தோழர் நல்லநாதர் R Rahavan என்ற தோழர் ஆர்ஆர் இன் திடீர் மரணம் நாம் எதிர்பார்க்காத இயற்கைதான்
யாழ் வெலிங்ரன் தியேட்டருக்கு முன்னால் அமைந்த சித்திரா அச்சகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட புதியபாதை சுந்தரத்துடன் இணைந்த அரசியல் செயற்பாடுகளை உடையவர்.
சுழிபுரத்தை பிறம்பிடமாக கொண்ட இவர் இடதுசாரிப் போராளி தோழர் சுப்பரமணியத்துடன் சுழிபுரம் பகுதிகளில் மிகவும் இளமையான காலத்தியேயே இடதுசாரி அரசியல் சித்தாந்தங்களை கற்றுணர்ந்தவர். இந்த தொடர்புகளை இன்றுவரையும் பேணுபவர்
ஈழவிடுதலைப் போராட்டம் பன்முகத் தன்மையுடன் அனைத்து இயக்கங்களும் வடக்கு கிழக்கு என்று தமிழ் பிரதேசம் எங்கும் வியாபித்திருந்த 1986 இறுதி வரையிலான காலப் பகுதியில் சில வேளைகளில் தோழர் ஆர்.ஆர்.(RR) ஐ சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கலாம்…. ஏன் சந்தித்தும் இருக்கலாம்.
திருகோணமலை பார்த்தன் சந்ததியார் போன்றவர்களுடன் இணைந்து காந்தீயத்துப் பண்ணணைகளின் இவரின் மக்கள் வேலை மறுக்க முடியாதவை.
மாலைதீவு சிறையில் இவர் அனுபவித்தி ஐந்து வருடங்கள் வாழ்கையில் ஏற்பட்ட இவரின் வாசிப்புகளால் தனிமைகளால் இன்னும் இவர் அதிகம் செழுமைப்படுத்தப்பட்டதாகவும் உணர முடிகின்றது
தனது இறுதிக்காலத்தில் சட்டத்துறையில் கற்றி கல்வியையும் முடித்திருந்தார்
2023 டிசம்பர் மாதம் தாயத்தில் நான் நின்ற போது தோழர் வரதராஜப்பெருமாள் என்னை அழைத்து “சுளிபுரத்தில் உள்ள சத்தியமனையிற்கு சென்று வர வேண்டும் என்னுடன் வரமுடியுமா….” ஏன்று அழைத்த போது….
நானும் ஏற்கனவே அங்கு போவது என்ற திட்டம் என்னிடமும் இருந்தபடியால் அவருடன் இணைந்து அங்கு சென்றேன்
அங்குதான் தற்செயலாக நாம் தோழர் இராகவன் சந்தித்தோம்.
மிக நீண்ட உரையாலை அது ஏற்படுத்தியிருந்தது
சுத்தியமனை தோழர் நடேசன் அது சார்ந்த செயற்பாட்டாளர்களுடனான உரையாடலில் இராகவன் பிரதான பங்கு வகித்தார்.
தனிப்பட்ட வாழ்விற்குள் மூழ்காமல் அதனைத் தவிர்த்த பொது வாழ்விற்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஒரு எளிய மனிதரை என்னால் அங்கு காண முடிந்தது
உரையாடல் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரையிலான் நிலமைகள் என்று விரிவடைதன.
இதற்குள் அதிகம் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் இடதுசாரிச் செயற்பாடு என்றவான கருத்தோட்டங்கள் அதிகம் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன.
இந்த கலந்துரையாடலில் அதிகம் தோழர் வரதர், தோழர் இராகவன், தோழர் நடேசன் இடையேயான கருத்தாடல்கள் பிரதானமாக இருந்த போது எனது பங்காக உரையாடலை அதிகம் உற்றுக் கேட்பதாக தகவமைத்துக் கொள்ள வைத்தது
அப்போதுதான் என்னால் உணர முடிந்தது தோழர் இராகவனின் நீண்ட நெடிய காலத்து ஈழ விடுதலையுடனான விடாப்பிடியான போராட்ட வரலாற்றை.
