கடன் வாங்கிய பின்பு அதற்கான வட்டி குட்டி என்பதாக நாம் வாழும் நிலங்களை அடகாக கேட்க்கும் கடன் வழங்குவோரின் சூழ்ச்சிகள்.
உலகிற்கு அதிகம் உணவுத் தானியங்களையும் எரிபொருள் சக்தியையும் வழங்கி வந்த உக்ரேன் ரஸ்யா இடையே நிறுத்த முடியாது…. நிறுத்தாமல் தொடர்வதற்காக ஜி 7 என்று கூட்டம் போட்டு டாலர் வழங்கும் நிலைகள்.
50 வருடங்களுக்கு மேலாக தமது வாழ்நிலத்தில் ஒரு ஓரமாக இருப்பதற்கு இடம் அளித்தவர்கள் பாரம்பரிய குடியிருப்புகளை மக்களை அழிப்பதற்கான யுத்தங்கள்….. அது பலஸ்தீன மக்கள் என்பதாக
நிவாரணப் பொருட்களை வழங்குபவர்களையும் விட்டுவைக்காத குண்டு வீச்சுகள்.
காயம் அடைந்தவர்களை குழந்தைகளை பெறுபவர்கள், பெற்ற குழந்தைகளை அழிக்கும் யுத்த களம் ஒரு புறம்.
மனிதாபிமான உதவிகளாக சில மில்லியன்கள் அடுத்த தீர்மானத்தில் யுத்தத்திற்கு ஆதராவாக அதனைவிட பல மடங்கு நிதி உதவியை வழங்கும் அமெரிக்க பொலிஸ்காரத் தன்மை.
உலகமே என்ன செய்வது எனறு தெரியமால் விழி பிதுங்கி நிற்கின்றது.
பணவீக்கம் பொருட்களின் விலை ஏற்றம் வாழ்கைச் செலவு அதிகரிப்பு என்றாக சம்பள உயர்வற்ற வாழ்க்கை ஆனால் யுத்தங்களை தொடர்வதற்கும் மக்களுக்கான உற்பத்திகளை அழிப்பதற்குமான குண்டுகளை வாங்கவும் வழங்கவும் தயாராக இருக்கும் ஏகாதிபத்தியங்கள்.
மத்தியதர வர்க்கம் மேல்தட்டு கீழ் தட்டு என்ற வேறுபாடு இன்று மாதத்தின் மூன்றாவது கிழமையிற்கு முன்பாக தமது வீட்டின் கஜானாவில் ஏதும் இல்லாமல் போகும் வறுமைகள்.
மூன்றாவது பொருளாதார வல்லரசாகும் என்ற சாகசங்கள் அதானி அம்பானி என்றாக மட்டும் உலகின் முதல் பணக்காரர் ஆக்கும் இந்திய பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள்.
இதனைக் கேள்வி கேட்பவர்கள் பாகிஸ்தான் உளவாளிகள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் இஸ்லாமியர் என்பதாகசிறுபான்மையினரை ஒடுக்கும் கோசங்கள்.
இதற்கும் அப்பால் மணிப்பூர் போன்ற பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்து வரும் கோலங்கள்.
இவை அனைத்திற்கும் எதிராக ஓரளவிற்கு ஒற்றுமையாக குரல் கொடுக்கும் சமூக நிதிகள் இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் ஜனநாயக வாதிகள் என்பதான பயணங்கள் வல்லரசுக் கனவு இருந்தாலும் 40 நாட்களுக்கு மேலாக ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் கூத்துகள்.
பொருளாதார மீட்சியை ஏற்படுத்திவிட்டார் என்று நீண்ட வரிசையை நிறுத்திவிட்டேன் என்று கடன் மட்டும் வாங்கி நாட்டை நடத்தும் ரணில் விக்கிரமசிங்காகள்.
இதற்கு ஆதரவான ராஜபக்ஸாகள்.
