இலங்கை முழுவதும் இம் முறை முக்கிய பொருளாதார முயற்சிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்த துறையாகவுள்ளது.
ஆனால் இதன் அண்மைக்கால போக்கு ஓர் சமூக,பொருளாதார மாபியாக மாறிவிட்ட தேற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக தனியார் கல்விநிலைய உரிமையாளர்கள் சமூக சிந்தனையை கருதாமல் ஓர் பந்தயக் குதிரையாக ஆசிரியர்களையும்,மாணவர்களையும் ஓர் பணத்தை அள்ளிவழங்கும் கற்பகதருவாக நோக்குவதை அவர்களின் விளம்பரங்கள் அமைவதைக் காணலாம்.
தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள GCE(O/L)பரீட்சை 5 மாதங்கள் தாமதித்து நடைபெற்றதுடன் கொரேனா காலத்திலும் online இல் ஒருமாத காலமாக தாமத்துடன் நடத்தப்பெற்றது.
இக்கால நீடிப்பை தமது வருமானத்தை உயர்த்தும் மேலதிக காலப்பகுதியாகவே நோக்கி 23/05/2023 வரை வகுப்பை நீடித்து தமது பணப்பையை நிரப்பிக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
தற்போது 10/06/2023 இதேமாணவர்களுக்கு 2025 AL வகுப்புக்கான விளம்பரம் சகல தனியார் கல்வி நிறுவனங்களும் வெளியிட்ட வண்ணமுள்ளனன.
ஆனால் GCE(O/L) பரீட்சை முடிவுகள் எப்போது வெளிவரும் என்பதற்கான அறிவித்தலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் எத்தனை மாணவரை தமது நிறுவனத்தில் இணைப்பது என்பதையே தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களின் இலக்காகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறன செயற்பாடுகள் தடைசெய்யப்பட வேண்டும்
உண்மையில் தற்போதைய பரீட்சை முறையானது மாணவர்களின் பிரயோக அறிவினை நோக்குவதை அறியக்கூடியதாகவுள்ளது
இவ்விலக்கினை அடைவதில் தனியார் கல்வி நிறுவனங்கள் சரியாக செயற்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகும்.
அத்துடன் இவை சமூக விரோத செயற்பாடுகளின் ஊற்றெடுக்கும் மைப்புள்ளியாக செயற்படுவதையும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.
மாணவரின் பெறுபேறுகள் எப்படி போனால் என்ன 1 மாணவனை இணைத்து 30 மாதங்களுக்கான 3 பாடத்தின் Admin இலாபத்தை உறுதிப்படுத்தலுக்கான போட்டி தடை செய்யப்பட வேண்டும்.
இவ்இடைப்பட்ட காலத்தை மாணவர் உளவளப்படுத்தல் செயற்பாடுகளை பாடசாலைகளும் பாடசாலை சமூகமும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் பிரயோக அறிவினை மேம்படுத்தவும் GCE(A/L)இல் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள துணைபுரியும்
தற்போதைய மாணவர் சமூக இணைப்பு செயற்பாடுகளுக்கு இக்காலத்தை பயன்படுத்த கல்வியமைச்சின் முறைசார கல்வித்துறை திட்டங்களை வகுக்க வேண்டும்.
முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களின் கூற்றுக்கமைவாக பாடசாலைகளில் இடம்பெறுகின்ற கற்பித்தல் முழுமையடைந்தால் தனியார் கல்வி நிலையங்கள் மெல்ல சாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தமது சம்பள உயர்வுக்காகவும் நன்மைகளுக்காகவும் மட்டும் போராடமல் மாணவர்களின் எதிர்காலத்தையும் சிந்திக்க ஆசிரியர்களின் தொழிற்சங்கம் முன்வர வேண்டும்.
ஏனெனில் தனியார் கல்விநிலைய உரிமையாளர்கள் பலர் ஆசிரியர்களாகவுள்ளதுடன்,
பலபாடசாலை ஆசிரியர்களே பிரபல ஆசிரியர்களாகவும் காணப்படுகின்றனர்.
அத்துடன் பாடசாலைகளும் தமது பேறுபேற்று அடைவுகளில் தனியார் கல்வி நிலையங்களிடம் சரணடைந்த அவல நிலையும் காணப்படுவதுடன் பாடசாலை நிர்வாகமும் தனியார் கல்வி நிலையங்களுக்கு துணைபுரிவதையும் அவதானிக்க முடியும்.
நாட்டின் சகல தனியார் நிலையங்களையும் கண்காணித்து கட்டுப்படுத்த தனியான முறைமை உருவாக்கப்படுவது அவசியமாகும்.
ஆக்கம் -நாயகம் மொன்ரினி