எடுத்துக்காட்டாக, மார்ச் 19 அன்று 91 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இவர் கையாளுவதற்காக 300 சுகாதார பொதுப் பணியாளர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் சமூகத்துடனான தடமறிதல் செயற்பாட்டில் ஈடுபட்டனர். நோயாளி பார்வையிட்ட வணிக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு பின்னர் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ் முழு செயல்முறையும் இரண்டு நாட்களுக்குள் நிறைவேற்றி 91 நோயாளிலிருந்து வைரஸ் பரவுவதைக் தடுப்பதில் ஒரு திடமான செயற்பாட்டை முழுமைப்படுத்தியிருந்தனர்.
வியட்நாமில் வெகுஜன தனிமைப்படுத்தலுக்கான முதல் நோய் தொற்றாளர் பிப்ரவரி 12 அன்று வின் ஃபுக் மாகாணத்தின் சோன் லோய் கம்யூனில் நடந்தது, அங்கு ஐந்து பாதிக்கப்பட்ட நோய் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சீனாவின் வுஹானில் இருந்து வீடு திரும்பிய ஏராளமான வியட்நாமிய தொழிலாளர்கள் வசிக்கும் கம்யூன் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது. மார்ச் 7 ம் தேதி, வியட்நாம் தனது விமான நிலையங்களில் அதன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. மேலும் தனிமைப்படுத்தல்கள் பின்பற்றப்பட்டன.
வியட்நாமின் கோவிட் -19 நடவடிக்கைகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட முதல் வடிவம் வீட்டுக் காவலில் வைத்தல் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட நோயாளி அடையாளம் காணப்பட்ட முழு சுற்றுப்புறங்களும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. இரண்டாவதாக வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வியட்நாமிற்கு வருபவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் அல்லது இராணுவத்தால் நடத்தப்படும் முகாம்கள் போன்ற அரசால் நிர்வகிக்கப்படும் இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த, குடிமக்கள் எளிதில் தகவல்களை அணுக ஆவன செய்யப்பட்டன. வியட்நாமில் மிகவும் பிரபலமான சமூக தளமான ஜாலோவில் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களின் இருப்பிடங்கள், வெகுஜன தனிமைப்படுத்தலின் பின்பு ஆபத்தான நிலையில் ஹனோய் நகரில் உள்ள பாக் மை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது.
மார்ச் 10 முதல் 27 வரை 40,000 க்கும் அதிகமான வெளிநாட்டில் இருந்து வியட்நாமிற்கு வருகை தந்திருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு 30 வரையிலான நோய் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலுக்காக, சிகிச்சையளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேகத்திற்கிடமான தொற்றுநோய்களின் கடுமையான கண்காணிப்பு:
வியட்நாமில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இனம் காணுவதில் உறுதிப்படுத்துவதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. கோவிட் – 19 இன் சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள்; மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் போன்ற விபரங்கள் வியட்நாமின் அரசாங்கத்திற்கு உடனடியாக கிடைக்கக் கூடிய வகையில் தரவுகளை ஒரு இணைய தரவுத்தளத்தில் பதிவிடுவதற்குரிய செயற்பாட்டை அரசு, தகவல் பரிமாற்ற வல்லுனர்கள் இணைந்து செயற்படுத்தியிருந்தனர்.
கூடுதலாக, தகவல் தொடர்பு அமைச்சகம் (எம்.ஐ.சி) ஒரு மொபைல் பயன்பாட்டை(Apps) அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் சாதாண குடிமக்கள் தங்கள் சுகாதார நிலையை தினசரி அடிப்படையில் அறிவிக்க அனுமதி அளித்தது. பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளர்களை கண்டறிய ஸ்மார்ட் சிட்டி என்ற மொபைல் பயன்பாட்டையும் அரசு அறிமுகப்படுத்தியது.
நோயாளிகள் தங்கள் தொலைபேசிகளில் இந்த பயன்பாட்டை(Apps) நிறுவ வேண்டும், இந்த தொலைபேசிகள் எழுப்பும் ஒலி நோயாளி தனிமைப்படுதப்பட்ட பகுதியிலிருந்து 20 தொடக்கம் 30 மீற்றர் தொலைவில் இருந்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறியக் கூடியவகையில் உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் நோயாளிகளை இலகுவாக இனம் கண்டு நோயாளிகளின் செய்பாட்டை அவதானிக்கவும், உதவிகளையும் வழங்குவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தன.
இந்த இரண்டு பயன்பாடு(Apps)களின் மூலம் சேகரிக்கப்பட்ட துல்லியமான மற்றும் உடனடித் தரவுகள் வைரஸ் பரம்பலுக்கான கண்டறிவதற்கு அரசாங்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆயினும்கூட, தொழில்நுட்பத்தின் பயன்பாடு தரவு, தனியுரிமை மற்றும் வெகுஜன கண்காணிப்பு பற்றிய கவலைகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமல் இல்லை.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அடையாளங்கள் சமூக ஊடக தளங்களில் கசிந்துள்ளன. இது தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பதில் வியட்நாம் அரசு எதிர் நோக்கிய பிரச்சனைகளாகும்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க வியட்நாம் அரசாங்கம் தவறிவிட்டாலும், வியட்நாம் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தே வருகின்றனர், மேலும் கண்காணிப்பு பயன்பாடு(Apps)களைப் பயன்படுத்துவதையும் ஆதரித்து நின்றனர். அத்துடன் கை கழுவுதல், மற்றும் பொது சுகாதாரத்தை பேணுதல், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கான நிதி வழங்கல் போன்ற பிரச்சாரங்களுக்கு மக்கள் தமது முழு ஆதரவை வழங்கிய வண்ணம் இருந்தனர்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி,
வியட்நாமியர்களில் 62 சதவீதமானோர் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதில்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி தமது திருப்தியை தெரிவித்துள்ளனர். கூடவே
17 சதவீதமானவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை
என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
(மிகுதி நாளை தொடரும்….)