(நடேசன்.)

பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே என்று சொல்லப்பட்டது. அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி .