கடகம் – gorge/ canyon
கடல் -sea
கயவாய் – estuary
கழிமுகம் – delta
கழியிடுக்கு- fjord
காடு – forest
கால் – canal
குகை – cave
குடாநிலம் – peninsula
குன்று – hill
குளம் – pond
கொதியஃகி- geyser
கொல்லி – plain
சதக்கல் – marsh
சதவல் – swamp
சமவெளி – plain
சாட்டுத்தேம் – prairie
சிந்து – snow
சிந்தெடார் – tundra
சுவல் – hillock
எக்கல்- dune
தீவு – island
தீவுக்கூட்டம் – archipelago
தொடுவாய்
களப்பு- lagoon
தொம்போலை – isthmus
நீரிணை – straight
பரிசில்குடா – cove
பேராழி – ocean
பொழை – stream
மலை – mountain
மிசைத்திட்டை – mesa
வற்புலம் – plateau
வளைகுடா – gulf
பரி – பாதுகாக்கை, சூழ்தல்
சில் – சிறியது
சாட்டுக்காணம்
cove – பரிசில்குடா – சூழ்ந்து பாதுகாக்கப்பட்ட சிறிய குடா
prairie – சாட்டுத்தேம் – சாட்டு + தேம்
சாட்டு – புற்றரை (முழுவதும் புற்றரையே)
தேம் – மணம், தேன், தேனீ, கள், இடம் , நாடு, ஈரம்
மிகப்பெரிய நிலப்பரப்பான அவ்விடத்தில் உள்ள புற்றரையில் மலரும் பூக்களில் தேனீக்கள் தேன்பருகும்; மேலும் அவ்விடத்தில் ஏராளமான பூக்களுள்ளதால் நல்ல நறுமணம் வரும். புற்றரையாதலால் எப்பொழுதும் ஈரப்பதம் காணப்படும்
(மொத்தப் பொருளையும் அடக்கி விட்டேன்!)
கடகம்: மலை, மலைப்பக்கம், ஆறு, பள்ளத்தாக்கு
மலைப்பாங்கான ஆறுகொண்ட இடத்தில் உள்ள பள்ளத்தாக்கு!
மிசை – உயரம், மேலிடம், மேடு
திட்டை – திண்ணை, மேடு
உயரமான திண்ணை வடிவம் கொண்ட மேடு போன்ற இடத்தில் உள்ள மேலிடம் (சமதரையான இடம்).
கொதியஃகி = கொதி + அஃகி – கொதியான சூடான மேல் நோக்கி பொங்கும் நீரூற்று
கொதி – கொதியான, சூடான
அஃகி – நீரூற்று
பொழை – stream – ஆற்றைவிடைச் சிறியது
ஓடை – brook – அதைவிடச் சிறியது
சிந்து – snow | நன்றி: இராமகி – குளிர்ச் சொற்கள்
சிந்தெடார் – சிந்து+எடார்
சிந்து – snow
எடார் – பரந்தவெளி, சமவெளி
ஆலிப்பாளம் – ஆலி + பாளம்
ஆலி – ice
அடவி – jungle (நன்றி: கவிஞர் மகுடேசுவரன்)
தொடுவாய் – எ.கா: கொக்குத்தொடுவாய் (முல்லைத்தீவு), (இதேபோல் மற்றொரு இடம் மன்னாரிலும் உண்டு, அதன் பெயர் மறந்துவிட்டது)
இந்த தொடுவாய் என்றால் நீரிணை அல்ல. இந்த தொடுவாய் என்பது என்னவென்ரால் தொண்டி போன்ற இடங்களில் அந்த வாய் போன்ற இரு நிலங்கள் முத்தம் கொடுக்க வர அதன் நடுப்பகுதியால் நீர் கிழித்து உள்நுழையும் பகுதியே தொடுவாய் எனப்படும்.
ஆலியாறு – ஆலி + ஆறு – glacier – ஆலி நிறைந்த ஆறு
கழியிடுக்கு- கழி + இடுக்கு (கழி ஓடும் இடுக்கு)
இடுக்கு – மலையிடுக்கு என்பதன் சுருக்கம் | பொருள்:கடகம்(gorge)
கழி – கடற்கழி என்பதன் சுருக்கம்
பொருள்: கடகத்தில்/மலையிடுக்கில் ஓடும் நீண்ட தொண்டி [கடற்கழி(inlet)]
சள் → சது → சதுப்பு;
சள் → சத + கால்- சதக்கால் → சதக்கல்
களப்பு – (lagoon) கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள கடலைவிட ஆழம் குறைந்த உவர் நீர்ப் பரப்பு களப்பு ஆகும்.
காயல்/ உப்பங்கழி – (Backwater) கடலிலிருந்து பிரிந்து, கடல் நீர் தேங்கியிருக்கும் மணல் மேடு.
கடற்கழி/ தொண்டி (inlet)- ஒரு கடற்கழி என்பது ஒரு கரையோரத்தின் உள்தள்ளல் ஆகும், இது பொதுவாக ஒரு சிறிய குடா அல்லது கை போன்ற நீளமான மற்றும் ஒடுங்கலானது ஆகும். இது பெரும்பாலும் தொண்டி, குடா அல்லது சதக்கல் போன்ற உப்பு நீர் கொண்ட நீர் நிலைக்கு இயவுகிறது.
கடற்கால் (firth)
கால் – channel (கால் என்னும் சொல் தமிழில் அமைந்துள்ள பொதுசொல்லாகும்.. இதனால் உருவான சொற்கள்:
வாய்க்கால் – தேக்கத்தில் இருக்கும் நீர் வெளியேறும் வழி வாய்க்கால் ஆகும். (வாய்-அகண்ட —> கால் -புறத்துறுப்பு)
கால்வாய் – தேக்கத்திற்கு நீர் கொண்டு வரும் வழி கால்வாய் ஆகும் . (கால் -புறத்துறுப்பு —> வாய்-அகண்ட)
கூடுதல் செய்திகள்:
மேலும் தமிழில் சொற்கள் அறிய
Snow, dew தொடர்பான தமிழ்க் கலைச்சொற்கள் யாவை?
கடல் என்னும் சொல்லுக்கான ஏனைய தமிழ்ச் சொற்கள்
பழந்தமிழகத்தில் தமிழர்களால் கட்டப்படிருந்த நீர்நிலைகள்
காடு என்னும் சொல்லைக் குறித்த ஏனைய தமிழ்ச் சொற்கள் யாவை?
மலை என்ற சொல்லுக்கு சரியான ஒத்தசொற்கள்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள்
உசாத்துணை:
செ.சொ.பே.மு.
இட விளக்கவியற் படங்கள் – நூல் – ஈழத்தீவு
ஆக்கம் & வெளியீடு
நன்னிச்சோழன்