“இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையும் இணைந்து “ஆய்வரங்கம்” ஒன்றினை 2023.12.02 சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இது வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை அரங்கிலே நடைபெற்றது. இங்கு இடம் பெற்ற ஒவ்வொரு ஆய்வும் இருபது நிமிடங்களில் அமையப்பெற்றது.