மார்ச் 08: சர்வதேச மகளிர் தினம்

நாங்கள் உண்மையில் மகளிரை கொண்டாடுவதற்குரிய இடைவெளிகளை பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இன்னமும் அதிகம் இருந்து வருகின்றது.

அவர்களாக தமக்கான உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாதத்தையும் பல முன்வைக்கலாம். இதற்குள்ளும் ஒரு மேலாதிக்க சிந்தனை உள்ளதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் பெண்களையும் வீட்டைவிட்டு வெளியேறி கல்வி தொழில் இன்ன பிற பொது வாழ்வு என்றாக அவர்கள் படி தாண்டிப் அடுபங்கரையை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள் அதிக பெண்கள்.

ஆனாலும் இந்த சமூக அமைப்பில் இருக்கும் ஆண் மேலாதிக்க சிந்தனைகள் அது சார்ந்த வெளிப்பாடுகளின் எஞ்சங்கள் சொச்சங்கள் என்றாக இன்னமும் பெண்களை ஒடுக்கு முறையாக துரத்ததிக் கொண்டுதான் இருக்கின்றது.

இதனைப் ஆண்களை விட பெண்களே அதிகம் உணர்வால் பேசவல்ல நிலமைகளே உள்ளன.

ஆனாலும் இந்த சமூகம் பண்பாடு கலாச்சாரம் என்றாக பிற்போக்குத் தனங்களை முன் நிறுத்தி அவர்களின் வாய்களுக்கு பூட்டுப் பூட்டியே இன்னமும் வைத்திருக்கின்றது.

அதுதான் ‘…விரும்பி வந்தாள்… வைச்சிருந்தேன்… கருக் கலைத்தேன்…. அதற்கு இப்ப என்ன….?…’ என்ற பெண்களை புடை சூழ வைத்திருக்கும் பொது வெளிப் பேச்சுகளின் வெளிப்பாடுகள் எல்லாம்

எமது பிரதமர் பொது வெளியில் இயல்பான வெளிப்படுத்தல்களுடன் மக்களுடன் பழகுதல் உடைகளை அணிதல் என்பது கூட சிலரால் கலாச்சார தடைகள் என்பதாக பார்க்கும் அவலங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆத்திரங்களை வெளிப்படுத்தவும் ஒரு பெண்ணின் ‘…மூத்திரத்தை அனுப்பி வைக்கவா…’ என்றவாறு கேட்கத் துணியும் விதமாகவே இன்னும் சமூகத்தின் சில கூறுகள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

இதற்கான வருத்தம் என்பதாக யாரும் இதுவரை அவரகள் தரப்பில் இருந்தும் வெளிப்படுத்தவில்லை

இவற்றிற்கான கண்டனங்கள் எதிர்வினைகள் அதிகம் சமூகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து வெளிப்படவில்லை. சிறப்பாக பெண்கள் தரப்பில் இருந்தும் கூட.

இவற்றிற்கு அப்பால் ஆணும் பெண்ணும் வீட்டிற்கு வெளியல் சென்று பொருள் தேடும் வேலைகளில் ஈடுபடும் இன்றைய கால கட்டத்தில் அதிகம் உள்ளது உலக சூழல் தற்போது.

பெண்ணானவள் வேலையால் வீட்டிற்கு திரும்பும் பெண் அல்லது அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தோசை மாவை அல்லது இட்டி மாவை வரும் வழியில் வாங்கி வந்து இரவுச் சமையல் செய்வதாக வந்த தமிழ் நாட்டின் பதிவு ஒன்றை இத்துடன் முழுமையாக இணைக்கின்றேன்.

என்னை அதிகம் பாதிப்படையச் செய்த பதிவும் கூட இது

அண்மைய நாட்களில் இது பற்றி அதிகம் இணையத்தளங்களில் அது முகநூல் என்பதாக பலரும் வாசித்து இருப்பீர்கள்.

ஆனாலும் அதனை இங்கு இணைக்கின்றேன். முழுமையாக வாசித்த பின்பு எனது கருத்தை தொடருங்கள்……. (நன்றி: பனி மலர்)

