(Plagiarism), உலகளாவிய ரீதியில் மோசடிக்காரர் பிரசுரிக்கும் போலி சஞ்சிகைகளில் பணம் கொடுத்து தனியாக (Sole Author) அல்லது பிறமோசடி ஆசிரியர்களுடன் சேர்ந்து இணைஆசிரியராக(Co-Author) கட்டுரை பிரசுரிப்பது (Publications in Predatory Journals), பிற கல்விமான்களுக்குஅல்லது தமது சகாக்களுக்கு பணம் கொடுத்து கட்டுரை எழுதி தமது பெயரில் பிரசுரிப்பது (Impersonation/Collusion) நிஐமான அறிவுசார் சஞ்சிகைகளினால் சக மதிப்பாய்வுக்கு (Peer Review) பின் பிரசுரிப்பதற்கு ஏற்றுகn; காள்ளப்பட்ட கட்டுரைகளில் பணம் கொடுத்து இணை ஆசிரியராக தம்மை இணைத்துக் கொள்வது தமது மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை (Dissertations) திருடி ஆசிரியர்கள் தமது பெயரில் தனியாக/சுயமாக அல்லது இணை ஆசிரியராக பிரசுரிப்பது அல்லது நேரில்/இணையவழியில் கருத்தரங்குகளில் பேசுவது (அறிவுச் சொத்துரிமை திருட்டு – Theft of Intellectual Property Rights),
மற்றும் தமது மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை (Dissertations) களவாடி தமது ஆய்வாக காண்பித்து அரசாங்கம் மாதாமாதம் பலக்லைக்கழக கல்விசார் மற்றும் நிறைவேற்று அதிகாரதர கல்விசாரா ஊழியருக்கு (Executive Grade non-Academic Staff) வழங்கிவரும் ஆராய்ச்சி கொடுப்பனவினை (Research Allowance) திருட்டுத்தனமாக பெற்றுக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டுவருவதாக அவர் நேரடியாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் கலநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் 2 பிறநாடுகளில் (இந்தியா மற்றும் பிரித்தானியா) நான்கு பலக்லைக்கழகங்களில்(முறையே டெல்கி, சல்போர்ட், பிரிஸ்டல், மற்றும் வேல்ஸ்) இளங்கலை மற்றும் முதுகலைக் கல்வியினை மேற்கொணடு பட்டம் பெற்ற ஒருவர்.
அத்தோடு, இரணடு பிறநாடுகளில் (அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா)இரண்டு பலக்லைக்கழகங்களில்(முறையே ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் மொனாஷ் பல்கலைக்கழகம்) முனைவர் பட்டப்படிப்பின் பின்னான (Post-Doctoral) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
முன்குறிப்பிடப்பட்ட கல்விசார் புலமைத்துவங்களுக்கு மேலாக, இற்றைவரை ஒட்டுமொத்தமாக 55 இற்கு மேலான சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிவார்ந்த வெளியீடுகளின் (சர்வதேச அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவுசார் இதழ்களில்/சஞ்சிகைகளில் கட்டுரைகள், புத்தகங்கள், மற்றும் புத்தகங்களில் அத்தியாயங்கள் என்பனவற்றின்) ஆசிரியரும் ஆவார்.
மேலும், இற்றைவரை, சர்வதேச அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவுசார் இதழ்களுக்கு ஆதாரங்களாக ஆதாரங்களாக, சஞ்சிகைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 35 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சக மதிப்பாய்வாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே நடைபெற்றுவருகின்ற அறிவுத் திருட்டுக்கள் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழக மொத்த கல்விசார் ஊழியர்களுள் பெரும்பான்மையோர் (அதாவது 50 சத வீதத்திற்கு மேற்பட்டோர்), குறிப்பாக சிரேஸ்ட பேராசிரியர்கள் (Senior Professors), பேராசிரியர்கள் ( Professors), சிரேஸ்ட விரிவுரையாளர்கள் (Senior Lecturers), மற்றும் விரிவுரையாளர்கள் (Lecturers) கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மோசடிகளாகும். மற்றும் இம் மோசடிகள் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் காலாகாலமாக இடம்பெற்றுவரும் மோசடிகளாகும் (குறிப்பாக ஸ்ரீ லங்கா பல்கலைக்கழக காலத்திலிருந்து – அதாவது 1972ஆண்டிலிருந்து இற்றைவரை) என்பதனை கூறிக்கொள்வது முகக்கியமானதாகும்.
