498 நாட்களாக நீங்கள் எனக்கு செய்த பணிவிடைகள் விருந்தாளிக்கு கொடுக்கும் உபசரிப்பை விட உயர்வானது. உங்கள் உபசாரம் என் மனசாட்சியில் நீங்காத ஒரு தடயமாக பதிந்துள்ளது.
நான் ஒரு சிறைக்கைதியாக காசா பூமியில் இருந்த அந்த நாட்கள் உங்களுக்கு கடினமானதாகவும் துயரம் நிறைந்ததாகவுமே இருந்தது. எனது நாட்டின் இராணுவம் அத்துமீறி நுழைந்து கொடூரமான தாக்குதல் நடத்தி காசாவை கபளீகரம் செய்த போது எங்களை பாதுகாப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் உங்களுடைய உண்மையான வீரத்தை, மனிதநேயத்தை, உயர்ந்த குணத்தை மற்றும் வீரமுள்ள ஆண்தகைமையை பறைசாற்றுகின்றன. உயர் பெறுமானங்கள் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையும் அதைப் கடைப்பிடிக்கும் உறுதியும் என்னை பிரமிக்க வைத்தது. கொடூரமான சூழலில் ஒழுக்க விழுமியங்களை நீங்கள் பேணியது நான் மறக்க முடியாத பாடங்கள்.
நீங்கள் மனித வாழ்வின் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட முற்றுகையிடப்பட்ட சுதந்திரவான்கள். நான் உங்களிடம் கைதியாக இருந்தேன். ஆயிரக்கணக்கான உங்கள் உயிர்கள் பலியாகும் வேளையில் என் உயிருக்கு நீங்கள் பாதுகாப்பு தந்தீர்கள். தன் குழந்தையின் மீது கருணை காட்டும் ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்தீர்கள்.
மருத்துவமனைகள் தகர்க்கப்பட்ட நிலையில் நீங்கள் என் உடல்நலம் பாதுகாத்தீர்கள். அமளிதுமளிகளுக்கு மத்தியில் எனது கண்ணியம் மற்றும் நேர்த்தியைப் காத்து நின்றீர்கள்.
நீங்கள் உங்களுடைய சொந்த நிலத்திற்காகவும், அபகரிக்கப்பட்ட உரிமைக்காகவும் உயிரை பணயம் வைத்து எனது அரசாங்கத்திற்கு எதிராக போராடும் உங்கள் பிடியில் நான் இருந்தபோதிலும், பசி அல்லது அவமானம் என்னைத் தொட அனுமதிக்கவில்லை.
நான் உங்களை காணும் வரையில் வீரத்துக்கான அர்த்தம் எனக்குத் தெரியாது. நீங்கள் மரணத்தை புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள்.
கொல்லும் மற்றும் அழிக்கும் அனைத்து கருவிகளையும் கொண்ட ஒரு எதிரியை வெற்று உடல்களால் எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு மத்தியில் சில காலம் வாழ்ந்தேன் அர்த்தமுள்ள தியாகத்தை கண்டேன்.
நான் எவ்வளவுதான் பேச்சாற்றல் மிக்கவனாகவும், மொழிப் புலமையுடன் பேசுபவனாக இருந்தாலும், உங்கள் உயர்ந்த அந்தஸ்தை சிலாகித்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. உங்கள் உயர்ந்த ஒழுக்கப் பண்பாட்டை கண்டு எனது வியப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள நான் கண்டுபிடிக்கவே முடியாது.
உங்கள் இனிய மார்க்கம் கைதிகளை இப்படித்தான் நடத்தக் கற்றுக்கொடுக்கிறதா?
மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து மனித உரிமைச் சட்டங்களும் உங்கள் காலடியில் மண்டியிடும் வகையில் உங்கள் மார்க்கம் உங்களை உயர்ந்த மனிதர்களாக உருவாக்கியுள்ளது. உயர்வு தரும் உங்கள் மார்க்கம் எவ்வளவு மகத்தானது!
நீங்கள் மிகவும் கடினமான தருணங்களில் நீதியையும் கருணையையும் நடைமுறைப் படுத்தினீர்கள். இருண்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தீர்கள்.
நான் அதற்கு சாட்சியாக உள்ளேன்.
உண்மையில் நான் சத்தியத்தை அதன் சொந்தக்காரர்களிடம் இருந்தே அறிந்து கொண்டேன். நீங்கள் இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, கொள்கை வாழும் பூமியின் பெறுமானங்களுக்கு சொந்தக்காரர்கள்.
சத்தியமாக சொல்கிறேன் நான் இனி ஒரு நாள் காசாவிற்கு மறுபடியும் வர நேர்ந்ததால் உங்கள் அணியில் போராடும் ஒரு போராளியாக மட்டுமே திரும்புவேன். என்னை நம்புங்கள்.
தமிழ் வடிவம்
முஹம்மத் பகீஹுத்தீன்