திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் சூழ்ச்சி குறித்து தமிழகத்தில் வன்மையான பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தஞ்சைப்பகுதியில் ஒரு பார்ப்பனப் பெண்மணி தனது உடைமைகளையெல்லாம் தாழ்த்தப் பட்டோருக்கு பகிர்ந்தளித்து சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார். அவர்தான் மணலூர் மணியம்மாள்.