(Thulanchanan Viveganandarajah)

கடந்த மாதம் இலங்கை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்பட்ட “மல்வத்து ஓயாவைத் தேடி” (மல்வத்து ஒய சொய) என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் இரண்டாவது நீளமான ஆறான மல்வத்து ஓயாவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சிங்கள – ஆங்கில இருமொழி ஆவணப்படம் அது.