மக்கள் கையில் காசு இல்லாவிட்டால் பொருட்கள் வாங்க தெருவிற்கு வரமாட்டார்கள் அப்போ எப்படி நீண்ட வரிசை ஏற்படும் என்பதை புரிய மறுக்கும் தலை நகர் மேலதட்டு மக்களின் சமூக ஊடகப் பதிவுகள்.
இவர்களுக்கு தெரியாது கிளிநொச்சியில் குருநாகலில் சம்மாந்துறையில் பொருளாதார சிக்கலால் வாழ்கையை கொண்ட நகரத்த முடியாது மன அழுதத்தினால் தற்கொலை செய்வர்களின் எண்ணிக்கை.
உனக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலில் இருப்போம் என்று பல கோடி பெறுமதியான சாராயத் தவறணையிற்காக அனுமதிப் பத்திரத்தை ரணில் இடம் வாங்கிய தமிழ் தலமைகள்.
இவர்கள் எப்படி தமிழ் மக்ளின் பிரச்சனைக்கு தீர்வு தருவார்கள்.
சாரயத் தவறணையை மூலை முடுக்கொல்லாம் போட்டு காசு பண்ணப் பார்க்கும் இவர்கள் எவ்வாறு போதைப் பொருள் பாவனைக்கு எதிரான செயற்படுவார்கள்.
நாட்டை விட்டு விசிர் விசாவில்(Visit Visa) மேற்கத்தய நாடுகளுக்கு ஓடுவோம் என்று இலங்கையில் இலவசக் கல்வயைப் பெற்று வேலையில் அமர்ந்து ஓரளவிற்கு வாழ்கையை ஓட்டியவர்களும் நாட்டை விட்டு ஒடுதலே ஒரே தீர்வு என நினைக்கும் தமிழ் சிங்கள் ஒற்றுமை செயற்பாடுகள்.
இவ்வளவும் நடக்க தென் அமெரிக்காவிலும் மேற்கு ஆபிரிக் நாடுகளிலும் தமது வழங்களை ஏகாதிபத்தியங்கள் இனியும் சுரண்ட அனுமதிக்க மாட்டுடோம் எப்போதும் போல் நீங்கள் எமது மக்களின் எதிரிகள் என்பதான போராட்ட ஆட்சி மாற்றங்கள் நகர்வுகள்.
இவைதான் இன்றைய உலக நடப்பு இதில் தொழிலாளர்களாக உழைப்பாளிகளாக வேலையாட்களாக 8 மணி நேரங்களைத் தாண்டி வாழ்வதற்காக வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களாக நாம் ஒருங்கிணைந்து எமது குரலை போராட்டத்தை செய்தாக வேண்டும்.
நாம் இழப்பதற்கு ஏதும் இல்லை எனது உயிரைத் தவிர என்ற உணர்வு எமக்கு அதிகம் ஏற்பட்டும் வருகின்றது எனவே போராடுவோம்.
மாறாக பனை மரத்தில் ஏறி நின்று மே தினத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்திய ‘கலைஞர்’களை காண்பதற்காக நாம் ஒன்று கூடி பனை மரத்தில் இருந்து கித்துள் மரத்தில் இருந்து முறிந்து விழுவதல்ல எமது வேலை.
எதிர்காலத்தை கட்டியமைக்க வலுவுள்ள இளைஞர்களே போதையைத் தவிர்த்து சிந்தியுங்கள் செயல் ஆற்றுங்கள்
‘அமைப்பாக’ இல்லாமல் உதிரிகளாக பாலஸ்தீன மக்களுக்காக பல்கலைக் களகம் கல்வி நிறுவனங்களில் முகாம் அமைத்து அமெரிக்கா, கனடா என்று போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரளவளித்து அவர்களின் கைதுகளையும் தடுத்து உலக சமாதானத்திற்காக உழைக்கும் மக்களின் உயர்விற்காக போரடுவோம்
இதுவே எமது மேதின செய்தியாகும்.
போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றி அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வோம் சம உரிமை பெற்று.
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.