வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களை விடவும், சமையலுக்கான பொருட்களைப் பாதுகாக்கவேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடுமெனப் பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் பசியைப் போக்குவது மிகவும் முக்கியமானது. அந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் உணவு உற்பத்திக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவது விவசாயிகள் மற்றும் சாமானியர்களின் கடமையாக இருக்கும். நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக 2024 இல் 250 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை ஒருபோதும் போதாது. ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை எண்ணிப் பார்க்கும்போது, அந்த உண்மை உறுதியாகிறது.
இவ்வருடம் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 22 மில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பிற்காக 250 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தை ஒரு மாதம் பராமரிக்க ரூ. 120,000 செலவிடப்படும் என புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, ஒரு நபரின் காலை உணவுக்கான சராசரி செலவு 300 ரூபாய். மதிய உணவும் இரவு உணவும் தலா 350 ரூபாய். அப்போது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு உணவு செலவு 1,000 ரூபாய். ஒரு நபருக்கு மாதம் உணவு செலவு 30 ஆயிரம் ரூபாயாகும். இவ்வளவு பணத்தைச் செலவழிக்கும் ஒருவர் எப்படி மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், குழந்தைகளின் பாடசாலைச் செலவு, போக்குவரத்துச் செலவுகளை ஈடுகட்ட முடியும்? அந்தத் தரவுகளின்படி, இலங்கை சனத்தொகையில் 20 சதவீதமானவர்கள் இன்னமும் மாத வருமானமாக 17,500 ரூபாய் பெறுகின்றனர்.
இதன்படி, நாட்டின் சனத்தொகையில் 25 வீசததமானவர்களுக்கு, அதாவது 5.7 மில்லியன் மக்களுக்கு இந்த ஆண்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும்? இந்தப் பின்னணியில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு 75 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
நாட்டின் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. நாட்டின் 1.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள முதல் பத்து நாடுகளில் நாம் இப்போது இருப்பது மிகவும் வருத்தமான நிலை.
நீர்த்தேக்கங்களில் விழுந்த நீர் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுமா அல்லது விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுமா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால், அடுத்த புதிய பருவத்தில் நெல் விளைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போதுவாக, ஆண்டு நெல் அறுவடையில் முப்பத்தைந்து சதவீதம் புதிய பருவத்தில் கிடைக்கும்.
அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாகக் கடந்த 2023/24 பருவத்தில் பயிரிடப்பட்ட நிலத்தில் பத்து சதவீதம் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்தனர். இதனால் அரிசி விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளது. அடுத்த புதிய பருவத்தில் நெல் அறுவடை குறைக்கப்பட்டால், அரிசியின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம்.