மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும்

(மௌனகுரு)

பண்பாடு மிக வலிமையான ஒன்று. பண்பாட்டை நிர்ண யி ப்பதில் ஒரு சமூகத்தின் பொரு ளியல் அமைப்பும் கருத்தியல் அமைப்பும் பிரதான பங்கு வகிக்கின்றன.
கருத்தியல் அமைப்பிலே ஒன் றுதான் சமயமும் சமயச் சடங்குகளும் சமய நம்பிக்கைகளும்
கருத்தியல் என்பது சிறுவயதிலிருந்து நமது ஆழ் மனதில் பதிந்து சூழலால வளர்வது மாற்றம் பெறுவது
மட்டக்களப்பு வாழ் தமிழர்களுள் ஒரு சாராரின் கருத் திய லை யும் உளவியலை யும் வரலாற் றையும் அறிய வேண்டுமா னால் அங்கு வருடா வருடம் நடைபெறும் கோயில் சடங்கு களை அறிதல் வேண்டும் அதன் நடை முறைகளை அறிய வேண்டும்