யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின் கல்வி அறிவு மோசடிகள்

கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகள் என இக்கட்டுரையில் கருதப்படுவது யாதெனில் உதாரணத்திற்கு பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி பிரதி பண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது (Plagiarism) உலகளாவிய ரீதியில் மோசடிக்காரர் பிரசுரிக்கும் போலி சஞ்சிகைகளில் பணம் கொடுத்து தனியாக (Sole Author ) அல்லது பிற மோசடி ஆசிரியர்களுடன் சேர்ந்து இணை ஆசிரியராக (Co – Author) கட்டுரை பிரசுரிப்பது (Publications in Predatory Journals) பிற கல்விமான்களுக்கு அல்லது தமது சகாக்களுக்கு பணம் கொடுத்து கட்டுரை எழுதி தமது பெயரில் பிரசுரிப்பது (Impersonation/ Collusion), நிஐமான அறிவுசார் சஞ்சிகைகளினால் சக மதிப்பாய்வுக்கு (Peer Review) பின் பிரசுரிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில்  பணம் கொடுத்து இணை ஆசிரியராக தம்மை இணைத்துக்கொள்வது,  தமது மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை (Dissertations) திருடி ஆசிரியர்கள் தமது பெயரில் தனியாக சுயமாக அல்லது இணை ஆசிரியராக பிரசுரிப்பது அல்லது நேரில் இணையவழியில் கருத்தரங்குகளில் பேசுவது (அறிவுச் சொத்துரிமை திருட்டு -Theft of Intellectual property Rights)  மற்றும் தமது மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை களவாடி தமது ஆய்வாக காண்பித்து அரசாங்கம் மாதாமாதம் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் நிறைவேற்று அதிகார தர கல்விசாரா ஊழியருக்கு (Executive Grade non Academic Staff) வழங்கிவரும் ஆராய்ச்சி கொடுப்பனவினை (Research Allowance) திருட்டுத்தனமாக பெற்றுக்கொள்ளல் போன்றவையாகும். 

ஒரு பாடசாலையின் அல்லது பல்கலைக்கழகத்தின் பிரதம பங்குதாரர்கள் (Stakeholders) அவற்றின் மாணவர்களே ஆவர். ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்காகவே பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அரசாங்கத்தினால் (பொதுமக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு) அல்லது தன்னார்வ அமைப்புகளினால் (தனிநபர்களின் நன்கொடைப் பணத்தினைக் கொண்டு) அல்லது தனியார் நிறுவனங்களினால் (தனிநபர்களின் மூலதனத்தைக் கொண்டு) நிறுவப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களிலோ தொழில் புரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கூலிக்கு வேலை செய்யும் மாணவர்களின் சேவகர்கள் என்பதனை அனைவரும் (குறிப்பாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்விசார் ஊழியர்கள்) புரிந்துகொள்ள வெண்டும். ஆகவே ஒரு பல்கலைக்கழகத்தின் அனைத்து தீர்மானங்களிலும், விடயங்களிலும் மாணவர்களின் நலனையே பிரதானமாக கருத்தில் கொள்ள வேண்டும்.     

இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுள் பெரும்பான்மையோர் தமது மாணவர்களுக்கு இழைத்து வரும் துரோகங்களை களைந்து யாழ் பல்கலைக்கழகத்தினை அதன் சிதைவிலிருந்து மீட்டெடுப்பதே ஆகும். இந்தக் கட்டுரை ஆசிரியர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களை (குறிப்பாக உபவேந்தரையும், சகல பீடாதிபதிகளையும்,  மற்றும் துறைத்தலைவர்களையும்) இக்கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் சிதைவு

யாழ் பல்கலைக்கழக மொத்த கல்விசார் ஊழியர்களுள் பெரும்பான்மையோர் (அதாவது 50 சத வீதத்திற்கு மேற்பட்டோர்) குறிப்பாக சிரேஸ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள்  மற்றும் விரிவுரையாளர்கள் கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என கணிக்கப்படுகின்றது. இவை மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மோசடிகளாகும். மற்றும் இம் மோசடிகள் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் காலாகாலமாக இடம்பெற்றுவரும் மோசடிகளாகும் (குறிப்பாக ஸ்ரீ லங்கா பல்கலைக்கழக காலத்திலிருந்து – அதாவது 1972ஆண்டிலிருந்து இற்றை வரை) என்பதனை கூறிக்கொள்வது முக்கியமானதாகும். இருந்த பொழுதிலும். ஒரு தனி நபரது அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் குற்றங்கள் இன்னொரு தனி நபரது அல்லது இன்னொரு பல்கலைக்கழகத்தின் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