இருந்த பொழுதிலும். ஒரு தனி நபரது அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் குற்றங்கள் இன்னொரு தனிநபரது அல்லது இன்னொரு பல்கலைக்கழகத்தின் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.
மேற்கூறப்பட்ட மோசடிகளில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் விகிதாசாரமானது பீடத்துக்கு பீடம் வேறுபடுகின்றது.
உதாரணத்திற்கு, இக்கட்டுரை ஆசிரியரின் கணிப்பின்படி, கலை, இந்துமத கற்கைகள், வணிகம், முகாமைத்துவம், மற்றும் விவசாயப் பீடங்களைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுள் 75 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்.
அதேவேளை, விஞ்ஞானம் மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்களுள் 65 சத வீதத்திற்கு மேற்பட்டோரே இவ்வாறான கல்வி மற்றும் அறிவுசார் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
முன்குறிப்பிடப்பட்ட விகிதாசாரங்கள் விவாதிக்கப்படக் கூடியதாக இருந்தாலும், பெரும்பான்மையான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (50%)மேற்குறிப்பிடப்பட்டமோசடிகளில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இவ் (பீடங்களுக்கு இடையேயான) வேறுபாட்டிற்கான காரணம் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்கள் ஏனைய/மற்றைய பீட ஆசிரியர்களை விட நேர்மையானவர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
மேற்குறிப்பிட்ட வேற்றுமையிற்கான பிரதான காரணம் விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு தமது ஆய்வுகளை பிரசுரிப்பதற்கு தரம்குன்றிய அறிவுசார் சஞ்சிகைகளாவது (உதாரணத்திற்கு விஞ்ஞானம்-VINGNAM மற்றும் இலங்கை மருத்தவசஞ்சிகை- Ceylon Medical Journal–இக்கருத்திற்கான ஆதாரங்களாக இருக்கையில் ஏனைய பீட ஆசிரியர்களுக்கு தரம் குன்றிய அறிவுசார் சஞ்சிகைகளாவது அரிதாகவே உள்ளன.
குறிப்பாக, கலை மற்றும் இந்துமத கற்கைகள் பீட ஆசிரியர்களுக்கு தமிழ் மொழி அறிவுசார் சஞ்சிகைகள் நாடளாவிய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் மிகவும் குறைவாகவே உள்ளது (ஏனெனில் பெரும்பான்மையோருக்கு ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதத் தெரியாது).
உதாரணத்திற்கு, இலங்கை மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்படுவனவற்றுள் 90% இற்கு மேற்பட்டவை ஒரு குறிப்பட்ட நோய் அல்லது நோயாளிகள் சம்பந்தமான எடுத்துக்காட்டு அறிக்கைகள்(Case Reports )அல்லது விபரணக் கட்டுரைகள் (Descriptive Studies).
தை 2000 இற்கும் மார்கழி 2009 இற்கும் இடைப்பட்ட 10 வருட காலத்தில் இலங்கையில் உள்ள மருத்தவ ஆய்வாளர்களினால் சர்வதேச மற்றும் உள்ளுர் அட்டவணைப் படுத்தப்பட்ட அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட 1,790 கட்டுரைகளுள், 35 வீதமானவை விபரணக் கட்டுரைகள் (Descriptive Studies), 20 வீதமானவை சஞ்சிகை ஆசிரியருக்கான கடிதங்கள் (Letters to Editors)இ மற்றும் 18வீதமானவை எடுத்துக்காட்டு அறிக்கைகள் (Case Reports).
