“கீழ்வெண்மணி”

(டிசம்பர் 25 , 1968)
வர்க்கப் புரட்சியின் அடையாளம்
சொந்த நிலத்தையும்
சொந்த நலத்தையும்
ஆண்டைகளிடம் பறிகொடுத்தது …

சாட்டையடிக்கும்
சாணிப்பாலுக்கும்
சொந்தமாய் இருந்த
பூவிரியும் காவிரியின்
ஆற்றங்கரையினில்
கூனி குறுகிய
எம் மக்களை…..

அடித்தால் திறுப்பி அடி
என ….. நம்பிக்கை ஊட்டி
உற்ற தோழனாய்
படைதிரட்டி
தலைநமிர வைத்த வரலாறு

மரக்காலில் சோறு வாங்காதே
வாழைமட்டையில தண்ணீர் குடிக்காதே
துண்டை தோளில் போடு
செருப்பை காலில் போடு
என …. தன்மானத்தையும்
சுயமரியாதையையும்
வளர்தெடுத்த வீரவரலாறு
படிப்பும்
சுயமரியாதையும்
சமமாக வேண்டும்
உழைப்பிற்கு ஊதியம் கொடு
அரைப்படி நெல் கூலி அதிகம் கொடு
என …. தொழிலாளிப்படையின்
வீரத்தளபதிகளாய்
ராமய்யாவின் குடிசையில்
44 உயிர்கள் சாம்பலாகி
வர்க்க போராட்டத்தை
கற்றுக்கொடுத்த ….
வரலாறு
எறிதழளோடு
என்றும் நாங்கள்
உங்களின் அடிச்சுவட்டில் இருந்து
தீயாய்
வெண்மணி தீயாய்
புறப்படுவோம
வர்க்க புரட்சியின்
தளபதிகளாக ..