தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, முத்திரை ஒட்டி அடையாள அட்டை தயாரிக்கும்போது அறவிடப்படும் கட்டணம், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு,, தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, 250 ரூபாய் கட்டணமாக அறவிடப்படவுள்ளதாகவும் காணாமல்போன தேசிய அடையாள அட்டைக்கான புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபாய் கட்டணமும் அறவிடப்படவுள்ளது.
இந்தக் கட்டணங்களை, கிராம சேவகர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் செலுத்தி, அதற்கான கட்டண பற்றுச்சீட்டை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தில் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.