ஆனால் இந்த பரபரப்பு விடயங்களில் சில எப்போது மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருட்டினுள் புதைந்து… புதைத்து… சமான்ய மக்களை சென்றடையாமல் கடந்தும் சென்று விடுகின்றன. பலசாலியாக இருப்பவன் அல்லது அவ்வாறு தன்னை வரிந்து கட்டிக் கொண்டிருப்பவன் பணத்தின் மீது ஆளுமை செலுத்துபவன் இதனை முக்கியமாக தீர்மானிப்பவனாக இருந்தாலும் அறம் சார்ந்த சமூகம் ஏதோ ஒரு மூலையில் இந்த மறைக்கப்படும், மறுக்கப்படும் விடயங்களை ஒரு ‘வெடிப்பின்” மூலம் மேலேழுத்தி வெளியே கொண்டுவரத்தான் செய்கின்றது. இதனை நாம் மனித குல வரலாற்றுப போக்கில் பார்த்துக் கொண்டுதான் வருகின்றோம்.
இதற்கான அண்மைய உதாரணங்கள் கொரனா வைரஸ் பேரிடர் இல் கியூபாவின் மனிதாபிமான செயற்பாடுகளில் காண முடியும். சிறப்பாக பிரித்தானியாவின் உல்லாசப் பயணக் கப்பலில் வைரஸ் தொற்றுக்குள் உள்ளாகியவர்களின் உயிர் மீட்புபைத் தொடர்ந்து… நோயகற்றி அவர்களை பிரித்தானியா என்ற அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைத்தது என்பதிலிருந்து ஆரம்பித்தது. மற்றையது சீனாவுடன் இணைந்து செயற்பட்டு கொரனாவை வெற்றி கொள்ளப்பட்ட அனுபவங்களை இந்தாலியில் ஆரம்பித்து உலகின் பல நாடுகளுக்கு விருத்தி செய்து செயற்பட்டுவரும் மருத்துவ சேவையாகும்.
இது போன்ற விடயங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றிருந்தாலும் கடந்த
காலங்களில் வெளிக்கொணரப்பட்ட சம்பவங்களாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில்
எபோலாவை கட்டிற்குள் கொண்டு வந்தது. இயற்கை பேரிடருக்கு பின்பு
கெயிட்டியில் வாந்தி பேதியை முற்று முழுதாக ஒழித்தவையை என்று சிலவற்றைக் கூறலாம்.
இன்று இது போன்ற சம்பவங்கள் கியூபா தவிர்ந்த இன்னொரு நாட்டின் திறமையான சீரிய செயற்பாடுகள் மூடி மறைப்பிற்குள் உள்ளாகியிருக்கின்றது. அதனை வெளி கொணர்வதும், இதிலிருந்து உலகத்திற்கு பொருந்தும் ஒரு பொதுவான சாத்தியமான மருத்துவ நடைமுறையை கண்டறிவதுமே இந்த பதிவின் நோக்கம் ஆகும்.
தற்போதைய பேரிடர் கொரானாவில் இருந்து இன்று வரை ஒரு மரணத்தையும் தனதாக்கி கொள்ளாமல் மிகக் குறைந்த வைரஸ் தொற்றாளர்களை தன்னகத்தே கொண்ட வியட்நாம் என்ற நாடு செயற்பாடுகள் பற்றிதே.
வியட்நாம் அமெரிக்க
ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக கோ சி மின் தலமையில் போராடி தமது
சுயாதிபத்தியத்தை உருவாக்கி வெற்றி கொண்ட ஆண்டு 1975. சோசலிச கட்டுமானத்தை
உருவாக்க இன்றுவரை செயற்பாடுகளை தன்னத்தே கொண்டு செயற்பட்டுவரும் வளர்முக
நாடாகும்.
புரட்சி ஏற்பட்ட நாளிலிருந்து தமது நாட்டை
கட்டியெழுப்புவதில் பல சவால்களை கண்டு வந்தாலும் உலகத்தின் பலவேறு
நாடுகளுடன் நட்புறவை பேணி இதில் முன்னோக்கி நகர்ந்து வருகின்றது.
