1. நடப்படும் மரங்கள் உயிர்ப் பல்மைத்துவத்திற்கு உதவுவதாய் இருக்கவேண்டும் .அதாவது இதன் இலை, காய், கனி , விதை என்பன மனிதர்களும் ஏனைய விலங்குகளும் பறவைகளும் உண்ணத் தகுந்தவாய் இருக்கவேண்டும்
2. இம்மரம் உதிர்க்கும் இலைகள் இலகுவில் மக்கி மண்ணை வளப்படுத்த வேண்டும்
3. நடப்படும் மரம் மனிதர்களுக்கோ ஏனைய விலங்குகளுக்கோ ,சுற்று சூழலுக்கோ பாதிப்பு தராத மரங்களாக இருக்கவேண்டும் .
4. அந்தந்த பிரதேசத்திற்கு , அந்தந்த மண்வகைக்கு ஏற்ற மரங்களை தெரிவு செய்து நடவேண்டும்
5. எண்ணெய் வித்து தரும் மரங்களை அதிகம் நடவேண்டும்
6. எமது பிரதேசத்துக்கு ஒவ்வாத விதேசி மரங்களை அறவே தவிர்க்கவேண்டும்
7. தெருவோரம் , வீடு , பாடசாலை , கோவில் , மயானம் , நெடும்சாலை ,எனும் போது அவ்விடத்திற்கு தோதான மரங்களையே தேர்ந்து நடவேண்டும்
(மிகுதி நாளை….)