இயற்கையாக இதற்கு எல்லா வகையிலும் எமக்கு உறுதுணையாக சக்தி வழங்குனராக இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் சூரியனை வணங்கி நிற்போம்.
இயற்கையை அனுசரித்து வாழுவோம்.
உழைப்பால் மனித குலத்தை எனைய உயிரினங்களை உயிர்புடன் வாழ்வதற்கான சேற்றில் கால் வைக்கும் உழைப்பாளி மக்களுக்கான அறுவடையிற்கான ஆனந்தக் கொண்டாட்டமான நாள் இது.
இதனை தமிழருக்கானது என்பதாக(மட்டும்) நாம் சுருக்கிக் கொள்ளாது மனித குலத்திற்கு பொதுவான அறுவடைய நாள் கொண்டாட்டமாக நாம் கொண்டாடுவதே சரியானது என்ற உணர்வலைகள் எனக்குள்ளும் உண்டு.
இயற்கையின் அடிப்படையில் அமைந்த கால நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வலயங்கள், நாடுகளுக்கு பிரதான அறுவடைய நாட்கள் வேறுபடலாம்… வேறுபடுகின்றன.
ஆனால் இந்த அறுவடைய நாள் உழவர் தினம் என்றான பொதுத் தன்மை ஒன்றாகவே இருக்கின்றது.
எனவே நாம் பிறந்து வளர்ந்த தாய் நாட்டின் காலச் சூழலுக்கு ஏற்ப தைத் தமிழ் திருநாள் முதலாம் திகதியை நாம் தைப் பொங்கலாக உழவர் தினமாக கொண்டாடி மகிழ்வோம்.
எமது பிள்ளைகளுக்கு தைப் பொங்கலின் மகிமைகளை எடுத்துரைத்து எமது வாழ்வியலின் பண்பாடுகளை வளர்த்தெடுப்போம்.
நமது தேசிய உணவுகளில் ஒன்றான அரிசியை… சிறுதானியங்களை மையப்படுத்திய பொங்கலை அது வெண் பொங்கலாக…. கரும்புப் பொங்கலாக… சக்கரைப் பொங்கலாக…. (தற்போது அதிகம் அதிகரித்து வரும்) கருப்பட்டிப் பொங்கலாக… இதனுடன் இணைந்து மோதகம், வடை என்றாக சமூகமாக, உறவாக, சகோதரத்துவமாக இணைந்து கொண்டாடுவோம்.
இதன் மூலம் அனைவருக்கும் உணவளிக்கும் பண்பாட்டுச் சமூகத்தை கட்டி எழுப்புவோம் என்று உறுதி எடுத்து அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்