்ந்து ஒஸ்லோவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஐம்பது பேருடன் மட்டுமே நடக்கலாம் எனக் (கொரோனா தொற்றைத் தவிர்க்க) காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். வந்து கலந்துகொண்டோர் எண்ணிக்கை 14000வரை எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். எத்தனைபேர் வந்தாலும் அதில் நாம் தலையிட மாட்டோம் எனக் காவல்துறையினர் முன்கூட்டியே கூறியிருந்தனர். இத்தருணத்தில் சட்டம் ஒழுங்குதான் எமக்கு முக்கியம் - நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு அல்ல
என விளக்கம் கூறப்பட்டிருந்தது.