மேற்கூறப்பட்ட மோசடிகளில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் விகிதாசாரமானது பீடத்துக்கு பீடம் வேறுபடுகின்றது. உதாரணத்திற்கு இக்;கட்டுரை ஆசிரியரின்; கணிப்பின்படி கலை, இந்துமத கற்கைகள், வணிகம், முகாமைத்துவம், மற்றும் விவசாயப் பீடங்களைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுள் 75 சத வீதத்திற்கு மேற்பட்டோர் கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் அதேவேளை விஞ்ஞானம் மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்களுள் 65 சத வீதத்திற்கு மேற்பட்டோரே இவ்வாறான கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. முன்குறிப்பிடப்பட்ட விகிதாசாரங்கள் விவாதிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் பெரும்பான்மையான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (50%) மேற்குறிப்பிடப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இப் பீடங்களுக்கிடையேயான வேறுபாட்டிற்கான காரணம் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்கள் ஏனைய/மற்றைய பீட ஆசிரியர்களை விட நேர்மையானவர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. மேற்குறிப்பிட்ட வேற்றுமையிற்கான பிரதான காரணம் விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு தமது ஆய்வுகளை பிரசுரிப்பதற்கு தரம் குன்றிய அறிவுசார் சஞ்சிகைகளாவது (உதாரணத்திற்கு விஞ்ஞானம் மற்றும் இலங்கை மருத்தவ சஞ்சிகை- Ceylon Medical Journal– இக்கருத்திற்கான ஆதாரம் கீழே) இருக்கையில் ஏனைய பீட ஆசிரியர்களுக்கு தரம்குன்றிய அறிவுசார் சஞ்சிகைகளாவது அரிதாகவே உள்ளன. குறிப்பாக கலை மற்றும் இந்துமத கற்கைகள் பீட ஆசிரியர்களுக்கு தமிழ் மொழி அறிவுசார் சஞ்சிகைகள் நாடளாவிய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் மிகவும் குறைவாகவே உள்ளது (ஏனெனில் பெரும்பான்மையோருக்கு ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதத் தெரியாது). 

உதாரணத்திற்கு இலங்கை மருத்தவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்படுவனவற்றுள் 90% இற்கு மேற்பட்டவை ஒரு குறிப்பட்ட நோய் அல்லது நோயாளிகள் சம்பந்தமான எடுத்துக்காட்டு அறிக்கைகள் (Case Studies) அல்லது விபரணக் கட்டுரைகள் (Descriptive studies) ஆகும். தை 2000 இற்கும் மார்கழி 2009 இற்கும் இடைப்பட்ட 10 வருட காலத்தில் இலங்கையில் உள்ள மருத்தவ ஆய்வாளர்களினால் சர்வதேச மற்றும் உள்ளுர் அட்டவணைப் படுத்தப்பட்ட அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட 1790 கட்டுரைகளுள் 35 வீதமானவை விபரணக் கட்டுரைகள் ,  20வீதமானவை சஞ்சிகை அசிரியருக்கான கடிதங்கள் , மற்றும் 18வீதமானவை எடுத்துக்காட்டு அறிக்கைகள்  என்பனவாகும். மருத்துவத்துறையில் சஞ்சிகை ஆசிரியருக்கான கடிதங்கள்  பெறுமதி அற்றவையாக கருதப்படும் அதேவேளை எடுத்துக் காட்டு அறிக்கைகள்   பெறுமதி மிகக் குறைந்ததாகவும்  விபரணக் கட்டுரைகள்  பெறுமதி குறைந்ததாகவும் கருதப்படுகிறது. எழுமாற்றான கட்டுப்பாட்டுச் சோதனை (Randomized Controlled Trials) சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே மருத்துவத்துறையில் மிகவும் பெறுமதி மிக்கவையாக உலகளாவிய ரீதியில் கருதப்படுகிறது.   ஆதாரம்

தரம் குறைந்த அறிவுசார் சஞ்சிகைகளை மோசடி சஞ்சிகைகள் எனக்கருத முடியாது ஏனெனினில் அச்சஞ்சிகைகள் கட்டுரைகள் பிரசுரிப்பதற்கு பெரும்பாலும் பணம் அறவிடுவதில்லை. இருப்பினும் அவை தரம் குறைந்த சஞ்சிகைகள் எனக் கருதப்படுவதற்கு காரணம் அவற்றுள் பிரசுரிக்கப்படும் கட்டுரைகள் முறையான/நிஐமான அல்லது கடுமையான சக மதிப்பாய்வுக்கு  உட்படுத்தப்படுவதில்லை என்பதனாலேயாகும். முறையான/நிஐமான அல்லது கடுமையான சக மதிப்பாய்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பது கீழே குறிப்படப்பட்டுள்ளது.

நிஐமான மற்றும் முறையான சக மதிப்பாய்வு என்பது ஒரு ஆய்வுக் கட்டுரையின் கருப்பொருளுக்கு அமைவான கருப்பொருளுடைய ஆய்வுகளை ஏற்கனவே மேற்கொண்டு தராதரம்மிக்க அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரித்ததற்கான ஆதாரமுடைய கல்விமான்களைக் கொண்டு சக மதிப்பாய்வு செய்வதாகும். இந்த சக மதிப்பாய்வாளர்கள் ஒரு கட்டுரை ஆசிரியரின் பல்கலைக்கழகத்தை சாராத அல்லது அக்கட்டுரை ஆசிரியருடன் ஆய்வுகளில் ஈடுபட்டிராத அல்லது வேறு பரஸ்பர நலன்களில் முரண்பாடு (Mutual Conflict of interest) இல்லாதவராக இருக்க வேண்டியது மிக மிக அத்தியாவசியமாகும்.

ஆரம்பக் கட்டமாக இங்கு இரண்டு மோசடிக்கார போலி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அம்பலப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா (உபவேந்தர் மற்றும் கணித மற்றும் புள்ளிவிபரவியல் துறை ஆசிரியர்) மற்றும் செல்வரத்தினம் சந்திரசேகரம் (தற்போதைய பொருளியல் துறைத்தலைவர்) ஆவர்.

உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா

உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா என்பவர் தனது முனைவர் பட்டப்படிப்பின் பின்னான முப்பத்தி மூன்று ஆண்டுகள் காலப்பகுதியில் சுயமாக/தனியாக ஒரு ஆய்வுக்கட்டுரை கூட எழுதி பிரசுரித்தது இல்லை. மேலும் அவர் இணை ஆசிரியராக பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு சில கட்டுரைகளில் கூட அவர் இறுதி ஆசிரியராகவே குறிப்பிடப்பட்டுள்ளது. முன் குறிப்பிடப்பட்டவை அறிவுசார் குற்றங்கள் அல்லது மோசடிகள் இல்லாவிடினும் இவை அவர் பேராசிரியர் பட்டத்திற்கு சர்வதேச ரீதியில் (இந்தியா சீனா உட்பட) அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு  அமைவாக முற்றிலும் தகுதியற்றவர் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குனராசா கல்வி மற்றும் அறிவுசார் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஒரு சான்று பின்வருவது. மேலும் பல சான்றுகளை அவரது முன்னாள் மாணவர்கள் வழங்கி வருகின்றனர். ஆகவே கீழ்வருவது ஒரு உதாரணமே. 

         கோகுலன், திருலோகசுந்தர் 

      சக்கரின் கூட்டுக் களவாணிகள் 

கோகுலன் (யாழ் பல்கலைக்கழகம்), திருலோகசந்தர் (கொன்கொடியா பல்கலைக்கழகம், கனடா). மற்றும் சிறிசற்குனராசா (இந்த வரிசையில்) என்பவர்கள் இணை ஆசிரியர்களாக 2017 ஆம் ஆண்டு அக்சியம்ஸ்  Axioms என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளனர். இக்கட்டுரை 20i16 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 8ம் திகதி இச்சஞ்சிகையிற்கு சமர்ப்பிக்கப்பட்டு மேலும் 2017 ஆம் ஆண்டு மாசி 9ம் திகதி திருத்தப்பட்ட பிரதி சமர்ப்பிக்கப்பட்டு,  2017 ஆம் ஆண்டு மாசி 17 ஏற்றுக்கொள்ளப்பட்டு மாசி 21ம் திகதி 2017 ஆம் ஆண்டு இணைய வழியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

Axioms  சஞ்சிகையானது சக மதிப்பாய்வுக்கு முன்கூட்டியே பணம் அறவிட்டு  பிரசுரிக்கும் சஞ்சிகையாகும். ஒரு நேர்மையான தராதரம் மிக்க கல்விசார் சஞ்சிகையானது கட்டுரை ஆசிரியர்களிடமிருந்து சக மதிப்பாய்வுக்கு முன்கூட்டியே பணம் அறவிடுவதில்லை. 

இன்றும் உலகலாவிய ரீதியில்  பெரும்பான்மையான கல்விசார் சஞ்சிகைகள் சக மதிப்பாய்வுக்கு முன்கூட்டியோ சக மதிப்பாய்வுக்கு பின்னதோ கட்டுரை ஆசிரியர்களிடமிருந்து பணம் அறவிடுவதே இல்லை. இக்கட்டுரை ஆசிரியர் இற்றை வரை 30 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரித்திருந்தும் ஒன்று கூட கட்டணம் கட்டி பிரசுரிக்கப்பட்டவை அல்ல. 

மேலும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பணம் அறவிட்டு பிரசுரிக்கும் அறிவுசார் சஞ்சிகைகள் அனைத்துமே தராதரம் குன்றியதோ மோசடி சஞ்சிகைகளோ அல்ல. ஆனால் நேர்மையான பணம் அறவிட்டு பிரசுரிக்கும் அறிவுசார் சஞ்சிகைகள் சக மதிப்பாய்வுக்குப் பின் பிரசுரிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளுக்கே, அக்கட்டுரை ஆசிரியர்களின் ஒப்புதலுக்கு அமைய பணம் அறவிடுகின்றன.

இரண்டாவதாக எந்தவொரு அனுபவமிக்க சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியருக்கும் தெரியும் இவ்வளவு விரைவாக (10 கிழமைகளில் அல்லது 2.5 மாதங்களில்) சக மதிப்பாய்வு செய்யப்பட்டு பிரசுரிப்பதானது ஒரு நேர்மையான தராதரம் மிக்க கல்விசார் சஞ்சிகையினால் மேற்கொள்ளப்படக் கூடிய விடயமல்ல. 

