வெர்டோலாகா லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு இலைக் கறி வகை ஆகும்.
இது ஈரான் அல்லது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாக நம்பப்படுகிறது, இந்த குறிப்பிடத்தக்க இலை உழவர் சந்தைகள் மற்றும் மதிப்புமிக்க உணவகங்களில் அதன் இடத்தை மீண்டும் பெறுகிறது, இது ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சமையல் சுவை ஆகிய இரண்டையும் ஒருசேர வழங்குகிறது.
இனத்துக்கு ஏற்ப ஒவ்வொரு தாவரமும் மாறுபட்ட எண்ணிக்கையிலான விதைகளை உற்பத்தி செய்யலாம், சில 240,000 விதைகள் வரை. வெர்டோலாகா உண்ணக்கூடிய தண்டுகள், இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டுள்ளது.
உங்கள் தோட்டத்தில் பர்ஸ்லேனை ஏன் கொல்லக்கூடாது? இதற்கு 12 மேல் கட்டாய காரணங்கள் உண்டு:-
ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படும் இது, மகாத்மா காந்தியின் இதயம் தொடட ஒரு சிறப்பு உணவாம், இப்போது மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.
இது நடைபாதை கல் விரிசல், நடைபாதை ஓரங்கள், , தோட்டங்களில்; மணலில், மலைப் பாறைகளில் எங்கும் வளரக்கூடியது.
- ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான மையத்தின் தலைவரான டாக்டர் ஆர்ட்டெமிஸ் சிமோபௌலோஸ் அவர்களால் “அதிசய இலை” என்று பாராட்டப்பட்டது., அனைத்து பச்சை தாவரங்களுக்கிடையில் பர்ஸ்லேன் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
- அதன் கண்ணீர்த்துளி வடிவ சதைப்பற்றுள்ள இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன, இது ஒரு சத்தான ஆற்றல் மையமாக அமைகிறது. இந்த இலைகள் புத்துணர்ச்சியூட்டும்; மற்றும் கசப்பான எலுமிச்சை சுவையை வழங்குகிறது.
- மார்த்தா, வாஷிங்டன் உட்பட ஆரம்பகால அமெரிக்கர்கள், பர்ஸ்லேனை பச்சையாகவும் ஊறுகாய்களாகவும் விரும்பினாலும், 1900 களின் தொடக்கத்தில் அதன் பயன்பாடு குறைந்தது. அதிர்ஷ்டவசமாக, சமீபத்திய ஆண்டுகளில், விவசாயிகள், உணவு உண்பவர்கள் மற்றும் புதுமையான சமையல்காரர்கள் இந்த நன்மை பயக்கும் களையில் தங்கள் ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளனர்.
- காட்டு பர்ஸ்லேன் தயாரிக்கும் போது, பூச்சிக்கொல்லி எச்சங்களை அகற்ற தாவரத்தை உன்னிப்பாகக் கழுவுவது அவசியம். புளிப்பு மற்றும் சற்று உப்பு சுவையுடன், பர்ஸ்லேன் சாலடுகள் மற்றும் பல்வேறு உணவுகளுக்கு ஒரு சிறந்த பொருளாகும்.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: பர்ஸ்லேன் இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் ஒரு விதிவிலக்கான தாவர அடிப்படையிலான ஆதாரமாக உள்ளது, இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு.. . . . .
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: குளுதாதயோன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பர்ஸ்லேன் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது, சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் வயதாகும் முதிர்ச்சி செயல்முறையை மெதுவாக்குகிறது.
- கனிமங்கள்: குறிப்பிடத்தக்க அளவு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீசு, தாமிரம், ஃபோலேட் மற்றும் செலினியம் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது.
- வைட்டமின் சி: இந்த நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் வைட்டமின் குறிப்பிடத்தக்க ஆதாரம், இது வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது.
- பீட்டா கரோட்டின்: பர்ஸ்லேனில் ஏராளமாக உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ க்கு முன்னோடியாக செயல்படுகிறது, இது பொதுவாக பல நபர்களிடம் காணப்படும் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது.