….. இன்று காலை மளிகை கடை அண்ணாச்சி என் வீட்டுக்கு சில மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்துவிட்டு என்னிடம் புலம்பினார்.
“நம்ம மக்கள் ஏன் சார் இப்படி இருக்காங்க?”
“எப்படி?”
“வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?
நாளுக்கு நாள் இட்லி மாவு பாக்கெட்டுகளுக்கு ரொம்ப கிராக்கியாயிருக்கு?
போன மாசம் வரைக்கும் 100 கிலோ கிராம்(Kg) பாக்கெட் வித்தேன்.
இந்த மாசம் 200 கிலோ கிராம்(Kg) தாண்டிடுச்சு.
ஆபீஸிலிருந்து வீடு திரும்பற எல்லா ஆண்களும் தினசரி மாவு பாக்கெட் வாங்காமே, வீட்டுக்குப் போறதேயில்லை.
என்னோட கடையில் மட்டுமே தினமும் 200 கிலோ கிராம்(Kg)
மத்த கடைகளிலை விக்கிற மாவையும் சேர்த்து கணக்கு போட்டா மயக்கமே வந்துரும் போலிருக்கு.
மாவு உடனடியா புளிக்க வைக்க செயற்கை ஈஸ்ட்,
மிருதுவாயிருக்க சோடா உப்பு,
மாவு வெள்ளை வெளேர்ன்னு இருக்கிறதுக்காக சுண்ணாம்பு தண்ணி கலக்கறாங்க சார்.
ஆனா சப்ளை பண்றவங்க கிட்ட கேட்டா மத்த பிராண்ட் அப்படி பண்றாங்க.
நாங்க அப்படியில்லை என்னு சொல்றாங்க. யாரை நம்பறதுன்னு தெரியலை.”
“இதெல்லாம் தெரிஞ்சும் நீங்க ஏன் விக்கறீங்க?”
“எனக்கு கொஞ்சம் கூட இஸ்டமில்ல சார்.
ஆனா நான் மாவு இல்லேன்னு சொன்னா
கஸ்டமர்கள் வேற கடைகளுக்கு போய் மாவு வாங்கிட்டு அதே கடையில் மத்த மளிகை சாமான்களையும் வாங்கிட்டு போயிடறாங்க.
இதனால நம்ம வியாபாரம் பாதிக்குது.
அதான் மனசை கல்லாக்கிட்டு விக்கறேன்.
என்னதான் வேலை பளு இருந்தாலும் நம்ம வீட்டு லேடீஸ் கொஞ்சம் சிரமம் பாக்காமே
அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வெச்சு க்ரைண்டர்ல போட்டு மாவாக்கிகிட்டா
இந்த கெமிக்கல்ஸ் மாவுக்கு குட்பை சொல்லிட்டு ஆரோக்கியமான இட்லி தோசை சாப்பிடலாமே சார்?
ஏன் இந்தப் பெண்கள் இப்படி இருக்காங்க.
வயித்துல ஏதாவது பிரச்சினை வந்துட்டா வாழற வாழ்க்கை நரகமாயிடும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.
உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் வேற எந்த விசயமும் பெரிசில்லை.
இன்னிக்கு நூத்துக்கு எழுபது சதவீத வீடுகளில் க்ரைண்டர்கள் வேண்டாத ஒரு பொருளா மாறிடுச்சு.
இந்த இட்லி மாவுதான் கொடுமைன்னா….?
Half Cook சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம்ன்னு
மக்களின் ஆரோக்கியத்தை பதம் பார்க்ககிற இரசாயனங்கள் கலந்த அரை வேக்காட்டு உணவுகளுக்கும் கிராக்கி ஸார் “
என்று புலம்பி விட்டு போனார்.
நம்ட குடல் பகுதி ( Gut ) என்பது நம்முடைய உடம்பின் ‘இரண்டாவது மூளை’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
அண்ணாச்சியின் புலம்பலில் நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? (என்று முடித்திருந்தார்)

இதற்கு என் கருத்திடலாக….

பதிவில் உள்ள மாவு விடயம் சரிதான் இதனை மாற்றி அமைக்க வேண்டும் ஆனால் இதனை பெண்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று பார்பது சரியில்லை.

உண்மையில் இதில் ஆண்களும் சமமாக பெண்களுடன் இணைந்து ஈடுபட்டால்தான் இந்த கடை மாவு வாங்குதலை நிறுத்த முடியும்.
இந்த மாவிற்குள் இருக்கும் இரசயானகலவைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனற விழிப்புணர்வை செய்திருந்தாலும்

அந்தப் பதிவின் இறுதியில் கூறியிருக்கும் வார்த்தைகள்தான்….
‘….ஏன் இந்தப் பெண்கள் இப்படி இருக்காங்க….?….’
என் வசனம்தான் எனக்குள் பெரிய கேள்வியாகி இருக்கின்றது

இந்த சமூகம் இப்போதும் பெண்ணானவள் மட்டும் வீட்டிற்கு வந்து சமையல் என்றாக ‘முறிய’ வேண்டும் என்ற மேலாதிக்க தன்மையின் வெளிப்பாட்டையே இங்கும் பார்க்கின்றேன்

உடல் ஆரோக்கியத்திற்குரிய இந்த மாவை ஆணும் இணைந்து வீட்டில் அரைத்தல் அதுவும் நவீன உபகரணங்கள் அதிகம் தற்போதுள்ள சூழலில் என்பதே சரியானதாக அமையும்.

மாறாக பெண்ணானவள் மட்டும் இதனை ஒரு மணி நேரம் ஊற வைத்து முறிய வேண்டும் என்பதான பார்வை சரியானது அல்ல.

ஆணும் பெண்ணிற்கான இணையாக அவளை சமமானவளாக பார்க்கும் பார்வையே அவளும் உயர்புள்ள ஜீவன் என்றான அணுகு முறையே செயற்பாடே இதற்கான தீர்வைத் தரும் என்று இந்த மகளிர் தினத்தில் முன்வைப்போம்.

பெண் தலமைத்துவமாக உயர்ந்து எப்போது நிற்கும் பெண்களுக்கான வாழ்த்துகள்.

அந்த தாய்மை எப்போதும் வெல்லும்…. வெல்ல வேண்டும்…

Leave a Reply