மூன்றாவதாக மேற் குறிப்பிடப்பட்ட மூன்று இணை கட்டுரை ஆசிரியர்களும் (சிறிசற்குனராசா உட்பட) தமது பல்கலைக்கழகம் சாராத தனிப்பட்ட மின்னஞ்சல் விலாசங்களையே  பிரசுரித்துள்ளனர். இது அவர்களின் திருட்டுத்தனத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். ஏனெனில் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ மின்னஞ்சல் விலாசத்தினை பயன்படுத்தினால் தாம் அகப்பட்டுக் கொள்வார்களோ என்ற பீதியினால் தான் மோசடிக்காரர் தமது பிரத்தியேக மின்னஞ்சல் விலாசத்தினை பயன்படுத்துகின்றனர். மேலும் வாசகர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நிஐமான தராதரமான அறிவுசார் சஞ்சிகைகள் பிரத்தியேக மின்னஞ்சல் விலாசத்தினை கொண்டுள்ள கட்டுரை ஆசிரியர்களின் சமர்ப்பிப்புகளை சந்தேகக் கண் கொண்டு மதிப்பாய்வு செய்வார்கள் அல்லது மேசை மதிப்பாய்வுடன் (Desk Review) நிராகரித்து விடுவார்கள். பொதுவாக ஒரு பல்கலைக்கழகத்தையோ ஆய்வு நிறுவனத்தையோ அல்லது பூர்வாங்க அமைப்பினையோ சாராத சுயாதீன ஆய்வாளர்கள் மட்டுமே தனிப்பட்ட மின்னஞ்சல் விலாசத்தினை தமது கட்டுரைகளில் குறிப்பிடுவர். மோசடிக்கார பல்கலைக்கழக ஆசிரியர்களே தமது தனிப்பட்ட மின்னஞ்சல் விலாசத்தினை குறிப்பிடுவர். மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையின் பிரதம மற்றும் தொடர்பாட்டு ஆசிரியரான https://youtu.be/ziih2u5hhhw

சொல்லுக்கு சொல் கொப்பியடித்து மோசடி புரிந்த உபவேந்தர் சிறிசற்குணராசா  

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தர உத்தரவாதம் மற்றும் அங்கீகார பேரவையினால் (QAAC) தயாரிக்கப்பட்டு பங்குனி மாதம் 2012 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட “இலங்கைப் பல்கலைக்கழக அமைப்பில் கல்விப் பணியாளர்களுக்கான கல்விப் பொறுப்புக்கூறல் குறித்த நடைமுறை விதிகள் என்ற ஆவணத்திற்கு ஒத்த ஆவணம் ஒன்றினை இலங்கையின் ஒவ்வொரு பொது பல்கலைக்கழகமும் தத்தமது தனித்துவத்திற்கேற்ப தயாரிக்கும்படி வேண்டப்பட்டது. அதற்கமைய யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளக தர உத்தரவாதப் பிரிவு  மார்கழி 2015 இல் “கல்விப் பொறுப்புக்கூறல் குறித்த  ஒரு கொள்கை ஆவணம்” என்ற பெயரில் ஒரு கொள்கைப் பிரகடனத்தை பிரசுரித்திருநத்து. யாழ் பல்கலைக்கழகத்தின் அன்றைய (2015 ஆம் ஆண்டு) உள்ளக தர உத்தரவாதப் பிரிவின் தலைவராக இன்றைய உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசாவே இருந்தார். ஆகவே முன்கூறப்பட்ட “கல்விப் பொறுப்புக்கூறல் குறிதத் ஒரு கொள்கை ஆவணம்” என்ற பிரசுரம் சிறிசற்குணராசாவின் தலைமையிலேயே வரையப்பட்டது.  

 யாழ் பல்கலைக்கழகத்தின் “கல்விப் பொறுப்புக்கூறல் குறிதத் ஒரு கொள்கை ஆவணம்” என்ற பிரசுரம்  கனிசமான அளவு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் “இலங்கைப் பல்கலைக்கழக அமைப்பில் கல்விப் பணியாளர்களுக்கான கல்விப் பொறுப்புக்கூறல் குறித்த நடைமுறை விதிகள்” என்ற பிரசுரத்தினை ஒத்ததாகவும் மற்றும் சொல்லுக்கு சொல், வரிக்கு வரி, பந்திக்கு பந்தி கொப்பியடிக்கப்பட்டதாகவும் உள்ளது. மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மேற்குறிப்பிடப்பட்ட ஆவணம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேற்குறிப்பிடப்பட்ட ஆவணத்தினை உசாத்துணையாக குறிப்பிடாமை கல்விசார் மற்றும் அறிவுசார் நெறிமுறைக் கோடப்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது.  

 மேலும் அறிவார்ந்த வெளியீடுகளுக்கான துணை விதிகள்  யாழ் பல்கலைக்கழக பேரவையின் 454 ஆவது கூட்டத்தில் ஆனி 09, 2021 இல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான பிரதான காரணம் தற்போதைய பொருளியல் துறைத்தலைவர் செல்வரத்தினம் சந்திரசேகரத்திற்கு எதிராக பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் தற்போது மேற்கொள்ளப்படடு வரும் விசாரணையே (மேன்முறையீட்டு  இலக்கம் 1000)

