25 நெடும் சாலைகளுக்கு ஏற்றமரங்கள்வருமாறு .புளி, இலுப்பை, புன்னை, வேம்பு , புங்கு , அரசு , பாலை , மருது, நாவல் , பெருநெல்லி , அத்தி , இத்தி , குருந்து , இலந்தை , விளா, கூழா , கல்தேக்கு (நாட்டு வாதுமை ) ,கரும்காலி, மஞ்சவெண்ணா, வாகை, இலவு, கொன்றை ,கொக்கட்டி , குருந்தம்
26 ஆலயங்களுக்கு ஏற்ற மரங்கள்
அரசு ,வேம்பு , புன்னை, வன்னி, வில்வை, விளாத்தி, மகிழ் , கடம்பு , இலுப்பை , இத்தி , அத்தி, பலாசு, கொன்றை ,திருவாத்தி , மந்தாரை , பவளமல்லிகை
27 மயானங்களுக்கு
ஆல் , அரசு , வேம்பு , வாகை
28 நன்நீர் தேங்கும் இடங்கள்
மருது ,இலுப்பை , நாவல் , பூவரசு
29 சதுப்பு நிலங்கள்
பூவரசு , கண்ணா போன்ற கண்டல் தாவரங்கள் .
30 வல்லை வெளி , கோப்பாய் கைதடி வீதி போன்ற இரு பக்கங்களும் உப்பாறு உள்ள இடங்களில் பூவரசு தாழை போன்றவற்றை நாட்டினால் கோடை காலத்தில் உப்பு மண் வீதிக்கு கொண்டுவரல் தடுக்கப்படும்
31 மணல் பாங்கான இடங்கள்
ஆத்தி, பூவரசு, பனை , வேம்பு , நாட்டுவாதுமை
32 மின்சா கம்பிகள் மேலாக செல்லும் வீதிகளில் நாம் நடும் மரத்தை மின்சார சபையினர் வருடாவருடம் ஈவிரக்கமின்றி வெடித்தள்ளுவார்கள் . அவ்விடங்களில் அதிக உயரம் வளராத செவ்வரளி, தேமா , யாம்மரம் ( சிலர் செரி என்பார்கள் ) என்பற்றை நடலாம்
33 தோட்ட நிலங்களுக்கு அருகாமையில் நாம் பாரிய மரங்களை நடும்போது மரங்களின் நிழலும் வேர்களும் தோட்ட செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . (பாடள்ளுதல் )
இங்கு பூவரசு, ஒதி ,தேமா , யாம்மரம், வாதநாராயணன் என்பவற்றை நடலாம்.
34 நகரத்தின் மையத்தில் மிகுந்த இட நெருக்கடியாய் இருக்கும் .இவ்விடங்களில் மயில்கொன்றை ,தேமா , யாம்மரம் போன்றவற்றை நடலாம்
35 பாடசாலைகளில்
நாவல் ,விளா, மா , வேம்பு, அரிநெல்லி , நெல்லி, யம்பு போன்ற மாணவர்கள் உண்ண கனிகொடுக்கும் மரங்களை நடலாம்
கீழே உள்ளது எனது இரண்டாவது மகன் பிறந்தபோது எமது ஆலய வீதியில் வைக்கப்பட்ட அரசமரம் .இம் மரம் அவரை கொழும்பு பல்கலைக்கழக Computer science துறைக்கு அனுப்பி வைத்துள்ளது
மிகுதி நாளை