சங்கம்புழாயின் கவிதைகளுக்கு பின்புலமாக ஒலிக்கும் இசை, கேரளா திருவாதிரைக்களிக்கு பாடப்படும் நாடடுப்புற இசையாகும். தொட்டிலில், என்னை பாட்டுபாடி ஆட்டி உறக்கிய நல்லம்மா – என் பாட்டியில் இருந்து தான் கவிதை ஞானம் கிடைத்தது எனக்கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இடைப்பள்ளியில் பெயர் பெற்ற பணக்காரக் குடும்பம். பணம் போனதும், புகழும் பெருமையும் சேர்ந்தே போய் விட்டது. கடைசியில் மிஞ்சினது அப்பா நோக்கிய வக்கீல் குமஸ்தா வேலை யட்டுமே. சங்கம்புழையின் 10 வது வயதில் அப்பா இறந்ததும் இவருடைய வாழ்க்கை தனிமையில் தள்ளப்பட்டு விட்டது.
ஒரே வீட்டில் இரு பெண்கள் அம்மா , பாட்டி கண்காணிப்பில் வளர்ந்த ஒரே ஒரு குழந்தை. இவர்களுடைய தலையிடல் பலபோதும் தனது இயல்பான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது.
கட்டுப்பாடுகள் சட்டங்களை மீற வைத்தது கவியை. சங்கம்புழா இயல்பாகவே கனவு ஜீவி. 10 வயதினிலே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.
உள்ளூரில் இடப்பள்ளி ராகவனும் இவரும் சேர்ந்து இலக்கியப்பணி பேச்சு என இலககியம் வளர்கின்றனர். ஷெல்லியும் கீட்ஸுமாக அறியப்பட்டவர்கள்.
கவியின் படிப்பு கடினமான வறுமை மற்றும் இலக்கியப்பணியால் தடை பட்டது. வேலைக்கு போய் பணத்தை சேகரிப்பார்.
காலம் ஓடுகிறது. துன்பங்கள் தனியா வருவது இல்லை தானே! காதல் உருவத்தில், பெண்களும் வந்து போய் கொண்டு இருக்கின்றனர். ஒரு பெண் உருகி நோக்கினால் நாலு வரியில் கவிதையாவது எழுதிக்கொடுக்காது பின் வாங்குவதில்லை. பல பெண்கள் இவர் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியதாக , இவருடைய கடிதம் பல பெண்கள் கைகளில் உண்டு என்கின்றனர்.
12 வகுப்பு மகாராஜாஸ் கல்லூரியில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்கு திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். கல்லூரியில் சேரும் போதே இவருக்கு 23 வயது ஆகி விட்டது. அந்நேரம் இரண்டு கவிதைத்தொகுப்பு வெளியிட்டு விட்டார்.கல்லூரியில் முதல் வருடம் மலையாளம் மொழி பாடத்திற்கு இவருடைய கவிதைத்தொகுப்பு இருந்துள்ளது.
கல்லூரியில் சேரும் போது ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சேர்ந்தாலும் அங்கும் இவரை ‘ உள்ளூர்’ என்ற பேராசிரியர் வடிவில் துன்பம் காத்திருந்தது. மற்று மாணவர்கள் இவர் கவிதையை படித்து 60 மதிப்பெண்க்கு மேல் எடுக்கும் போது கவிக்கு 40 க்கு மேல் மதிப்பெண் கிடைக்காதாம். கவி மலையாள இலக்கண தேர்விலும் வெற்றியடையவில்லை.
அந்த நேரம் இவருக்கு ஒரு காதலும் இருந்துள்ளது. இது இவர் தாயாருக்கு பிடிக்கவில்லை என்பதால் குடும்பப்பாங்கான ஸ்ரீ தேவியை கண்டு பிடித்து திருமணவும் முடித்து வைத்து விட்டனர். கவிக்கு கல்லூரிக்கு போக இயலாத சூழல். மறுபடியும் கல்லூரிக்கு போவதை நிறுத்தி விட்டார். எப்படியாகினும் தனது 27 வது வயதில் மூன்றாம் தரத்தில் பட்டம் பெற்று இருந்தால் “பேராசிரியர்” ஆசையும் மூட்டை கட்டி வைக்க வேண்டியதாக போச்சு.
பிழைப்பிற்கு தனியார் டுயுட்டோரியல் கல்லூரியில் கற்பிக்கிறார், பின்பு ராணுவத்தில் கணக்கராக சேருகிறார்.
அப்போது இவருடைய கவிதையின் ரசிகை, ஒரு மருத்துவரின் மனைவியின் நட்பு கிடைக்கிறது. அந்த பெண்மணி இவரை சட்டம் படிக்க திருவனந்தபுரம் செல்லக் கூறுகிறார்.
இதற்குள் இரண்டு மகன் இரண்டு மகள் என நாலு குழந்தைகள்.
சில சூழலால் சட்டப்படிப்பையும் இடையில் நிறுத்தி சொந்த ஊர் வந்து செல்கிறார். டைபாய்டு அதை தொடர்ந்து காசநோய் பிடித்து கொள்கிறது. 37 வது வயதில் விடை பெற்று விட்டார்.
இவருடைய பாதையை பின் தொடர்ந்து, மலையாள கவிதை உலகில் பாஸ்கரன், வயலார், வைலோப்பிள்ளி போன்றவர்கள் வந்தாலும் இன்னும் இவரை தாண்டி ஒரு கவிஞரும் கேரள மண்ணில் பிறக்கவில்லை.
நெஞ்சை உருக்கும் கவலை, பிரிவு, காதல் துயர் , வறுமை , இயற்கை, என இவர் எழுதின கவிதைகள் காலத்தை கடந்து வாசிப்பவர்களுக்கு இதமான உணர்வையும் ஆறுதலையும் தருகிறது.
ஒரு மயில் ஆடும் நடனம் போல, இதயத்தோடு அணைத்து சேர்த்து வைத்து பாடுவது போல உணர்வுகளை தந்து சங்கம்புழை கேரள மண்ணின் அடையாளமாக இப்போதும் எப்போதும் உள்ளார். ஒரு பெண்மையின் நளினம் கொண்ட வார்த்தைகளும் தாலாட்டு பாடும் பாட்டியின் குழைவும், பாசவும் கேரளாவின் நாட்டு பாடல்களின் மெட்டுஙளுடன் கேட்பவர்களை மயக்கி தன்னகத்திற்குள் வைத்து கொள்கிறது.
தனது நண்பன் இடப்பள்ளி ராகவன் பிள்ளையின் 27 வது வயதில் செய்து கொண்ட தற்கொலை ‘ ரமணன்’ என்ற ‘Master Piece’ கவிதையை உருவாக்க வழி செய்தது.
நண்பனின் நினைவாக அன்றைய தினம் எழுதிய கவிதை இதுவே.
##₹₹₹
ஆதரவற்ற உன் எரிந்த மனதுமாக நீ மறைந்தாய்
இனி கேட்க இயலாது மென்மையான மெல்லிய குரல்கள்
இன்றுவரை மலர்தோப்பில்
நாம் சேர்ந்து பறந்து பாடி
இப்பிடியென்னை
தனித்து விட்டுவிட்டு நீ
ஐயோ பறந்து ஒளிந்தாய்?