இந்தியா மற்றும் பிற நாடுகளில் 70 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுடன் இயங்கி வருகிறது. 1953 ஆம் ஆண்டு சுவாமி சின்மயானந்தா என்பவர் இந்த அறக் கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார். கேரளாவைச் சேர்ந்த இவருக்கு பின்பு சுவாமி தேஜோமயானந்தா என்பவர் தலைவராக உள்ளார். சின்மயானந்தா விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரும் ஆவார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கம் ஆகியோரின் நண்பர் ஆவார்.
N.மகாலிங்கம் ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் புரவலர் ஆக இருந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சின்மயானந்தா அமெரிக்காவில் வசித்து வந்தார். இவரின் சீடர் தயானந்த சரஸ்வதி.! சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தயானந்த சரஸ்வதியிடம் தான் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தனக்கு ஒரு வீடு வழங்குமாறு கேட்டார். இது குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பு ஆயிற்று.
சின்மயானந்தா பின்னர் மறைந்து விட்டார். தற்போது கோவை மாணவி தற்கொலை குறித்த விவகாரத்தில் அர்ஜுன் சம்பத் இந்தப் பள்ளிக்கு ஆதரவாக தலையிடுவதும் அந்த எஜமான விசுவாசத்தை ஒட்டித்தான். அதே போல வானதி சீனிவாசன் போன்ற பலரும் தலையிடுவது RSS – பாஜக சார்பு பள்ளி என்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு உள்ளது.
இவ்வளவு வலிமையான பின்புலம் கொண்ட பண வலிமை கொண்ட, சாதி பின்புலம் கொண்ட, அதிகார பின்புலம் கொண்ட ஒரு பள்ளி மீது காவல் துறையும் திமுக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாகிய நாம் RSS – பார்ப்பனிய பின்புலம் கொண்ட பள்ளி குறித்து விழிப்புணர்வு பெற்றுக் கொள்ள வேண்டும்.