ஏற்றுமதிக்கான பொருட்ளின் உற்பத்தி (சிறப்பாக இலத்திரனியல் பொருட்கள், சாதாரண மக்கள் பாவனைப் பொருட்கள்), விவசாயம், கடற் தொழில் மூன்றையும் பிரதான வருவாயாக கொண்டிருக்கும் நாடு. அண்மைக் காலமாக உல்லாசப் பயணிகளின் விருப்பிடமாகவும் வியட்நாம் மாறி வருகின்றது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கபூர் போன்ற நாடுகளுடன் அதிக நோய் தொற்றாளர்களை சீனாவிற்கு அடுத்ததாக அதி வேகத்தில் தனக்குள் உள்வாங்கிய நாடு தென்கொரியா ஆகியன இன்றைய திகதிகளில் கொரனாவை சிறப்பாக கையாண்ட நாடுகளாக உலக மக்களால் அதிகம் கிலாகிக்கப்படுகின்றன. இவ் நாடுகளின் செயற்பாடுகள் வைரஸ் தொத்திலிருந்து மக்களை மீட்பதில் முன்மாதிரியாக கொள்ளப்படுகின்றன
ஆனால் இந்நாடுகள் எல்லாவற்றையும் விட சிறப்பாக செயற்பட்ட வியட்நாம் மேற்கூறிய நாடுகளை முன்மாதிரியாக கொள்ளப்படலாம் என்று பார்க்கப்படும் அளவிற்கு உலக மக்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. வியட்நாமின் இந்த வெற்றிகர நடவடிக்கையை மையப்படுத்தியே இந்த பதிவை தொடர முனைகின்றேன்….!
இத்தனைக்கும் மேற் கூறிய நாடுகளை விட இறப்பு விகிதம், தொற்று விகிதம் என்பனவற்றில் மிகவும் குறைந்த எண்ணிக்கையை தொடர்ந்தால் போல் பேணிவரும் நாடாக வியட்நாம் திகழ்ந்து வருகின்றது. கூடவே பண வசதிகளில் மேற்கூறிய நாடுகளை விட மிகவும் கீழ் நிலையிலும் உள்ளதும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.
வியட்நாம் கொண்டிருக்கும் அரசியல் தலமை, அதனை ஒட்டிய அரசுக் கட்டுமானம் கடந்த காலங்களில் அவர்கள் செயற்பட்ட பேரிடர் அணுகுமுறைகள், அவற்றில் கிடைத்த அனுபவங்கள், தங்களிடம் தொடர்ந்தால் போல் இருக்கும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் இந்த வெற்றிகரமான செயற்பாட்டை வியட்நாம் செய்து (வருவதற்கு) முடித்ததற்கு காரணமாகின்றன.
வியட்டநாம் கையாண்ட இந்த கொரனாவிற்கு எதிரான நடமுறைகளை உலக நாடுகளும் தத் தமது நாடுகளின் சூழலுக்கு ஏற்ப உள்வாங்கி செயற்படுவதன் மூலம் தமது நாடுகளை மட்டும் அல்ல உலகையே இந்த கொரனா பிடியில் இருந்து மீட்கலாம் என்பது எமது பார்வையாகின்றது.
மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அதற்கான கட்டுமானங்களை அந்தந்த நாடுகள் தற்போது கொண்டிருப்பது என்பது வியட்நாம் நாடு பெற்ற வெற்றி போன்ற பெறுபேறுகளை நாடுகள் பெறுவதற்கு மிக முக்கிய அடிப்படையான விடயமாக இருக்கின்றது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
அவ்வாறு தற்போது தமக்குள் கட்டுமானங்களை
இல்லாத நாடுகள் இந்த பேரிடர் காலத்திலாவது இதனை தற்காலிகமாக செயற்படுத்தி
கொனாரவை வெற்றி கொள்ள வேண்டும் என்பதே யதார்த்மானதாகும். ஏன் சரியானதும்
கூட
(மிகுதி நாளை தொடரும்….)