மழைநீர் சேமிப்பு பற்றி நம்மவர்களும் தொடர்ந்து பேசிக்கிட்டேதான் இருக்கிறார்கள். அவர்கள் கூறும் மழைநீர் சேமிப்பு என்பது வீட்டின் கூரையில் வழிந்தோடும் மழைநீரை ஒரு தொட்டியில் பிடித்து வைப்பதாகும். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் பெய்யும் மழைநீரை சேமிப்பது என்பது எந்தளவுக்கு நடைமுறைக்கு உகந்த திட்டம் என்பதை எவரும் விளக்கியது கிடையாது.
நம் முன்னோர்கள் ஏற்கனவே கற்றுத் தந்துள்ளார்கள். கிணறு, குளம், குட்டை, கேணி எல்லாமே மழைநீர் சேமிப்பு மைய்யங்கள் அல்லவா!நடிகர் அமீர்கான் மற்றும் கீரன் ராவ் தம்பதியினர் PAANI FOUNDATION என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, மிகவும் குறைந்தளவு மழை வீழ்ச்சி கொண்ட மகாரஸ்ரா மாநிலத்தில் வரட்சியான கிராமங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்துள்ளார்கள்.
அந்த நிறுவனம் இதுவரை உருவாக்கிய நீர் நிலைகளின் மொத்த கொள்ளளவு 550 பில்லியன் லீட்டர்கள். 220,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவு நீர். அது நான்கு இரணைமடுக் குளங்களுக்கு சமனானது. அவர்களின் இந்த சாதனைக்கு ஊர்மக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பலரும் உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகணும்.
(Rubasangary Veerasingam Gnanasangary)