 மேற்குறிப்பிட்ட அறிவார்ந்த வெளியீடுகளுக்கான துணை விதிகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னோடியாக கல்விசார் ஊழியருக்கான வெளியீட்டு நெறிமுறைகள் என்ற தலைப்பில் உபவேந்தர் சிறிசற்குனராசா தனது கையொப்பத்துடன் பங்குனி 23, 2021, குறிப்பாணை  ஒன்றினை பல்கலைக்கழக உயர் சபையில் (செனட்) சமர்ப்பித்திருந்தார். இந்தக் குறிப்பாணை ஐந்து உபதலைப்புகளின கீழ வரையப்பட்டிருந்தது. இந்த ஐந்து உபதலைப்புகளின் கீழ்  வரையப்பட்டிருந்த உள்ளடக்கங்களில் மூன்று உபதலைப்புகளின் கீழ் வரையப்பட்ட பிரதான உள்ளடக்கங்கள் முற்றுமுழுதாக (99%) சொல்லுக்கு சொல் வரிக்கு வரி பந்திக்கு பந்தி கொப்பியடிக்கப்பட்ட பிரதி ஆகும். இதில் விசித்திரம் என்னவென்றால் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா கொப்பியடித்தது இக்கட்டுரை ஆசிரியராகிய முத்துகிருஷ்ணா சர்வானந்தன் உபவேந்தரின் வேண்டுதளுக்கு இணங்க ஐப்பசி 23, 2020, திகதியிடப்பட்டு அதே தலைப்பில் (கல்விசார் ஊழியருக்கான வெளியீட்டு நெறிமுறைகள் –  சிறிசற்குணராசாவிற்கு கையளித்திருந்த வரைபே ஆகும்.  

 மேற்குறிப்பிடப்பட்ட குறிப்பாணையில் ருகுன பல்கலைக்கழக பேராசிரியர் எல். பி. ஐயதிஸ்ஸ தைமாதம் 2019 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்திருந்த பத்திரத்தினை உசாத்துணையாக குறிப்பிட்டிருந்த சிவக்கொழுந்து சிறிசற்குணராசாவிற்கு முத்துகிருஷ்ணா சர்வானந்தன் அவருக்கு வழங்கியிருந்த வரைபினை மேற்கோள் காட்டாமை அவரின் மோசடிக்கு   ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  

 இந்த விடயம் பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையிடம் அண்மையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில்  யாழ் பல்கலைக்கழகத்தினால் இயற்றப்பட்டுள்ள துணை விதிகள் மற்றும் கொள்கைகள் எல்லாமே பெரும்பாலும் பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவை திருப்திப்படுத்துவதற்காக பத்திரிகையில் இடப்பட்டவையே ஒழிய நடைமுறைப்படுததுவதற்காக அல்ல. அல்லது எந்தவொரு உபவேந்தருக்கும் பிடிக்காத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில உபவிதிகள் அல்லது கொள்கைகள் செயற்படுதத் ப்பட்டமையிற்கான நடைமுறைப்படுதத் ப்பட்டமையிற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.  

    Plagiarism: பதவி பறிக்கப்பட்ட     பாண்டிச்சேரி பல்கலைகழக                                துணைவேந்தர்

2015 ஆம் ஆண்டு புதுச்சேரி (முன்னாள் பாண்டிச்சேரி) பல்கலைக்கழக உபவேந்தர் தமது ஆய்வுக்கட்டுரை ஒன்றின் பெரும்பகுதியை பிற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்விமான்களின் கட்டுரைகளிலிருந்து கொப்பியடித்த குற்றத்திற்காக உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின் பதவியிலிருந்தும் பல்கலைக்கழகத்திலிருந்தும் விலக்கப்பட்டார். செய்தி இணைப்பு இவ்வாறான மோசடிக்காரர் இலங்கையில்   பணி நீக்கத்திற்குப் பதிலாக பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவின் தலைவராக (உதாரணத்திற்கு இன்னாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் சிறிசற்குணராசா) நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை (கீழே பார்க்கவும்).

செல்வரத்தினம் சந்திரசேகரம்             யாழ் கல்குவாரி சுரங்க முதலாளி                யாழ் பல்கலைக்கழக “பேராசிரியர்”    

தற்போதைய (மாசி 2020 தொடக்கம் தை 2023 வரை) பொருளியல் துறைத்தலைவர் செல்வரத்தினம் சந்திரசேகரம் என்பவர் யாழ் பல்கலைக்கழகம் சார்ந்த கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளின் ஒரு முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது.  

பொருளாதார சிந்தனை வரலாறு  என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு செல்வரத்தினம் சந்திரசேகரம் பிரசுரித்துள்ள தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாடநூலானது முற்று முழுதாக கொப்பியடிக்கப்பட்ட புத்தகம் ஆகும். அ.குழந்தை மற்றும் மா.பா.குருசாமி ஆகிய இரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களினால் தமிழ் மொழியில் முறையே 1975ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட பதிப்பு) மற்றும் 2009 ஆண்டு (12ம் பதிப்பு) பிரசுரிக்கப்பட்ட “பொருளாதாரச் சிந்தனை வரலாறு” என்ற தலைப்புடைய புத்தகங்களை முற்றுமுழுதாக கொப்பியடித்தே செல்வரத்தினம் சந்திரசேகரம் அதே தலைப்பில் (“பொருளாதார சிந்தனை வரலாறு”) தமது பெயரில் 2013 ஆம் ஆண்டு பிரசுரித்துள்ளார். 

