(Asif Meeran)

ஈடு இணையற்ற ஆட்டக்காரன் என்று நிரூபிக்கப்பட்ட மெஸ்ஸியை, “இனி நீ ஆடவே வேண்டாம்” என்று அர்ஜெண்டினா நாட்டவர்களே குரல் கொடுத்த காலமும் இருந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான்உண்மை. இந்த ‘லியோ’ வின் பாதை ரோஜாப்பூக்களால் மட்டுமே நிரம்பியதில்லை. இனி கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் ( 2014) ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போன வடுவிலிருந்து மெஸ்ஸி மீண்டு வரும் வாய்ப்புகள் இல்லாமலாகிப் போய் விட்டதென்றே கால்பந்தாட்ட நிபுணர்களால் கணிக்கப்பட்டது.