மருத்துவத்துறையில், சஞ்சிகை ஆசிரியருக்கான கடிதங்கள் (Letters to Editors) பெறுமதி அற்றவையாக கருதப்படும் அதேவேளைஇ எடுத்துக்காட்டு அறிக்கைகள் (Case Reports) பெறுமதி மிகக் குறைந்ததாகவும், விபரணக் கட்டுரைகள் (Descriptive Studies) பெறுமதி குறைந்ததாகவும் கருதப்படுகிறது.
எழுமாற்றான கட்டுப்பாட்டுச் சோதனை (Randomized Controlled Trials – RCT) சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே மருத்துவத்துறையில் மிகவும் பெறுமதிமிகக்வையாக உலகளாவிய ரீதியில் கருதப்படுகிறது.
தரம் குறைந்த அறிவுசார் சஞ்சிகைகளை மோசடி சஞ்சிகைகள் எனக்கருத முடியாது ஏnனினில் அச்சஞ்சிகைகள் கட்டுரைகள் பிரசுரிப்பதற்கு பெரும்பாலும் பணம் அறவிடுவதில்லை.
இருப்பினும் அவை தரம் குறைந்த சஞ்சிகைகள் எனக் கருதப்படுவதற்கு காரணம் அவற்றுள் பிரசுரிக்கப்படும் கட்டுரைகள் முறையான/நிஐமான அல்லது கடுமையான சக மதிப்பாய்வுக்கு (Rigorous Peer Review)உட்படுத்தப்படுவதில்லை என்பதனால்தான்.
முறையான/நிஐமான அல்லது கடுமையான சகமதிப்பாய்வு என்பது எவ்வாறு அமையவேண்டும் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஐமான மற்றும் முறையான சக மதிப்பாய்வு என்பது ஒரு ஆய்வுக் கட்டுரையின் கருப்பொருளுக்கு அமைவான கருப்பொருளுடைய ஆய்வுகளை ஏற்கனவே மேற்கொணடு தராதரம் மிக்க அறிவுசார் சஞ்சிகைகளில் பிரசுரித்ததற்கான ஆதாரமுடைய கல்விமான்களைக் கொண்டு; சக மதிப்பாய்வு செய்வதாகும்.
இந்த சக மதிப்பாய்வாளர்கள் ஒரு கட்டுரை ஆசிரியரின் பல்கலைகக்கழகத்தை சாராத, அல்லது அக்கட்டுரை ஆசிரியருடன் ஆய்வுகளில் ஈடுபட்டிராத, அல்லது வேறு பரஸ்பர நலன்களில் முரண்பாடு (Mutual Conflict of Interests) இல்லாதவராக இருக்கவேண்டியது மிக மிக அத்தியாவசியமாகும்.
ஆரம்பக் கட்டமாக இங்கு இரண்டு மோசடிக்கார போலி (Quack) யாழ் பலக்லைகக்ழக ஆசிரியர்கள் அம்பலப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா (உபவேந்தர் மற்றும் கணித மற்றும் புள்ளிவிபரவியல் துறை ஆசிரியர்) மற்றும் செல்வரத்தினம் சந்திரசேகரம் (தற்போதைய பொருளியல் துறைத்தலைவர்) ஆவர்.
உபவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குனராசா பற்றியும் அவர் மீது கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் பற்றியும், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக அவர் தருகின்ற ஆதாரங்களையும் நாளைக்கு இந்தத் தளத்தில் வெளியிடுகின்றோம்.
பொருளியல் துறைத்தலைவர் செல்வரத்தினம் சந்திரசேகரம் பற்றி அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கூட, தொடர்ந்து இந்தத் தளத்தில் வெளியிடப்பட இருக்கின்றன.