அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாமின் சடலத்தை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போனார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் இவர் அமெரிக்காவின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.