யாழ்ப்பாணம் ஒரு தீபகற்பப் பகுதியாகும், அதே நேரம் கிளிநொச்சி மாவட்டம், முக்கியமாக நிலப்பகுதியைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எதிர்காலம் பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் கனிம வளங்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சார்ந்துள்ளது. இப்பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு, நிலத்தடி நீர் மேலாண்மை, மண் அரிப்பை தடுத்தல் மற்றும் காடுகளை பாதுகாத்தல், கனிம வளங்களை பொருளாதார ரீதியில் நீடித்து நிலைக்கக்கூடிய முறையில் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டங்களில் கிடைக்கும் கனிம வளங்கள், பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியமானவை. இவற்றை நீடித்து நிலைக்கக்கூடிய முறையில் பயன்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலை பாதிக்காத முறைகள் பின்பற்றப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட சுரங்கம், மறுசுழற்சி மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவை, இப்பகுதியின் கனிம வளங்களை பயன்படுத்துவதற்கு முக்கியமானவை. இதனால், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் ஒருங்கிணைக்க முடியும். இப்பிரதேசம் வளமான இயற்கை வளங்களுடன் கூடியதாகும். குறிப்பாக, கனிம வளங்கள் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. முக்கியமாக, இங்கு களிமண் (Clay), மணல் (Sand), சுண்ணாம்புக்கல் (Limestone), போன்ற கனிமங்கள் பெருமளவிலும் இரும்பு தாது (Iron Ore), பாக்சைட் (Bauxite), மக்னசைட் (Magnesite), குவார்ட்ஸ் (Quartz), சிறிய அளவிலும் கிரானைட் (Granite), பாஸ்பேட் (Phosphate) ஓரளவும் காணப்படுகின்றனI. களிமண் (Clay): இங்கு களிமண் அதிக அளவில் கிடைக்கிறது. பல்வேறு வகையான களிமண் வகைகள் காணப்படுகின்றன. இந்த களிமண் மட்பாண்டங்கள், செங்கல் தயாரிப்பு மற்றும் சிமெண்ட் தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, காளிமண் (Kaolin Clay) எனப்படும் உயர்தர களிமண் இங்கு கிடைக்கிறது, இது முக்கியமாக மட்பாண்டங்கள், செராமிக் பொருட்கள் வண்ணப்பூச்சுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. II. மணல் (Sand): இப்பகுதிகள் அதன் இயற்கை வளங்கள், குறிப்பாக மணல் வளங்களுக்கு பெயர் பெற்றவை. மணல் நதிப் பாயலில் இருந்து பெறப்படும் மணல் (River Sand), கடற்கரையில் கிடைக்கும் கடல் மணல் (Marine Sand), மணல் தோட்டங்களில் கிடைக்கும் மணல் (Sand Dunes) என்ன வகைப்படுத்தலாம். இப்ப பகுதியில் கடற்கரைப் பகுதிகளில் மணல் மிகுதியாகக் காணப்படுகிறது. இந்த மணல் சிலிக்கா மணல் (Silica Sand) எனப்படும், இது கண்ணாடி தயாரிப்பு, கட்டுமானப் பொருட்களாக கான்கிரீட் மற்றும் சாலை கட்டுமானத்தின் பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிலிக்கா மணல் உயர் தரமானது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நிலையில் கிடைக்கிறது. மணல் என்பது கட்டுமானத் துறைக்கு மிகவும் முக்கியமான ஒரு மூலப்பொருளாகும். இருப்பினும், சமீப காலங்களில் இந்த மாவட்டங்களில் மணல் அகழ்வு கட்டுப்பாடற்ற முறையில் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கட்டுப்பாடற்ற அகழ்வு: சட்டபூர்வமான அனுமதி இல்லாமல், கட்டுப்பாடற்ற முறையில் மணல் அகழப்படுகிறது. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு: மணல் அகழ்வினால் ஆறுகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இது நீர்வளத்தை குறைக்கிறது. நிலச்சரிவு: மணல் அகழ்வினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.