அது இன்றைய புளட் அமைப்பின் அரசியல் கட்சி(DPLF) வரை நீண்டும் இருந்தது
ஆனால் அவர் ஒரு குழு நிலை வாதத்திற்குள் தன்னை அடக்காமல் ஒடுக்காமல் ஒரு கருத்தியலுக்குள் உள்வாங்கப்பட்டு பொது நிலையில் இருப்பதை உணர முடிந்தது.
அதுதான் அவரையும் எம்மையும் அந்த உரையாடலின் போது இன்னும் நெருங்கவும் வைத்து.
அந்த கருத்தியல்தான் அவரையும் சத்தியமனையின் நம்பிக்கை உறுப்பினராக முழுநேரமாக அதில் ஈடுபட வைத்தாகவும் என்றால் உணரப்பட்டது
அது எம் மக்கள் மத்தியில் இடதுசாரிக் கருத்தியல் சமூக நீதியிற்கான குரல் ஜனசஞ்சரமாக அதிகம் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவைகள் அதிகம் உணரப்படும் காலத்தில் இதற்காக விடாப்பிடியாக செயற்படக் கூடிய… கருத்துகளை முன் வைக்கக் கூடிய…. ஒருவரை நாம் இழந்து நிற்கின்றோம் என்று இன்று அவரின் இழப்பின் பின்பு உணரவும் வைத்துள்ளது.
ஆற்ற வேண்டி பணிகள் நிறையவே உள்ளன என்ற போது தோழர் இராகவனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதாது என்றாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இடதுசாரிக் கருத்தியலை தமக்குள் கொண்டிருந்த பத்மநாபாவின் ஈபிஆர்எல்எவ் தோழர்கள், புளட் தோழர்கள், ஈரோஸ் தோழர்கள் தமக்கிடையே கருத்தியல் ரீதியில் ஐக்கியப் பட வேண்டி செய்திகளை இராகவன் போன்றவர்களின் இழப்பு அவசரப்படுத்தியும் இருக்கின்றது
போலித் தமிழ் தேசியம், குறும் தேசியம் என்று குண்டுச் சட்டியிற்குள் குதிரை ஓடிக் கொண்டு பலவாறு பிரிந்து நின்று கதிரைகளை தேடும் அரசியல் கட்சிகள் பொதுவெளியில் அதிகம் அறியப்பட்டதாக உள்ளது
இதன் மறுவளமாக இடதுசாரிக் கருத்தியல், சமூக நீதிக் கருத்தியல், விளிம்பு நிலை மக்களுக்கான உரிமைக் குரல், குரலற்றவர்களுக்கான் போராட்ட சித்தாந்தம் என்றாக மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் அரசியல் சித்தாந்தம் மக்கள் முன் அதிகம் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இதற்கான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதே நாம் தோழர் இராகவன் போன்றவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
இதில் சத்தியமனைகளும், முன்னாள் ஈழவிடுதலை அமைப்புகளில் இடதுசாரிகளாக செயற்பட்டவர்கள் தற்போதும் அக்கருத்தியல் அடிப்படையில் செயற்படுபவர்கள் அந்த சித்தாந்தங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இராகவனின் எதிர்பாராத இழப்புகள் என்றாக ஒவவொருவராக எம்மை விட்டு பிரிய முன்பு ஒரு பலமான வெகுஜன கருத்துருவாக்கத்தை உருவாக்கியாக வேண்டும்.
அதற்கான இடைவெளிகள் தற்போது அதிகம் உள்ளதை இராகவன் போன்றவர்களும் உணர்ந்திருப்பதாக அவர் தன் கருத்துரைகளில் கூறியதையும் நான் இங்கு கவனத்தில் எடுத்தே இதனை முன் வைக்கின்றேன்
அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியை அர்த்தமுள்ளதாக்க ஒரு இடதுசாரிக் கருத்தியலை வெகுஜனங்கள் மத்தியில் ஜனசஞ்சரமான கருத்தாக்கி இதன் அடிப்படையிலான ஐக்கிய முன்னணியை அமைப்பதே சரியானதாக இருக்கும் என்பதே எனது உணர்வாக இருக்கின்றது.
சமூக நீதியிற்கான அரசியல் வேலைகளை முன்னெடுத்து மக்களுக்கான பொது வேலைத்திட்டத்தில் ஐக்கியப்பட்டு இணைந்து தோழர் இராகவன் போன்றவர்களின் நீண்ட காலப் போராட்ட அர்ப்பணிப்பை அர்த்தம் உள்ளதாக்குவோம்