(J P Josephine Baba)
சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்தால் துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போன்றே நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளை தேற்றும் இசையாக தொடர்கிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள் ஆதரவாக நம்மை பின் தொடர்கிறது.