- TIN என்னும் Taxpayer Identification Number என்பது 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், சங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பதிவதற்கான இறுதி திகதி- 2024 பெப்பிரவரி 1ம் திகதி.
- TIN இலக்கம் எடுக்காதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படாது. ஆனால் வங்கியினூடாக நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு அதி உச்ச (36%) வரி போட்டு விடுவார்கள். இதுதான் பல நாடுகளில் வழமை.
- தனி நபர்களுக்கான வரிச்சலுகை Rs1.2 million/Year வரை. (TIN இருந்தால் மாத்திரம்).
- வெளிநாட்டில் இருந்து உள்நாட்டு வங்கிக்கு நேரடியாக அனுப்பப்படும் நிதிக்கு வரி இல்லை. ஆனால் உள் நாட்டில் இருந்து அல்லது உண்டியல்/ஹவாலா மூலம் அனுப்பப்படும் நிதிக்கு அல்லது நன்கொடைக்கு வரி உண்டு.
- வெளி நாட்டு பணமென்றாலும் அதன் வட்டி Rs1.2 million/Year இற்கு கூடுமென்றால் வட்டிக்கு மாத்திரம் வரி உண்டு.
- NGO அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு இருந்து வந்த வரிச்சலுகை 2022 ஆம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது. தற்போது இது 30 % ஆக உள்ளது. அவர்களும் தமக்கான TIN இலக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
TIN ஐ எவ்வாறு Online ல பதிவு செய்வதற்கான Link https://eservices.ird.gov.lk/…/TINReg…/ShowRequestHeader
-Kumaravelu Ganesan-