யாழ்ப்பாணத்தில் கொரோனா பற்றிய இருவரின் உரையாடல். உண்மைச் சம்பவம்.


A- என்ன சொல்றியள், அரசாங்கம் எப்படி பரப்பலாம்?
B-உந்தப் பொலிசும் ஆமிக்காரங்களும் கொண்டுவந்துதான் இஞ்சை கொரோனாவை பரப்புறாங்கள்!
A- அவங்களென்ன கொரோனாவை கையிலை கொண்டுவந்து நெல்லு எறிஞ்சமாதிரி எறிஞ்சுபோட்டா போறாங்கள்? அதாலை அவங்களுக்கு என்ன லாபம்? அதுக்குத்தான் உங்களை maskஐ போட்டுக்கொண்டு போகச்சொல்லியும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசாங்கம் சொல்லுதே!
B- அரசாங்கம் அப்பிடிச் சொன்னாலும் அதுக்கெல்லாம் வெளி நாடுதான் தம்பி காசு குடுக்குது எல்லாரையும் கொல்லச்சொல்லி.
A-வெளி நாடு காசு குடுக்குதா? எவ்வளவு குடுக்குது!
B- ஒராளுக்கு பரப்பினால் பத்து லட்சம் குடுக்குதாம்!
A-அதென்ன, அப்பிடியெண்டால் இலங்கை முழுதும் பரப்பினால் ….?
B-சாச் சாச் சா…… அவன் தன்ரை இடத்திலை ஏன் பரப்பப்போறான்!
A-அப்பென்ன, யாழ்ப்பாணத்திலை மட்டுமா?
B-வேறை என்ன?.. தமிழ் சனத்தைத்தான் கொல்லப்போறான்!
A-அப்ப உங்கடை ஆக்களெல்லாரையும் வெளிநாட்டிலை வைச்சே கொல்லப்போராங்களே!…
உங்களுக்கு இதை ஆர் சொன்னது?

B-ஆர் சொல்லவேணும், உப்பிடித்தான் உங்கை எல்லாரும் கதைக்கினம்!

இதுதான் இன்றுள்ள யாழ்ப்பாணப் புத்தி. இங்குள்ள தமிழ் சமூகத்தின் பெரும்பாலானவர்களின் கொரோனாபற்றிய அறிவும் உலகத்தைப்பற்றிய அதிகபட்ச புரிதலும் இதுவே.
இவர்களுக்காகவும் இவர்களை நம்பியும்தான் நாம் போராடினோம், இத்தனை உயிர் தியாகங்களையும் செய்தோம். அதில் தனி ஈழம் வேறு!
பொறியை வைத்தவர்கள் போகும்போதாவது அதை அகற்றிவிட்டு போயிருந்தால் அல்லது கொண்டுபோயிருந்தால் அடுத்த சந்ததியையேனும் அதற்குள் அகப்படாமல் காப்பாற்றியிருக்கலாம்.
என்ன செய்வது, இவர்களை வளர விடாமல் இதுபோன்ற மூடத்தனத்தை திணித்து மூளைச்சலவை செய்த உலகப்புகழ் பெற்றவர்கள் தப்பி விட்டார்கள், விதைத்தவன் எவனோ அறுவடை செய்யவா நாங்கள்? இது எங்கு போய் முடியப்போகிறதோ!