கட்டுப்பாடற்ற மணல் அகழ்வின் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவுகள்:1. மணல் அகழ்வினால் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் அடித்தளம் பாதிக்கப்படுகிறது.2. நீர்வளம் குறைவதால், உள்ளூர் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவது கடினமாகிறது.3. நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு ஏற்படுகிறது.4. சமூக மற்றும் பொருளாதார பாதிப்பு:5. மணல் அகழ்வினால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.6. கட்டுமானத் துறைக்கு மணல் கிடைக்காத நிலை ஏற்படுகிறது, இது பொருளாதாரத்தை பாதிக்கிறது.சட்டபூர்வமான பிரச்சினைகள்:1. மணல் அகழ்வுக்கான சட்டபூர்வமான அனுமதி இல்லாமல், கட்டுப்பாடற்ற முறையில் அகழ்வு நடைபெறுகிறது.2. சட்டத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி, சிலர் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர்.தீர்வுக்கான சட்டபூர்வமான கட்டுப்பாடுகள்:1. மணல் அகழ்வுக்கான சட்டங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.2. அனுமதியின்றி மணல் அகழ்வு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 3. அதிகாரப்பூர்வமான அனுமதிகள் மூலம் மட்டுமே மணல் எடுப்பதை கட்டுப்படுத்தல். 4. அதிகப்படியான மணல் அகழ்வை தடுக்க, அரசு மற்றும் தனியார் சமூக அமைப்புகளின் கண்காணித்தல்சுற்றுச்சூழல் பாதுகாப்பு:1. மணல் அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.2. மணல் அகழ்வுக்கு முன், சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Environmental Impact Assessment – EIA) தயாரிக்கப்பட வேண்டும்.மாற்று வளங்கள்:1. கட்டுமானத் துறைக்கு மணலுக்கு பதிலாக மாற்று வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2. மணலை மறுசுழற்சி செய்வதன் மூலம், அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.சமூகப் பொறுப்பு:1. உள்ளூர் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மணல் அகழ்வு நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மணல் அகழ்வு கட்டுப்பாடற்ற முறையில் நடைபெறுவது, சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க, சட்டபூர்வமான கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மாற்று வளங்களின் பயன்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படுத்தும் வகையில் உறுதி செய்யலாம்.III. சுண்ணாம்புக்கல் (Limestone): இப்பகுதி அதன் புவியியல் அமைப்பு, குறிப்பாக அதன் நிலப்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை, சுண்ணாம்புக்கல்லின் இருப்புக்கு ஏற்றதாக உள்ளது. சுண்ணாம்புக்கல் என்பது படிவுப் பாறைகளில் காணப்படும் ஒரு கனிமம் ஆகும், இது முக்கியமாக கால்சியம் கார்பனேட் (CaCO₃) அடங்கியதாகும். இங்கு சுண்ணாம்புக்கல் கண்டாவளை, சாவகச்சேரி மற்றும் சுண்டிக்குளம், பொன்னாவெளி, நல்லூர் மற்றும் தெல்லிப்பழை பகுதியில் சுண்ணாம்புக்கல் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கிறது. சுண்ணாம்புக்கல் ஒரு மென்மையான, வெண்மை நிறத்தில் காணப்படும் கனிமம் ஆகும். இது நீரில் கரையாதது, அமிலத்துடன் வினைபுரிந்து கார்பன் டைஆக்சைடை வெளியிடும், வெப்பத்தைத் தாங்கும் திறன், ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது சுண்ணாம்புக்கல்லின் பயன்பாடுகள்:கட்டுமானத் துறை: சுண்ணாம்புக்கல் சிமெண்ட் தயாரிப்பில் முக்கியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அவசியமானது.வேளாண்மை: சுண்ணாம்புக்கல் மண்ணின் அமிலத்தன்மையை சமன் செய்யும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாக மாற்றுகிறது.தொழில்துறை பயன்பாடுகள்: சுண்ணாம்புக்கல் கண்ணாடி, எஃகு மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.