
(சாகரன்)
(உலக புத்தக தினத்தை முன்னிட்டு இப்பதிவை எழுதியுள்ளேன்)
அகரம் என்ற அரிச்சுவடியை மதிப்பிற்குரிய மூத்தவரின் மடியில் இருந்து தாம்பாளத்தில் உள்ள பச்சையரிசியில் விஜயதசமி அன்று என் பிஞ்சுக் கரம் பற்றி ஏடு தொடக்கிய நாளில் கற்கண்டு உடன் அ இலிருந்து ஃ வரையிலான எழுத்துக்களையுடைய அரிச்சுவடிதான் நான் பெற்ற முதல் புத்தகம். இது பனை ஓலையிலான் ஆனது. ஒரு பக்கமாக இருந்தாலும் இது இன்றி நான் இல்லை.. நாம் இல்லை. இன்றளவிற்கு மிகப் பெரிய பொக்கிஷமாக… முதல் புத்தகமாக இதனை நான் என் வாழ்நாளில் கருதுகின்றேன்.