                   களவாடிய புத்தகம் 

குறிப்பாக சந்திரசேகரத்தின் புத்தகத்தின் (2013) 6ஆம் அத்தியாயமாகிய “தோமஸ் ரோபர்ட் மல்தூஸ்” (பக்கம் 90 தொடக்கம் 114 வரை) என்பதானது குழந்தையின் புத்தகத்தின் (1975) 9ஆம் அத்தியாயமாகிய “தாமஸ் ராபர்ட் மால்தூஸ்” (பக்கம் 139 தொடக்கம் 162 வரை) என்பதனை வரிக்கு வரி, பந்திக்கு பந்தி, பக்கத்திற்கு பக்கம் முற்று முழுதாக கொப்பியடிக்கப்பட்ட பிரதி ஆகும். இந்த இரண்டு புத்தகங்களும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கின்றன.   சந்திரசேகரத்தின் “பொருளாதார சிந்தனை வரலாறு” என்ற பாடநூலின் ஏனைய அத்தியாயங்கள் குருசாமியின் புத்தகத்திலிருந்து (2009) திருடப்பட்டு சொற்பதங்கள் சற்று மாற்றப்பட்டு கொப்பியடித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

உயர் கல்வித்துறையில் பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி பிரதி பண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலாக மேற் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கொப்பியடிப்பதானது  அறிவுசார் புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல்  குற்றமாகும். மேற்கத்தைய நாடுகளில் மாத்திரமல்ல  இந்தியாவில் மற்றும் சீனாவில் கூட இவ்வாறான குற்றத்திற்கு உடனடி பணி இடைநிறுத்தம் அல்லது பணி நீக்கமே தண்டனையாக இருக்கும் போது செல்வரத்தினம் சந்திரசேகரத்தின் மேற்குறிப்பிடப்பட்ட மோசடி பற்றி யாழ் பல்கழைக்கழக முன்னாள் தகுதிவாய்ந்த அதிகாரிக்கும் (கதிர்காமநாதன் கந்தசாமி) இந்நாள் உபவேந்தருக்கும் (சிவக்கொழுந்து சிறிசற்குணராசா) ஏன் அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கும் கூட 2019 ஆம் ஆண்டு ஆனி மாதத்திலிருந்து பல தடவைகள் ஆதாரங்களுடன் எழுத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் அம் முறைப்பாடுகள் மீது எந்தவித விசாரணையோ நடவடிக்கையோ இற்றை வரை (2022ஆம் ஆண்டு) யாழ் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைக்கு மாறாக அந்நாள் “தகுதிவாய்ந்த அதிகாரி” கதிர்காமநாதன் கந்தசாமியின் முன்மொழிவுக்கும் சிபாரிசுக்கும் அமைவாக யாழ் பல்கலைக்கழகப் பேரவை ஆவணி 2019 ஆம் ஆண்டு செல்வரத்தினம் சந்திரசேகரத்தை பேராசிரியராக பதவி உயர்த்தி மாசி 2020ஆம் ஆண்டு பொருளியல் துறைத் தலைவராக நியமித்திருந்தது. இற்றைவரை ஒரு பாரிய மோசடிக்காரர் பேராசிரியராகவும் பொருளியல் துறைத் தலைவராகவும் இருந்து வருவது யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பாக பொருளியல் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமா? சாபக்கேடா? என்பதனை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  

துணைவேந்தரானதும் கூட்டுக்களவாணி கந்தசாமி காலில் விழுந்து “ஆசி” பெறும் சக களவாணி சக்கர்

மேற் கூறப்பட்டதிற்கு மேலதிகமாக செல்வரத்தினம் சந்திரசேகரம் வேறு பல பாரிய மோசடிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்துள்ளார். செல்வரத்தினம் சந்திரசேகரம் தாம் அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரித்ததாக உரிமை கோரும் 22 கட்டுரைகளில் இரண்டினைத் தவிர (இலங்கை பொருளியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டவை தவிர – ளுசi டுயமெய நுஉழழெஅiஉ துழரசயெட) ஏனையவை அனைத்துமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களுடன் சேர்ந்து (இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், இலங்கை கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் சீனர் பாகிஸ்தானியர்) இணை ஆசிரியராக பணம் அறவிட்டு பிரசுரிக்கும் மோசடி சஞ்சிகைகளில் பிரசுரித்தவையே ஆகும். அதாவது பணம் அறவிட்டு கட்டுரைகள் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை முறையான கடினமான சக மதிப்பாய்வுக்கு (Peer Review) உட்படுத்துவதும் இல்லை மற்றும் அக்கட்டுரைகளின் தராதரம் பற்றி கரிசனை கொள்வதும் இல்லை. இலாப நோக்குக் கொண்ட அச்சஞ்சிகைகளுக்கு பணம் வசூலிப்பதில் மட்டுமே அக்கறை. 