இருப்பினும், இதன் நிலையான பயன்பாடு மற்றும் மேலாண்மை மிகவும் முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான அகழ்வு மற்றும் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் வளங்களின் வீணாவிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இங்கு சுண்ணாம்புக்கல் அகழ்வு முக்கியமாக கைத்தொழில்முறையில் நடைபெறுகிறது. இருப்பினும், இது சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மண் அரிப்பு: சுண்ணாம்புக்கல் அகழ்வனால் மண் அரிப்பு ஏற்படுகிறது, இது நிலத்தின் வளத்தைக் குறைக்கிறது.நீர் மாசுபாடு: சுண்ணாம்புக்கல் அகழ்வு நீர்நிலைகள் மாசுபடுகின்றன, இது உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.வாழ்வாதார பாதிப்பு: சுண்ணாம்புக்கல் அகழ்வு உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது, குறிப்பாக வேளாண்மை மற்றும் மீன்பிடித் தொழில்களில். வட இலங்கையில் சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் அதன் விளைவுகள்:வட இலங்கையில் தற்போது அனுமதியுடன் சுண்ணாம்புக்கல் அகழ்வு நடைபெறுவதாகக் கூறினால், அது நமது எதிர்கால சந்ததியினருக்கு கடல் நீரை நிலத்திற்குள் வரவேற்று, நீர்வளத்தை அழிக்கும் செயலாகும். அரசாங்க அனுமதி என்பது புவியியல் அடிப்படை ஆய்வுகளுடன் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும்.யாழ்ப்பாணத்தின் நீர்வள அமைப்பு:யாழ்ப்பாணம் கடலால் சூழப்பட்ட பிரதேசமாக இருந்தாலும், இங்கு நன்னீர் வளம் காணப்படுவதற்கு அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே காரணமாகும். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரியல் அமைப்பு (Groundwater System) நீரை சேமித்து வைக்கும் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஆங்கிலத்தில் Aquifer என்றும், தமிழில் நீர்கொள் படுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்கொள் படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்கள் அல்லது கிரவல் மணல் போன்ற நுண்ணிய துகள்களால் ஆனது. இவை புவியியல் நிபுணர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் காணப்படும் நீர்கொள் படுக்கைகளை, C.R. Panabokke என்ற நீரியல் அறிவியலாளர் ஆறு வகைகளாக வகைப்படுத்தியுள்ளார். இந்த ஆறு வகைகளில், யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்கொள் படுக்கை மிகவும் தனித்துவமானது. இது Shallow Karstic Aquifer (ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்கொள் படுக்கை) என்று அழைக்கப்படுகிறது.யாழ்ப்பாண குடாநாட்டின் நிலத்தடி அமைப்பு Miocene Limestone (மியோசின் சுண்ணாம்புக்கல் பாறைகள்) எனப்படும் சுண்ணாம்புக்கல் பாறைகளால் ஆனது. இந்த பாறைகள் இடையே Karsts (துவாரங்கள்) எனப்படும் துளைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் சராசரி ஆழம் 100 மீட்டர் வரை இருக்கும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் வளம் நிலைத்து நிற்கிறது. உதாரணமாக, “நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கிணற்றில் கிடைக்கும்” என்ற ஊர்வழக்கு, இந்த நீரியல் அமைப்பின் தனித்துவத்தை விளக்குகிறது. சுண்ணாம்புக்கல் அகழ்வின் விளைவுகள்:இந்த சுண்ணாம்புக்கல் பாறைகள் அனுமதியுடன் உடைக்கப்படுவதால், கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து, நீர்வளத்தை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. ஏற்கனவே எண்ணெய்க் கழிவுகள், வேளாண்மை இரசாயனங்கள் போன்றவற்றால் மாசடைந்துள்ள யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர், கடல் நீரால் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது நீர்வளத்தை முழுமையாக அழித்துவிடும்.