யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள் | ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் மைக்கல் பாங்ஸ் ஆய்வு குறித்த ஓர் அறிமுகம்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டிக் கல்லூரியின் மாணவராக இருந்த போது மைக்கல் பாங்ஸ் (Michael Banks) 1950களின் முற்பகுதியில் கள ஆய்வு வேலைக்காக யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற்கான களப்பணியில் ஒரு வருடம் சிறுப்பிட்டி என்ற கிராமத்திலும் ஆறுமாதங்கள் கிளிநொச்சியிலும் செலவிட்டார். யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு (The social organization of Jaffna Tamils) என்னும் பெயரில் இவரது கலாநிதிப் பட்டப்படிப்பிற்கான ஆய்வினை 1957இல் சமர்ப்பித்தார். இவ்வாய்வேடு நூலாகப் பிரசுரிக்கப்படவில்லை.