இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டின் மிகவும் தீர்மானமிக்க சூழல், புதிய பிரதமரின் ஆட்சிக்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் பெருபான்மை சமூகத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போன்றே, சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்பதே, தங்களது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூவின மக்களுக்கு இடையேயும் சமாதானம் நிலவும் இலங்கையைக் கட்டியெழுப்புவார் என்பது தங்களது எதிர்பார்ப்பு என்றும் புதிய பிரதமர் ஊடாகக் கிடைத்த இந்த வெற்றியில், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் பங்காளிகளாக இருந்து அவரது கரத்தைப் பலப்படுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.