பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம் வீழ்ந்துள்ளதா?

இந்த நிலையில் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவா, அல்லது நாங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்துவதற்காகவா என்று முரண்பட்ட கூற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மூன்று முக்கிய கேள்விகளை FactCheck.lk தெளிவுபடுத்துகின்றது.

கேள்வி – 01: அரசாங்கங்கள் ஏன் கடன்களை பெறுகின்றன?

அரசாங்கங்கள் மூன்று பிரதான காரணங்களுக்காக கடன்களை பெறுகின்றன. முதலாவதாக பிரதான நிதி பற்றாக்குறையை நிவரத்தி செய்வதற்கு. இரண்டாவது கடன்கள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு. மூன்றாவதாக முதிர்வு கடன்களை அடைப்பதற்கு.

அரசாங்கம் ஒன்று நிறைவேற்றவேண்டிய இந்த மூன்று காரணங்களையும் ஒன்றாக உற்றுநோக்குவோமாயின் அதுவே ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் மொத்த மதிப்பு ஆகும். இதனையே GFN (Gross Financing Need) மொத்த நிதித்தேவை என அழைக்கின்றோம்.

கேள்வி – 02: 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் கடனாக பெற்றுக்கொள்ளவிருந்த தொகை எவ்வளவு?

GFN (Gross Financing Need) க்கு அமைய FactCheck.lk இன் கணக்கீட்டிற்கு ஏற்ப 2024 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் தொகையானது 3,670 பில்லியன் ரூபாவாகும்.

கேள்வி – 03: 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் கடனானது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமானதா?

அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் பின்வரும் தேவைகளுக்காக வரையறைகளை விதிக்கின்றது.

(1) மொத்த நிதித்தேவை மற்றும்,

(2) கடனின் அளவு அதிகரிப்பு – குறித்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடனின் மொத்த தொகை.

அரசாங்கம் வரையறைக்கு அப்பால் சென்று கடன் பெற்றுக்கொண்டுள்ளதா அல்லது பெற்றுக்கொள்ளவில்லையா என்பது தொடர்பில் ஆராயப்படும். 2024 ஆம் ஆண்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் தேசிய ரீதியாக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிட்ட விடயம் ஆராயப்படும்.

மொத்த நிதித்தேவையை (GFN) சரிபார்த்தல்

2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு (BE24) அமைய, நடப்பு நிதியாண்டுக்காக அரசாங்கம் நிர்ணயித்த மொத்த நிதித் தேவையின் எல்லையானது 3,670 பில்லியன் ரூபாவாகும். நிதியமைச்சின் தரவுகளுக்கு அமைவாக கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் 1,903 பில்லியன் ரூபா கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் வரையறையை அதாவது 3,670 பில்லியன் ரூபாவினை பெற்றுக்கொள்வதற்கு ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதிக்குள் மேலும் 1,766 பில்லியன் ரூபாவினை கடனாக பெறும் தகுதி அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

ஒக்டோபர் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள கூடிய கடன் அளவினை Factcheck.lk மதிப்பாய்வு செய்துள்ளது. அதற்கமைவாக குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் பெற்றுக்கொள்ள கூடிய கடனின் அளவு 1,612 பில்லியன் ரூபாவாகும்.

இந்த கடன் தொகையானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1,766 பில்லியன் ரூபாவினை விட குறைவான தொகையாகும். அது மாத்திரமின்றி வரவு செலவு திட்டத்தின் வாயிலாக வரையறுக்கப்பட்ட தொகைக்குள் இது அடங்கும். BE24 உடன் ஒப்பிடுகையில் T-பத்திரங்கள் (T-bonds) மீதான வட்டி செலுத்துதல் குறைக்கப்பட்டதன் காரணமாக குறைவான கடன் தேவை என கருத முடியும்.

முடிவு: 2024 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த நிதித் தேவைக்காக வரவு செலவு திட்டம் வரையறுத்துள்ள கடன் வரம்பினை மீறி மேலதிகமாக கடன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்க முடியாது.

கடன் பிரிவுகளை (DS) சரிபார்த்தல்

மொத்த நிதி தேவை வரம்பிலிருந்து, திருப்பி செலுத்த எதிர்பார்க்கப்படும் கடனை கழிப்பதன் வாயிலாகஅரசாங்கம் கடன் அதிகரிப்பில் எதிர்பார்க்கப்படும் வரம்பினை தீர்மானிக்க முடியும்.

முதிர்ச்சியடைந்த கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் கடனை பெற்றிருந்தால் கடன் பிரிவுகளில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்காது. எனினும் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடனை பெற்றுக்கொள்ளுமாயின் அது கடன் பங்கின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அமைய, துண்டு விழும் தொகையானது 2,401 பில்லியன் ரூபாவாக அமையும் என அரசாங்கம் கணித்துள்ளது. அந்த வகையில் கடன் பிரிவுகளிலும் (DS) சமமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் பங்கானது 965 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் DS ஐ அதிகரிப்பதற்கான வரவு செலவுத் திட்ட வரம்பிற்குள் அரசாங்கத்திடம் இன்னும் 1,445 பில்லியன் ரூபாய் உள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நிதித்தேவையை ஈடுசெய்வதற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான வரவு செலவு திட்டத்தில் எஞ்சியிருக்கும் 1,445 பில்லியன் ரூபாவில் 1,030 பில்லியன் ரூபாவை உள்நாட்டு கடன் வாயிலாகவும், 415 பில்லியன் ரூபாவினை வெளிநாட்டு கடன் வாயிலாகவும் நிதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்டோபர் முதல் நவம்பர் வரை உள்நாட்டு கடன் பங்கானது 371 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. டிசெம்பர் மாதத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் தேசிய நிதி வரம்பு 659 பில்லியன் ரூபாய் ஆகும். அந்த வகையில் 659 பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

முடிவு: டிசெம்பர் மாதத்திற்குள் குறித்த தொகையினை கடனாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் காணப்படுவதால், 2024 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு கடன் வரவு செலவு திட்டத்தின் வரம்பிற்குள் காணப்படுகின்றமை தெளிவாக புரிகின்றது.

ஒட்டுமொத்த நிதித்தேவை மற்றும் கடன் பங்கு அதிகரிப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் குறித்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகளை கவனத்தில் கொள்ளும் போது 2024 ஆண்டிற்காக மேலதிகமாக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய அபாயம் அரசாங்கத்த்திற்கு இல்லை என்பது தெளிவாக புரிகின்றது.   

Leave a Reply