- பர்ஸ்லேனில் மெலடோனின் உள்ளது, இது தூக்க முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும், இது ஒரு மதிப்புமிக்க இயற்கை ஆதாரமாக அமைகிறது.
- கொலஸ்ட்ரால் குறைப்பு: பர்ஸ்லேனில் உள்ள பெட்டாலைன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுக்கு நன்றி, இது இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேதத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- டிரிப்டோபான்: பர்ஸ்லேனில் டிரிப்டோபான் உள்ளது, இது ஒரு முக்கியமான அமினோ அமிலமாகும், இது மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது.
பர்ஸ்லேனின் அற்புதங்களைத் தழுவி அதன் மருத்துவ மற்றும் சமையல் நன்மைகளை அனுபவிக்கவும். அதன் ஒமேகா-3 செழுமையிலிருந்து அதன் மெலடோனின் உள்ளடக்கம் வரை, இந்த பல்துறை தாவரமானது உங்கள் நல்வாழ்வு மற்றும் சுவைகளுக்கு எனப் பலவற்றை வழங்குகிறது.
இங்கே ஒரு எளிய செய்முறையை முயற்சிக்கவும்:
தேவையான பொருட்கள்:
2 கப் இளம் பர்ஸ்லேன் இலைகள் மற்றும் தண்டுகள் துவைத்தவை அல்லது சிறிதாக வெட்டப்பட்டவை.
45 கிராம் புதினா அல்லது துளசி இலைகள் துவைக்கப்பட்டது.
1 கராம்பு பூண்டு
45 கிராம் வறுத்த பாதாம்
அரை எலுமிச்சையிலிருந்து சாறு
50 மில்லி ஆலிவ் எண்ணெய்
ருசிக்க உப்பு மற்றும் மிளகு
செய்முறைகள்:
உணவு செயலியில் பர்ஸ்லேன், துளசி, பூண்டு, பாதாம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை இணைக்கவும்.
நன்றாக கலக்கும் வரை அடிக்கவும்.
செயலி இயங்கும் போது, கலவை குழம்பாகும் வரை மெதுவாக ஆலிவ் எண்ணெயைச் சூடு செய்யவும்.
உப்பு மற்றும் மிளகு சேர்த்து சுவைக்கவும்.
வறுக்கப்பட்ட சாண்ட்விச், வறுத்த காய்கறிகள், இறைச்சி அல்லது பாஸ்தாவுடன் தோசைக்கல்லில் இந்த சுவையான பெஸ்டோவை அனுபவிக்கவும். எமது ஊர் முறை வறை(வறுவல்) செய்து சோற்றுடனும் சாப்பிடலாம்.
பன்றி இறைச்சி, பரஸ்லேன் மையமாகக் கொண்ட சூப்பில் மாசாலைகள் சேர்த்து தனியாகவோ சோற்றுடனோ சாப்பிடலாம்.
தவறவிடாதீர். ஆரோக்கிய நன்மைகளின் பெட்டகம் !!!!!!
காட்டு இனங்களை விட பெரியதாகவும், நிமிர்ந்து வளரும் தோட்டக்கலை வகைகளும் உள்ளன.
குறிப்பு;- Germany, France, UK, Canada . . . . . ஸ்கண்டிநேவிய நாடுகளில் நடை பாதை இடுக்குகள், ஓரங்களில் காட்டு இனங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நீங்களும் எங்கு பார்த்தாலும் விடாதீர்கள். ஒரு சிறிய (3-5cm) நுனி கிளையைக் கிள்ளி நட்டாலே விரைவில் போதுமான கிளைகள் பரவித் தழைக்கும். நீர் நிரப்பிய கிளாசில் வேர் விடவைத்தும் நடலாம். சாடிகள், தொங்கு சாடிகளிலும் வளர்க்கலாம்.
(ஆங்கிலத்தில் வந்த குறிப்பு. Google மொழிபெயர்ப்பல்ல. ஊர் அனுபவம், விவசாய பயிற்சிகளும் துணை நின்றன)