யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.
விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.
பிறகு யானை அங்கிருந்து பின் வாங்கி விடும். இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது.
யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.
‘’யானை ஒருநாளைக்கு 250 கிலோ முதல் 400 கிலோ வரை உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.
நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…
ஆனால் இந்த திட்டத்தை யானை வழித் தடங்களில் செய்யக் கூடாது.
நன்றி : Uma Ramachandran #Scinews