
பங்களாதேசில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினார். பங்களாதேசின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5ஆம் திகதி தன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, அந்நாட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார்.