பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உதவி வழங்கும் நாடுகளில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே முன்னணியில் இருக்கின்றது என்றார்.
இரண்டு ஹெக்டேயருக்கும் குறைவான காணியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள விவசாயக்கடன் இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், மாற்று சிந்தனையில் யோசிப்போம்.
நம் நாடு இப்போது செயலிழந்த கணனி போன்றுள்ளது. அதனை மறுசீரமைக்க வேண்டும். அது இயங்கத் தேவையானவற்றை பொருத்துவதற்கு முன்னர், அதனை மறுசீரமைக்க வேண்டும். அதனையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இன்றேல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.