அருங்கலைகள், கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில்,
தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசயைின்படி, திங்கட்கிழமை (18), அகழ்வுப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் எனினும், அகழ்வு பணியில், யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ, யாழ். பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைகளத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையோ உள்வாங்காமல் ஆரம்பித்தமை, வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி எனும்போது, அதில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும் என்றும் எனவே, யாழ். பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும் யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.