சுண்ணாம்புக்கல் அகழ்வு என்பது யாழ்ப்பாணத்தின் நீர்வளத்தை அழிக்கும் ஒரு முக்கியமான சிக்கலாகும். இந்த செயல்பாடு கடல் நீரை நிலத்தடி நீரில் கலக்க வழிவகுத்து, நீர்வளத்தை மாசுபடுத்தும். எனவே, இந்த அகழ்வு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வை நோக்கலாம்.சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்தல்: சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அமைக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.சூழலியல் பிரச்சினைகள் மற்றும் சட்டபூர்வ தீர்வுகள்:சூழலியல் பிரச்சினைகளை சட்டபூர்வமாக தீர்வு காண்பது மிகவும் சிக்கலான ஒரு செயல்முறையாகும். சரியான சட்டங்கள் மற்றும் அவற்றை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் ஒரு முறையான அமைப்பு இருந்தால், பல பிரச்சினைகள் தோன்றாமலேயே தடுக்கப்படும். ஆனால், இலங்கையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன, மேலும் தவறான செயல்களை சரியானவை என நியாயப்படுத்தும் சில வழக்கறிஞர்கள், சட்டத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர்.யாழ்ப்பாணத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வு:யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, சுண்ணாம்புக்கல் அகழ்வு என்பது ஒரு ஆதரிக்கத்தக்க அல்லது அனுமதிக்கத்தக்க பொருளாதார திட்டமாக இல்லை. இதன் சூழலியல் தாக்கம் மிகப்பெரியது. கவனக்குறைவான அகழ்வு முறைகள், முழு நிலப்பரப்பையும் உவர்ப்பு நிலமாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த அகழ்வுகள் நிலத்தடி நீர்ப்பகுதிகள் (Groundwater Zones) அல்லது நன்னீர் லென்ஸ் (Freshwater Lens – FWZ) பாதிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் எந்தவொரு முறையான அமைப்பும் இல்லை.இங்கு, நிலத்தடி நீரியல் அமைப்பு முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, மேலும் அதற்கேற்ற சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகள், செலவுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. முறையான சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Environmental Impact Assessment – EIA) இந்த திட்டத்தில் இல்லை. நிலத்தடி நீர் மாசுபடுகிறதா என்பதைக் கண்காணிக்கும் எந்தவொரு பொறிமுறையும் இல்லை.அகழ்வு மற்றும் பாதுகாப்பு முறைகள்:அகழ்வு நடைபெறும் இடத்திற்கும், கிணறுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற முக்கியமான நீர்வள மூலங்களுக்கும் இடையே Buffer Zones (தடுப்பு மண்டலங்கள்) உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. மேலும், அகழ்வு முடிந்த பின்னர் சுரங்க மூடுதல் மற்றும் மறுசீரமைப்புத் திட்டம் (Mine Closure and Restoration Plan) இருக்கிறதா என்பதும் தெளிவாக இல்லை. இவை அனைத்தும் இருந்தால்தான், இது ஒரு முறையான மற்றும் அனுமதிக்கப்பட்ட அகழ்வு எனக் கருதப்படும்.அரசாங்க அனுமதி மற்றும் பொறுப்பின்மை:இவை அனைத்தும் இல்லாமல், ஒரு அரச அதிகாரி “ஏதோ ஒரு காரணத்திற்காக” கையொப்பமிட்டு அனுமதி வழங்குகிறார். பின்னர், “எங்களிடம் அனுமதி உள்ளது” என்று இதற்கு ஆதரவாக, சமூகப் பொறுப்பற்ற சில வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இறுதியில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை விளைவிக்கும்.இந்த பிரச்சினையின் ஆழத்தையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு, அறிவார்ந்த உரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். புதிய சட்ட திருத்தங்களைச் செய்வதற்கு, சமூகப் பொறுப்புள்ள சட்டவியலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். இந்த இயற்கை வளங்கள் நமது எதிர்கால சந்ததியினருக்காகப் பேணப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நிலையான பயன்பாட்டிற்கான முன்மொழிவுகள்:தொடரும்…..