சந்திரசேகரத்தின் மோசடிக் கட்டுரைகளாவன ஆய்வு முறைமைகள் மற்றும் கோட்பாடுகள் ரீதியான அப்பட்டமான பிழைகள் தவறுகளையும் சரளமான ஆங்கில மொழிப் பிழைகளையும் கொண்டுள்ளன. ஒரு சாதாரண மின்னஞ்சலைக் கூட ஆங்கில மொழியில் பிழை இல்லாமல் எழுதத் தெரியாத செல்வரத்தினம் சந்திரசேகரம் எவ்வாறு இந்த ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார் என்பதனை வாசகர்களே புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அறிவு என்றால் என்னவென்று தெரியாத புரியாத செல்வரத்தினம் சந்திரசேகரம் அறிவுப் பொருளாதாரம்  என்ற தலைப்புடைய ஒரு பாடப்புத்தகத்தின் முதல் இணை ஆசிரியராக உரிமை கோரி பிரசுரித்துள்ளார். தமது முன்னாள் மாணவர் மேற்பார்வையாளி ஒருவரின் முதுகலைப் பட்டப்படிப்பின் ஆய்வுக்கட்டுரையை  புத்தக வடிவில் பிரசுரித்து தன்னை முதல் இணை ஆசிரியராக்கிக் கொண்டுள்ளார். இதற்கு பிரதி உபகாரமாக அந்த மாணவருக்கு யாழ் பல்கலைக்கழகத்திலேயே தகுதிகாண் ஆசிரியர் (Probationary Lecturer) உத்தியோகம் பெற்றுக் கொடுத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த தகுதிகாண் ஆசிரியரின் முதுகலைப் பட்டப்படிப்பின் ஆய்வுக்கட்டுரையின் பெரும்பகுதி பிறர் உடைய புத்தகங்களிலிருந்து கொப்பியடிக்கப்பட்டதே ஆகும். 

இவ்வாறே  இன்னுமொரு யாழ் பொருளியல் துறை சிரேஸ்ட ஆசிரியரின் முதுகலைப் பட்டப்படிப்பின் ஆய்வுக்கட்டுரையும்  பிறருடைய புத்தகங்களிலிருந்து கொப்பியடிக்கப்பட்டுள்ளது. மேலாக அந்த சிரேஸ்ட ஆசிரியர் பிரசுரித்துள்ள ஒரு சில கட்டுரைகள் கூட அவரது முன்னாள் மாணவரும் (யாழ் பல்கலைக்கழகத்தில்) தற்போதைய வவுனியா பல்கலைக்கழக தகுதிகாண் ஆசிரியருமானவரால் எழுதப்பட்டவையே ஆகும். அந்த முன்னாள் மாணவர் இந்த சிரேஸ்ட ஆசிரியருக்கு செய்துவரும் உதவிக்கு பிரதி உபகாரமாகவே அவருக்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் வவுனியா வளாகத்தில் தொழில் பெற்றுக் கொடுக்கப்பட்டது எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த யாழ் பொருளியல் துறை சிரேஸ்ட ஆசிரியரின் கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகள் பிறிதொரு கட்டுரையில் அம்பலப்படுத்தப்படும். இவர் செல்வரத்தினம் சந்திரசேகரத்திற்கு வசைபாடுபவர் என்பது பலரும் தெரிந்தது. 

இவ்வாறாக தமக்கு தனிப்பட்ட ரீதியில் அல்லது தொழில் ரீதியில் உதவி புரியும் தராதரமற்ற மாணவருக்கு திருட்டுத்தனமாக தமது துறையிலேயே ஆசிரியர் வேலை பெற்றுக்கொடுப்பது மற்றும் தமது வைப்பாட்டிகளுக்கு ஆசிரியர் வேலை பெற்றுக்கொடுப்பது எல்லாம் ஒரு சில யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட ஆண் கல்விசார் ஊழியருக்கு  கைவந்த கலை. 

செல்வரத்தினம் சந்திரசேகரத்தின் பேராசிரியர் பதவி உயர்வுக்கு எதிராக பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டு சபையில் மார்கழி 2019ஆம் ஆண்டிலேயே மேன்முறையீடு செய்யப்பட்டள்ளது  இந்த மேன்முறையீட்டின் விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ள வேளையிலேயே இவர் தொடர்ந்தும் பின்வருவது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவதற்குக் காரணம் தற்போதைய உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா தன்னை காப்பாற்றுவார் என்ற துணிச்சலினாலேயாகும். ஒரு மோசடிக்காரர் இன்னொரு மோசடிக்காரருக்கு உதவுவது புதுமை அல்லவே. இருந்த பொழுதிலும் உபவேந்தர் என்ற உயர் பதவியிலிருந்து இவ்வாறான அப்பட்டமான மோசடிகளை தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதனை இந்த செல்லாக்காசுகளான  செல்வரத்தினம் சந்திரசேகரத்திற்கும் சிவக்கொழுந்து சிறிசற்குனராசாவிற்கும் சட்டரீதியாக உணர்த்துவேன்.

திருக்குறளும் பொருளியலும் என்ற தலைப்பில் சித்திரை 17ம் திகதி 2021ஆம் ஆண்டு இணைய வழியான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் நாடு, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இருவரும் மற்றும் செல்வரத்தினம் சந்திரசேகரமுமே வளவாளர்களாக பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் சந்திரசேகரம் பேசியது அனைத்தும் 2020ஆம் ஆண்டு பொருளியல் இளமாணிப்பட்டம் பெற்ற ஒரு மாணவரின் ஆய்வுக்கட்டுரையிலிருந்து களவாடப்பட்டதே.  வீடியோ 👇  https://www.youtube.com/embed/ziih2u5hhhw

தமிழ் மொழியில் பாடங்களை கற்பிப்பதற்கான பிரதான காரணம்

யாழ் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் இந்துமத கற்கைகள் பீடங்களைத் தவிர ஏனைய பீடங்கள் அனைத்தும்; பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கலைப்பீடத்தில் கூட சட்டத்துறையில் ஆங்கில மொழியிலேயே கற்பித்தல் இடம்பெற்று வருகின்றன. கலைப்பீடத்தின் ஏனைய துறைகள் தொடர்ந்தும் தமிழில் பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களது நியாயப்படுத்தல் என்னவென்றால் தாம் ஆங்கில மொழியில் பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தால் கலைப்பீடத்திற்கு சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டு தமிழ் மாணவர்களுக்கு போட்டியாக திகழ்வார்கள் என்பதே ஆகும். இது ஒரு நொண்டிச் சாட்டாகும். 

முதலாவதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஆசிரியர்களுள் பெரும்பாலானோர் ஆங்கில மொழியில் கற்பிக்க இயலாதவர்கள். உதாரணத்திற்கு மேற் கூறியவாறு ஒரு மின்னஞ்சலைக் கூட பிழைகள் அற்ற ஆங்கிலத்தில் எழுத இயலாத செல்வரத்தினம் சந்திரசேகரம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் கற்பிப்பார்? இரண்டாவதாக இந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரிந்தமட்டில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் பலர் கலைப்பீட ஆசிரியர்கள் பலரை விட ஆங்கில மொழியில் திறமை மிக்கவர்கள். ஆகவே சிங்கள மாணவர்கள் உள் வாங்கப்படுவதனால் தமிழ் மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்பது ஒரு நொண்டிச் சாட்டாகும். ஏனைய பீடங்கள் (மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் வணிகம் மற்றும் முகாமைத்துவம் உட்பட) கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மாணவர்களை உள்வாங்கி வரும் போதும் அப்பீடங்களின் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்களையும் காண முடியாது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் கற்பித்தலை மேற்கொள்ளுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான பிரதான காரணம் தாம் தொடர்ந்தும் தமிழ் நாட்டுக் கல்வியாளர்களின் தமிழ் மொழிப் புத்தகங்களையும் கட்டுரைகளையும் கொப்பியடித்து பிரசுரித்து தமது பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கே ஆகும் என்பதனை தமிழ் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில மொழியில் கொப்பியடிப்பதனை கண்டுபிடிக்கும் மென் பொருள்கள் (Plagiarism detection software) இருக்கும் இக்காலகட்டத்தில் இந்தக் கட்டுரை ஆசிரியரக்கு தெரிந்தமட்டில் தமிழ் மொழியில் கொப்பியடிப்பதனை கண்டுபிடிக்கும் மென்பொருள்கள் இற்றைவரை இல்லை. 

எனவே யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு இனிவரும் காலங்களில் புதிய ஆசிரியர்களை தெரிவு செய்யும் போது ஆங்கில மொழியில் உயர் பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு முடித்த ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கு போதிய தகுதி உடைய அல்லது தராதரம் மிக்க (உதாரணத்திற்கு IELTS இல் 6.5 இற்கு மேல் புள்ளிகள் பெற்ற) ஆசிரியர்களையே தெரிவு செய்யவேண்டும். இந்த நடைமுறை மூலமே எதிர்;வரும் காலங்களில் ஆவது கலைப்பீடத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை மேற்கொள்ள முடியும்.

முடிவுரை

 மேற்கூறப்பட்டவர்களதும் வேறு சில யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களதும் கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகள் தொடர்ந்தும் அம்பலப்படுத்தப்படும். இவ்வாறான பகிரங்க அம்பலப்படுத்தல்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அதீத நலன் கருதியே மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறோம். 

இந்தக் கட்டுரை ஆசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கல்விசார் சீர்கேடுகள் மற்றும் சிதைவுகள் பற்றிய ஒரு புத்தகம் எழுதுவதற்கு முனைகிறார். இம் முயற்சியிற்கு ஆதாரம் இருக்கின்ற தகவல்களை தந்து உதவ விரும்புவோர்  sarvi@pointpedro.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். தகவல் அனுப்புவோரின் இரகசியத்தன்மை பேணப்படும் என உறுதி அளிக்கிறேன். 

                     இக்கட்டுரையாசிரியர் 

                   முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் 

இந்தக் கட்டுரை ஆசிரியர் இந்தியா மற்றும் பிரித்தானியாவிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில்  டெல்கி, சல்போர்ட்,  பிரிஸ்டல்,  மற்றும் வேல்ஸ்-Ph.D) இளங்கலை மற்றும் முதுகலைக் கல்வியினை மேற்கொண்டு பட்டம்பெற்றுள்ளார். மேலாக இரண்டு பிறநாடுகளில் (அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா) இரண்டு பல்கலைக்கழகங்களில் (முறையே ; ஜோர்ச் வோஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் மொனாஷ் பல்கலைக்கழகம்) முனைவர் பட்டப்படிப்பின் பின்னான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன் குறிப்பிடப்பட்ட கல்விசார் புலமைத்துவங்களுக்கு மேலாக இற்றைவரை ஒட்டுமொத்தமாக 55 இற்கு மேலான சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிவார்ந்த வெளியீடுகளின் (சர்வதேச அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவுசார் இதழ்களில் சஞ்சிகைகளில் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் புத்தகங்களில் அத்தியாயங்கள் என்பனவற்றின்) ஆசிரியரும் ஆவார். மேலும் இற்றைவரை சர்வதேச அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவுசார் இதழ்களுக்கு; சஞ்சிகைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 35 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சக மதிப்பாய்வாளராகவும் கடமை புரிந்துள்ளார்.