ஆனால் இன்று எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்கிறேன்..
யுவன் இஸ்லாத்தை ஏற்றதை கொண்டாடும் நாம் நம்மை சுற்றி எத்தனையோ பட்டியலின மக்கள் சமத்துவத்தை வேண்டி,சகோதரத்துவத்தை வேண்டி விரும்பி இஸ்லாத்தை எற்றிருக்கிறார்கள்.. அவர்களை கொண்டாடுங்கள் என்று நான் ஒருபோதும் உங்களை கேட்க போவதில்லை..
தயவு செய்து அவர்கள் வீட்டுக்கு பெண் கொடுங்கள், அவர்கள் வீட்டிலிருந்து பெண் எடுங்கள்..
இஸ்லாத்தில் எல்லோரும் சமம்தானே..?
நீங்கள் விரும்பியோ ,விரும்பாமலோ.. முஸ்லிம்களிடையே மதம் மாறியவர்கள், பரம்பரை முஸ்லிம்கள் என இரு பிரிவினரை உருவாக்கி வருகிறீர்கள்..
பிறர் இதை வைத்து சமூகத்தை இழிபடுத்த கூடாது என எண்ணியதாலே நான் சமூக ஊடகத்தில் இதை பேச விரும்பயதில்லை.. ஆனால் நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள் எனக்கு முழு உரிமை இருக்கிறது யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.. இஸ்லாத்துக்கு மாற்றமாக முஸ்லிம்களில் பலர் செயல்படும் பொழுது நான் அதை எடுத்துரைப்பதில் தவறு இல்லை என நினைக்கிறேன்..
சிலர் விதிவிலக்காக திருமண சம்பந்தம் செய்துகொள்கிறார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை விரும்புவதில்லை.. மார்க்கம் மிக தெளிவாக இருப்பதால் வணக்க வழிபாடு,சம உரிமை,சகோதரத்தும் என எல்லாமே கிடைத்துவிடுகிறது.. சாதி இழிநிலையும் ஒழிந்து விடுகிறது ஆனால் திருமணத்துக்கு பெண்,மாப்பிள்ளை மட்டும் கிடைக்காது என்றால் நீங்கள் எந்த மாதிரியான இஸ்லாத்தை பின்பற்றுகிறீர்கள்..
90களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டமாக இஸ்லாத்தை நோக் வந்த பட்டியலின மக்கள் இப்போது ஏன் அவ்வாறு வருவதில்லை? சாதி ஒழிந்துவிட்டதா என்ன? சாதியும் சாதியின் பெயரால் ஆன அடக்குமுறையும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது ஆனால் பிறகு ஏன் அவர்கள் முன்புபோல் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வரவில்லை..
ஏற்கனவே முஸ்லிமாக மதம் மாறியவர்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்கூடாக பார்க்கிறார்கள் .. தன் பிள்ளைக்கு திருமணத்துக்கு வரன் கிடைக்காது திரும்பியும் இந்த சமூகத்தில் இருந்துதான் யாரையாவது முஸ்லிமாக மாற்றி திருமணம் செய்ய வேண்டியிருக்கும் என அப்படியே இருந்துவிடுகிறார்கள்.. சிலர் முர்தத் ஆகி வெளியேறியும் விடுகிறார்கள் அதற்கு அவர்கள் ஈமான் பிரச்சனை என நீங்கள் நினைத்தால் நான் சொல்வேன் அதற்கு நீங்களும் காரணம் அவன் முஸ்லிமாக தொடர உங்களுடைய மனப்பான்மை தடையாக இருக்கிறது..
புதிதாக இஸ்லாத்தை ஏற்று ஒருவன் வந்துவிட்டாவ் ஏதோ அவன் உங்களை நாடி உங்கள் தயவை நாடி வந்தவன் போ ல Superiority complexஉடன் நடந்து அவ னை தாழ்வு மனப்பான்மையிலே சாகும் வரை விட்டுவிடுகிறீர்கள்..எல்லோராலும இதனை Survive செய்து மேல் எழ முடியாது..
இன்னமும் நிறைய இருக்கிறது திருமணம் சம்பந்தம் என்கிற ஒற்றை பிரச்சனையை பற்றி மட்டுமே இங்கு உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன்..முஸ்லிம்களாக மதம் மாறிவர்களின் அடிப்படை சிக்கல்களை திரட்டினால் ஒரு புத்தகமாகவே என்னால் எழுத முடியும்.
ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சாதிய அடக்குமுறை காரணமாக மதம் மாற முடிவு செய்தவர்கள் முதலில் தேர்வு செய்தது இஸ்லாத்தை அல்ல.. அவர்கள் கிறித்துவ மதத்தைத்தான் தேர்வு செய்தார்கள் ஆனால் அங்கு SC Christian, நாடார் கிறிஸ்டின்,உடையார் கிறிஸ்டின் என சாதியும் தொடர்வதாலே அவர்கள் இது வேண்டாம் சாதி அறவே ஒழியும் இஸ்லாம் தான் வேண்டும் என பிறகு தேர்ந்தெடுத்தனர்.
தற்போது
மார்க்கம் தெரியாத பெரும்பாலான முஸ்லிம்களின் மனப்பான்மையால் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வர தயங்குகிறார்கள் அதற்கு முழுக்காரணம் நீங்கள்தான்…என உங்களை எச்சரிக்கிறேன்.
பட்டியலின மக்கள் மட்டுமில்லை மற்ற சாதி பிரிவினருக்கும் அதே நிலைதான்..
ஒரு வேளை யுவன் ஒரு பிரபலம் இல்லையென்றால் அவர் கொண்டாடப்பட மாட்டார் என்பதை தாண்டி அவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காது என்பதே இங்கு புலம்ப காரணம்.